Browsing: PTR PALANIVEL THIYAGARAJAN

தண்ணி குடிக்க வைத்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் – பிலால் அலியார்

பிடிஆர் பழனிவேல் தியாகராசனின் இந்தியா டுடே ராகுல் கன்வாலுடைய தொலைக்காட்சி விவாதம் இந்திய அளவில் பெரும் வரவேற்படைந்து, பாஜகவின் தோல்வியடைந்த பொருளாதார கொள்கைகளை தோலுரித்து வருவதும், இது குறித்த தீவிர விவாதங்களை பல தளங்கில் உருவாக்கி வருவதையும் காண முடிகிறது! நேற்று தி வயர் இணையதளத்தின் கரண் தப்பாருடனான ஏறக்குறைய நாற்பது நிமிட உரையாடல் ஒட்டுமொத்த இந்தியாவின் மோசமான நிலையையும், பாஜகவின் தோல்விகளையும் பட்டியலிடுகிறது. இந்திய ஒன்றியத்தின் ஒற்றை பரிமாண பார்வையை குஜராத் முதல்வராக மோடி இருந்த…

மூன்றரை லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்?

அரசு பணிகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் காலியிடங்கள் இருப்பதாகவும், பல்வேறு இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்தாலும் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யவேண்டியதுள்ளது என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஸ்குமார், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையப் பயிற்சி மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அரசு பணிகளில் 3…

சதிவலையில் சிக்கினாரா நிதியமைச்சர் பி.டி.ஆர்.? பற்றியெரியும் மதுரை அரசியல்!

2021 சட்டமன்ற தேர்தலில் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினராக 2வது முறை வென்று தமிழ்நாட்டின் நிதியமைச்சராக உள்ள பழனிவேல் தியாகராஜன் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி. அவர் நேரடியாக களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக இணையும் அரசியல்வாதி இல்லை. அது மட்டுமன்றி கட்சியில் உள்ள அடித் தட்டு நிர்வாகிகளோடு கலந்து பேசி, மக்கள் மனதை அறிந்துகொள்ளும் அரசியல்வாதியும் இல்லை. கட்சிக் காரர்கள் புடை சூழ அவர் இருந்ததே இல்லை. மாறாக அவர் ஒரு கார்ப்பரேட் கல்ச்சர் அரசியல்…

மாதம் ஒருமுறை மின் கட்டணம்… முதல்வருக்கு வேண்டுகோள்! – உதயமுகம் தலையங்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இந்த வேண்டுகோளை முன் வைக்கிறோம். தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பானதுதான். நடுத்தர குடும்பத்தினர் திமுகவுக்கு வாக்களிக்க முக்கியமான காரணங்களில் ஒன்று, மின்சாரக் கட்டணம்தான். கண்டபடிக்கு மின்கட்டம் வசூலிக்கப்பட்டது. யாரிடம் புகார் அளிப்பது என¢றுகூட தெரியவில்லை. புகார் அளித்தாலும் எல்லாம் சரியாத்தான் கணக்கு போட்டிருக்கிறோம் என்று அலட்சியமாக பதில் வரும். இப்படிப்பட்ட நிலையில்தான், ஒவ்வொரு மாதமும் மின்கட்டணம் கணக்கிடப்பட்டு, கூடுதல் கட்டணம் தவிர்க்கப்படும் என்று திமுகவின் வாக்குறுதி பால்வார்த்தது. ஆனால், கடுமையான கடன்…

போலியோ இல்லாத உலகம் – அமைச்சர்கள் பங்கேற்பு

அரியலூர் நகராட்சியில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து சிறப்புமுகாமை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கிவைத்தார். உடன் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். மல்லாங்கிணறு பேரூராட்சியில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமினைத் தொடங்கி வைத்த தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு போலியோ இல்லாத உலகம் அமைப்போம் என்று தனது முகநூலில் பதிவிட்டிருக்கிறார். மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர்…

முதல்வர் தேதி சொன்னால் நிச்சயம் செய்வேன் – நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, திமுக ஆட்சியைப் பற்றியும் தமிழக சட்டமன்றத்தை முடக்க போவதாக கூறிவரும் அதிமுகவினர் குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ஜனநாயகத்திற்கு விரோதமாக சட்டமன்றத்திற்கு வராத 18 பேரை நீக்கி வைத்து விட்டு, கட்சிக்கு எதிர்த்து வாக்களித்த 12 பேரை சட்டத்திற்கு விரோதமாக மன்றத்திற்கு உள்ளே வைத்துவிட்டு ஊழல் செய்வதற்காக 5 வருடம் ஆட்சியில் நீடித்தவர்கள், ஜனநாயக மரபுக்கு உட்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட…

மகளிருக்கு உரிமைத் தொகை எப்போது? நிதியமைச்சர் பி.டி.ஆர். செம்ம பேட்டி!

மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடம் கேட்கப்பட்டது. அதற்கும் திமுக ஆட்சி குறித்தும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். அவருடைய பேட்டியை காண கீழே உள்ள லிங்க்கை சொடுக்கவும்…

தி.மு.க. வேட்பாளருக்கு அமைச்சர் பி.டி.ஆர் பிரச்சாரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாநகராட்சி வார்டு எண் 58ல் போட்டியிடும் திமுக வேட்பாளர் மா. ஜெயராமன் அவர்களுக்கு ஆதரவு கேட்டு மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் பூங்கா நகர், திராவிட படிப்பகம் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

மதுரை மாநகராட்சியில் பி.டி.ஆர். பிரச்சாரம்

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மதுரை மாநகராட்சி 57வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் திருமதி.இந்திராணி பொன் வசந்த் அவர்களை ஆதரித்து மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது மோதிலால் மெயின் ரோடு பகுதியில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் எஸ்.சி, எஸ்.டி., ஓபிசி., பெண்களுக்கு உரிய இடம் ஒதுக்க கி.வீரமணி அறிக்கை!

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும், ஒன்றிய சட்ட அமைச்சரும், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் சமூகத்தின் பன்முகத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு நீதிபதிகள் நியமனம் நடைபெறுவது அவசியம் என்று கூறியுள்ள நிலையில், அனைத்துக் கட்சியினரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் போதிய அளவில் அழுத்தம் கொடுத்து செயல்முறைக்குக் கொண்டுவர ஆவன செய்யுமாறு வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் *ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள முக்கிய அறிக்கை… ‘தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி’ என்பது நீண்ட காலமாக அனைவரும் அறிந்த சொலவடையே! நமது நாட்டில் உள்ள உச்சநீதிமன்றத்தின்…

கனிமொழி கொரோனா வார்டுக்குள் நலம் விசாரித்தார்!

பிபிஇ பாதுகாப்பு டிரஸ் அணிந்து திடீரென கொரோனா வார்டுக்குள் விசிட் செய்தார் திமுக எம்பி கனிமொழி. அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் “எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?” என்று நலம் விசாரித்தார். சென்னையில் கொரோனா பரவல் தாண்டவமாடியபோதே, தூத்துக்குடியை தொற்றில்லாமல் பாதுகாக்க கனிமொழி எம்பி முடிவெடுத்துவிட்டார். அதற்காக, தன்னுடைய தொகுதியில் 2 வாரங்களாகவே முகாமிட்டு வருகிறார். தன்னுடைய தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அவரின் கால் படாத கிராமங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை…

1975 லேயே தமிழனுக்கு கம்யூட்டரை அறிமுகப்படுத்திய கலைஞர் – சாந்தி நாராயணன்

முதன் முதலில் அவர் ஒரு கணினியைக் கண்டபோது, அதன் செயல்பாடுகள் பலன்களை எல்லாம் கேட்டுவிட்டு அருகில் இருந்தவரிடம், “எல்லாம் செய்யும் என்று சொல்கிறாயே , இந்த கம்ப்யூட்டர் கவிதை எழுதுமாய்யா” என்று நகைச்சுவையாகக் கேட்டிருக்கிறார். கம்ப்யூட்டர் இன்னும் கவிதை எழுதிவிடவில்லை. ஆனால், கணினித்துறையில் தமிழர்கள் பல வெற்றிச் சரித்திரங்களை எழுதியிருக்கிறார்கள். அந்த வெற்றிக்கதைகளில் எல்லாம் கலைஞர் இருக்கிறார். ஆம், இன்றைக்கு மென்பொருள் துறையில் அமெரிக்கா முதல் உலகெங்கும் பணிபுரிந்துகொண்டிருக்கிற ஒவ்வொரு தமிழர்களின் வெற்றிக்குப் பின்னாலும் கலைஞர் இருக்கிறார்.…

1 2 3