Browsing: priyanka ghandhi

ஹத்ராஸ்க்கு நடைபயணமாக சென்ற ராகுல்காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ்க்கு நடைபயணமாக சென்ற ராகுல்காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது பூதாகரமாகி வரும் சூழலில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று நேரில் செல்வதாக அறிவித்தனர். அதன்படி அவர்கள் தங்களது வாகனத்தில் ஹத்ராஸ் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது போலீஸார் அவர்களது வாகனத்தை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அவர்கள் யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலை வழியாக நடந்தே செல்வதாக முடிவெடுத்து தொண்டர்களுடன்…

பிரியங்கா காந்திகட்சி தலைமை பற்றி கூறியது பற்றி காங்கிரஸ் விளக்கம்

நேரு குடும்பத்தை சாராதவர் காங்கிரஸ் தலைவராக வரவேண்டும்’ என பிரியங்கா காந்தி அளித்த பேட்டி ஓராண்டுக்கு முந்தையது’ என காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. ‘நாளைய இந்தியா அடுத்த தலைமுறை அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடல்’ என்ற புத்தகம் தற்போது வெளியாகி உள்ளது. அதில் காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா அளித்த பேட்டி ஒன்று இடம் பெற்றுள்ளது. அதில், ‘நேரு குடும்பத்தை சாராத ஒருவர் கட்சி தலைவராக வரவேண்டும் என்ற ராகுலின் கருத்தை ஆதரிக்கிறேன். காங்கிரஸ் தனது தனித்துவமான…

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பிரியங்கா காந்தி கடிதம்

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து  உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான வசதிகளை அதிகரிக்கவும், மாநிலத்தில் தொற்றுநோய் பரவாமல் கட்டுப்படுத்தவும் வழிவகுக்கமாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.