Browsing: prestation

துயரத்தின் புதிய ரெசிபி!

ஆம், இன்று துயரத்தின் நாள்கம்பீரமாய் அமர்ந்திருக்கிறது சிம்மாசனத்தில்இதயமோ அதன்முன் மண்டியிட்டுவைரம்போல் சுடரும் கண்ணீர்த்துளிகளைகப்பம் கட்டிக்கொண்டிருக்கிறதுசுண்டக்காய்ச்சிய துயரத்தை என் குவளையில்மீள மீள நிறைத்துக்கொண்டிருக்கிறதொரு பாடல்கால்கள் பின்னும் போதையிலும்அடுத்த குவளைக்கு நீள்கிறதென் கைதுயரத்தின் அருங்காட்சியகத்துக்குஎவ்வளவு தூரமெனக் கேட்டேன்உன் கருவறை வாசலுக்கும்கல்லறைச் சுவருக்குமான தூரமெனஅசரீரி எழுகிறதுயாசகம் கேட்டுவந்தது பெருந்துயரம்மிச்சமின்றி அப்படியேஇதயத்தை அள்ளிப்போட்டுவிட்டேன்அவள் மட்டும் என்னைக் கட்டித்தழுவி முத்தமிட்டுக்காட்டித்தராமல் போயிருந்தால்கடைசிவரை துயரத்துக்குஎன்னை அடையாளம்தெரியாமலே போயிருந்திருக்கும்நெடுந்தொலைவு பயணித்து வந்திருந்தது துயரம்புழுதியகல அதன் பாதங்களை அலசிவிட்டேன்என் ஆடைகளில் சிறந்ததை அணியத் தந்தேன்என் கஞ்சியில் பாதியை பகிர்ந்துகொண்டேன்என்…