Browsing: producer

மறைந்த தயாரிப்பாளர் கே.பாலு குடும்பத்திற்கு உதவும் நடிகர் விஷால்

சமீபத்தில் கொரானா என்னும் கொடிய நோயால் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார் பாஞ்சாலங்குறிச்சி. சின்னத்தம்பி உட்பட நிறைய வெற்றிப் படங்களைத் தயாரித்த கே.பி.பிலிம்ஸ் பாலு.அவர், விஷாலை வைத்துப் படம் தயாரிக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில் திடீரென மறைந்துவிட்டார். தனது உடல் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த, சந்திக்கும் நண்பர்களுக்கெல்லாம் ஆரோக்கியமான உணவுகள் பற்றி விவரித்து மற்றவர்களின் உடல் நலனுக்குக் காரணமாக இருந்த கே.பாலு மறைவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தத் திடீர் துயரத்தை அறிந்த நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில்…

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் முறைகேடு குறித்து விளக்கம் கேட்கும் T .ராஜேந்தர்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020 – 2021ஆம் காலத்துக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தடுப்பதற்கான தேர்தல் கடந்த 22.11.2020 அன்று சென்னையில் நடைபெற்றது 1303 வாக்காளர்களில் 1050 பேர் வாக்களித்திருந்தனர் ராமசாமி@முரளி தலைமையில் ஒரு அணியும், T.ராஜேந்தர் தலைமையில் ஒர் அணியும் போட்டியிட்டனர்இவர்களை தவிர தலைவர் பதவிக்கு P.L.தேனப்பன், பொருளாளர் பதவிக்கு JSK சதீஷ், துணை தலைவர் பதவிக்கு R.சிங்காரவடிவேலன், கதிரேசன் ஆகியோர் போட்டியிட்டனர். தலைவராக ராமசாமி@முரளி, செயலாளர்களாக R.ராதாகிருஷ்ணன், .T .மன்னன், துணை தலைவர்களாக கதிரேசன்,…

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவுகள் வெளியானது

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நேற்று (22-11-2020) எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற்றது. சங்கத் தலைவர் பதவிக்கு டி ராஜேந்தர், ராமசாமி (எ) முரளி, பிஎல் தேனப்பன் ஆகியோர் போட்டியிட்டனர். துணைத் தலைவர் பதவிக்கு கதிரேசன், மதியழகன், முருகன், செல்வகுமார் PT, சிங்காரவேலன், சிவசக்தி SD பாண்டியன் ஆர்கே சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர் நேற்று நடைபெற்ற தேர்தலில், மொத்தம் 1304 வாக்குகளில் 1050 வாக்குகள் மட்டுமே…

டி.ராஜேந்தர் போட்டியிடுவது வருந்தத் தக்கது – ராதாகிருஷ்ணன் பேட்டி…

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் முரளி தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இவ்விரண்டைத் தவிர இன்னும் சிலரும் போட்டியிடுகின்றனர். தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி என்கிற பெயரில் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி போட்டியிடுகிறது. ஏற்கனவேசங்கத்தின் செயலாளர், மற்றும் பொருளாளர் பதவி வகித்தவர் ராதாகிருஷ்ணன் கடந்த 20 வருடங்களாக குறைந்த பட்ஜெட் படத்தயாரிப்பாளர்களின் குரலாக செயல்பட்டு வருபவர்…

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சொந்த கட்டிடம்- ராமசாமி முரளி பேட்டி

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் ராமசாமிமுரளி தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இவ்விரண்டைத் தவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு P.L.தேனப்பன், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஓயாத அலைகள் அணி, முன்னேற்ற அணி சார்பில் பலர்போட்டியிட்டாலும் தேர்தல் களத்தில்” தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி” மட்டுமே தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. இந்த அணியின் சார்பில் தலைவர்…

திருடா திருடி படத்தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் மாரடைப்பால் திடீர் மரணம்!

விக்ரம் நடித்த கிங், தனுஷ் நடித்த திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், சிம்பு நடித்த மன்மதன், துஷ்யந்த் நடித்த மச்சி, விவேக் நடித்த சொல்லி அடிப்பேன் போன்ற படங்களை தயாரித்தவர் எஸ் கே கிருஷ்ணகாந்த். லட்சுமி மூவி மேக்கர் நிறுவனத்தில் பல வெற்றிப்படங்களில் மேனேஜராக பணியாற்றியுள்ளார். தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தனுஷுக்கு திரையுலக பயணத்தில் வெற்றி படமாக இவர் கொடுத்த திருடா திருடி திரைப்படம் தனுஷ் ரசிகர்களுக்கு ஆல்டைம் பேவரைட். பல…

சூரரைப் போற்று தயாரிப்பாளர் சூர்யாவுக்கு லாபம் 28 கோடி?

சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் என்கிற அறிவிப்பு ஆகஸ்ட் 22 அன்று வெளியானது. அப்போதிருந்து திரையுலகில் பெரும் பரபரப்பு, விவாதங்கள் நிலவி வருகிறது. சூர்யாவின் இந்த முடிவுக்கு விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் இப்படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிடுவதால் எந்தச் சிக்கலும் இல்லாமல் சுமார் முப்பது கோடி இலாபம் சம்பாதித்திருக்கிறார் சூர்யா என்று சொல்லப்படுகிறது. இதுபற்றி திரையுலகில் கூறப்படும் கணக்கு….. சூரரைப்போற்று படத்தை தமிழ் தெலுங்கு…