Browsing: protest

கேதார்நாத் கோயிலுக்குள் தங்கத் தகடுகள்: பூதம்போல் கிளம்பிய எதிர்ப்புகள்

கேதார்நாத் கோவிலின் கருவறையில் தற்போது 230 கிலோ எடையில் வெள்ளி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இங்கு தங்கத் தகடுகள் பொருத்திக் கொடுக்க மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் முன்வந்துள்ளார். இது தொடர்பாக பத்ரிநாத் – கேதார்நாத் கோயில் கமிட்டி அதிகாரிகள் கூறியதாவது: கேதார்நாத் கோயிலின் கருவறையில் கடந்த 2017-ம் ஆண்டு வெள்ளி தகடுகள் பொருத்தப்பட்டன. இங்கு தங்க தகடுகள் பொருத்தி தர மும்பை வைர வியாபாரி ஒருவர் முன்வந்துள்ளார். அவர் தனது பெயரை பொதுவில் தெரிவிக்க விரும்பவில்லை.…

சேற்றில் அங்கப்பிரதட்ஷனம் செய்தவரால் ஏற்பட்ட பரபரப்பு (வீடியோ)

கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்ததை அடுத்து, சாலை எங்கும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பள்ளங்கள் நிறைந்த சாலைகளை விரைவில் சரிசெய்யுமாறு வலியுறுத்தி, நபர் ஒருவர் வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். சமூக ஆர்வலர் ஒருவர் காக்கி உடை அணிந்தபடி, பள்ளங்கள் நிறைந்த சாலையில் அங்கப்பிரதட்ஷனம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தென் கர்நாடகாவில் பிரபலமான உருளு சேவை எனப்படும் சடங்கு…

சென்னையில் மதுபான கடைகளை திறக்க எதிர்ப்பு

தமிழகம் முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தாலும் சென்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக்கை திறக்க தடை நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், நாளை முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதியளித்துள்ளது தமிழக அரசு. மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…