Browsing: Production

பாரதிராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் – சினிமா தயாரிப்பாளர்கள் கண்டனம்

தற்போது படங்கள் தயாரித்து வரும் தயாரிப்பாளர்கள் ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளனர்.இச்சங்கத்தின் தலைவராக பாரதிராஜா செயலாளராக டி.சிவா பொருளாளராக டி.ஜி.தியாகராஜன் உட்பட இதன் நிர்வாகிகள் அனைவருமே போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அலுவலகத் திறப்பு விழா சென்னையில் இன்று (செப்டம்பர் 14) நடைபெற்றது. இதில் பாரதிராஜா, டி.சிவா, தியாகராஜன், எஸ்.ஆர்.பிரபு, தனஞ்செயன், சுரேஷ் காமாட்சி, லலித்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதனைத்…

தொலைகாட்சியில் நேரடியாக வெளியாகும் சுந்தர்.சி படம்

கன்னடத்தில் வெளியான படம் மாயாபஜார் 2016. ராஜ் பி.ஷெட்டி, வசிஸ்டா சிம்ஹா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படம் வெற்றியைப் பெற்றது. 2016 ஆம் ஆண்டு நடந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட திரைக்கதையை மையமாக கொண்ட படம் மாயா பஜார் அதைத் தமிழில் எடுத்துக் கொண்டிருக்கிறார் சுந்தர்.சி. அவர் தயாரிக்க பத்ரி இயக்குகிறார். யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது படத்தை நேரடியாக சன் தொலைக்காட்சியில்…

ஏவிஎம் தயாரிக்கும் இணையத் தொடர்

தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் திரைப்பட நிறுவனம் ஏவிஎம். கடந்த பல ஆண்டுகளாக திரைப்படத் தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்தது. 2011 ஆம் ஆண்டு விதார்த் நடித்த முதல் இடம் எனும் திரைப்படத்தைத் தயாரித்திருந்தது. அதன்பின் 2014 இல் இதுவும் கடந்து போகும் எனும் படத்தைத் தயாரித்து நேரடியாக யூடியூபில் வெளியிட்டது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனம் இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கவிருக்கிறது. ஆனால் திரைப்படம் தயாரிக்காமல் திரைப்படங்களுக்கு இணையாக ஓர் இணையதளத் தொடரைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். ஏவிஎம்மின் நான்காம்…