Browsing: விந்தன்

விந்தன் சிறுகதைகள் – 42

மாடும் மனிதனும் மயிலைக் காளைகள் இரண்டுக்கும் கோமாரி என்று கேள்விப்பட்டதிலிருந்து மன்னார்குடி மாணிக்கம் பிள்ளையின் மனம் சரியாகவே இல்லை. பொழுது விடிந்ததும் மாட்டு வைத்தியரை அழைத்துக் கொண்டு வந்து, அவற்றுக்கு வேண்டிய சிகிச்சையை அளிக்குமாறு பணித்துவிட்டு வெளியே வந்தார். பத்துப் பன்னிரண்டு பேர் அவருடைய வரவை எதிர்பார்த்து வாசலில் காத்துக் கொண்டு இருந்தனர். “என்னடா பயல்களா, என்ன சேதி?” “பத்து நாளாப் பட்டினிங்க; பண்ணையிலே ஏதாச்சும்…… “வேலைதானே? அதற்குத்தான் இங்கே ஏகப்பட்ட ஆட்கள் இருக்கேடா!’’ “முனியனுக்கு மூணு…

விந்தன் சிறுகதைகள் – 41

அன்பும் அருளும் எங்கள் கடைவாயிலில் தினசரி ‘மல்லு’க்காக வந்து மல்லுக்கு நிற்பவர்களில் அந்த ஏழை சிறுமியும் ஒருத்தி, வயது ஏழெட்டுத்தான் இருக்கும். பெயர் என்னவோ, தெரியவில்லை. நானும் அவளை நாலைந்து நாட்களாகப் பார்த்துக் கொண்டு வருகிறேன்; ஒரு நாளாவது அவளால் எங்கள் கடையிலிருந்து மல் வாங்க முடிவதில்லை. காரணம் ‘க்யூ’ வரிசையில் அவள் கடைசியில் நிற்க நேர்ந்து விடுவதுதான்! அவள் என்னமோ ஒவ்வொரு நாளும் முன்னால் நிற்கப் பிரயத்தனம் செய்துதான் வந்தாள்; முடிந்தால்தானே? ஆடை அலங்காரங்களில் பார்ப்பதற்கு…

விந்தன் சிறுகதைகள் – 40

நேற்று வந்தவள் அன்று என் சகோதரி லலிதாவிடமிருந்து எனக்கொரு கடிதம் வந்தது. அந்தக் கடிதம் எங்களுடைய தாம்பத்ய வாழ்க்கையில் அத்தகைய புயலைக் கிளப்பிவிடும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. லலிதாவும் அந்தக் கடிதத்தில் அப்படி யொன்றும் எழுதியிருக்கவில்லை. என்னையும், மன்னியையும் பார்க்க அவளுக்கு ஒரே ஆவலாயிருப்பதாயும் அதனால் என் வீட்டுக்கு வந்து பத்துநாட்கள் தங்கியிருக்கப் போவதாகவுந்தான் எழுதி யிருந்தாள்- அடேயப்பா! எத்தனை வருடங்களுக்குப் பிறகு அவளுக்கு இந்த ஆவல் தோன்றியிருக்கிறது! வரவே வருகிறாள்-இன்றோ அல்லது நேற்றோ வந்திருக்கக்…

விந்தன் சிறுகதைகள் – 39

மறுமணம் அவள் போய் விட்டாள்-எவள் போய்விட்டாள்? தன்னைப் பெற்று வளர்த்த பெற்றோரை உயிருடன் மறந்து, “இனி நீயே கதி! என்று மணப்பந்தலில் பந்து மித்திரர்களுக்கு முன்னால் என் கரத்தை எவள், தன் மலர்க்கரத்தால் பற்றினாளோ, அவள்; வீடு, வாசல் ஒன்று ஏற்படுத்தி, ஏகாங்கியாக எங்கும் போகவிடாமல் எவள் என்னைத் தடுத்தாட் கொண்டாளோ, அவள்; எனக்கு நோய் நொடி வந்த போதெல்லாம் தனக்கே வந்து விட்டதாக நினைத்து அல்லும் பகலும் என் அருகிலேயே இருந்து எவள் எனக்குச் சேவை…

விந்தன் சிறுகதைகள் – 38

திருடனுக்கு விடுதலை! ”அப்பா!” என்றான் பையன். “ஏண்டா, ராஜீ?’’ என்றார் அப்பா. ”பொங்கல் அப்பா…” “பொங்கல்தானே?.. நாளைக்கு நம்ம வீட்டிலே பண்ணச் சொன்னால் போச்சு; உனக்கு சர்க்கரைப் பொங்கல் வேணுமா; சாதாப் பொங்கல் வேணுமா?’’ ஊ ஹும்…அது இல்லேப்பா, பொங்கலுக்கு…. பொங்கலுக்கு….” ‘’ஓஹோ,பொங்கலுக்கா?…. என்ன வேணும் உனக்கு?” ‘புஷ்-கோட், அப்பா!” “இவ்வளவுதானே? தைத்து விட்டால் போச்சு. எங்கே தங்கச்சி……?” “இதோ, வந்துட்டேன்!” “உனக்கு ஒன்னும் வேணாமாம்மா?” ‘“எனக்கா?……எனக்கு எனக்குப் பட்டுப்பாவாடை, பட்டு ஜாக்கெட்டு, அப்பாலே அப்பாலே.. .எனக்கு…

விந்தன் சிறுகதைகள் – 37

மிஸ் நளாயினி-1950 …யார் வீட்டுக் கல்யாணப் பத்திரிகையைப் பார்த்தாலும் சரி, ‘’ராஜா!’’ என்று தம் மகனை உடனே அழைத்து விடுவார் ரங்கநாதம்-அன்றும் அப்படித்தான் நடந்தது. ‘’ராஜா!’’ “ஏன் அப்பா!” “எதிர்வீட்டு ராதையைப் பார்த்தாயா?” ‘இதென்ன அப்பா! உங்களுக்கு வேறு வேலை ஒன்று மில்லையா? எப்போது பார்த்தாலும் இவளைப் பார்த்தாயா, அவளைப் பார்த்தாயா என்று என்னைக் கேட்டுக் கொண்டே. இருப்பதுதானா வேலை?” “அதற்கில்லை ராஜா……!’ “எதற்கில்லை?” “அந்தப் பெண் பொழுது விடிந்து எத்தனை தரம் நம் வீட்டுக்கு வந்து…

விந்தன் சிறுகதைகள் – 36

வேதாந்தம் …..கறார் கருப்பையா அன்றும் வழக்கம் போல் சர்க்காரைத் திட்டிக்கொண்டே படுக்கையை விட்டு எழுந்தார். “என்ன சர்க்கார் வேண்டிக் கிடக்கிறது? சுதந்திர சர்க்காராம், சுதந்திர சர்க்கார்; தேசம் சுதந்திரம் அடைந்தால் மட்டும் போதுமா? தூங்குவதற்குச் சுதந்திரம் வேண்டாமா? இத்தனை மணிக்குத்தான் கடையைத் திறக்க வேண்டும், இத்தனை மணிக்குத்தான் கடையை மூட வேண்டும், இன்ன கிழமைதான் கடைக்கு வார விடுமுறை விடவேண்டும் இதெல்லாம் என்ன திட்டம், என்ன சட்டம்? இதுவா வியாபாரத்திற்கு அழகு? இதுதான் போகட்டும் என்றால் மனிதனை…

1 2 3 11