Browsing: ptr

தண்ணி குடிக்க வைத்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் – பிலால் அலியார்

பிடிஆர் பழனிவேல் தியாகராசனின் இந்தியா டுடே ராகுல் கன்வாலுடைய தொலைக்காட்சி விவாதம் இந்திய அளவில் பெரும் வரவேற்படைந்து, பாஜகவின் தோல்வியடைந்த பொருளாதார கொள்கைகளை தோலுரித்து வருவதும், இது குறித்த தீவிர விவாதங்களை பல தளங்கில் உருவாக்கி வருவதையும் காண முடிகிறது! நேற்று தி வயர் இணையதளத்தின் கரண் தப்பாருடனான ஏறக்குறைய நாற்பது நிமிட உரையாடல் ஒட்டுமொத்த இந்தியாவின் மோசமான நிலையையும், பாஜகவின் தோல்விகளையும் பட்டியலிடுகிறது. இந்திய ஒன்றியத்தின் ஒற்றை பரிமாண பார்வையை குஜராத் முதல்வராக மோடி இருந்த…

மூன்றரை லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்?

அரசு பணிகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் காலியிடங்கள் இருப்பதாகவும், பல்வேறு இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்தாலும் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யவேண்டியதுள்ளது என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஸ்குமார், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையப் பயிற்சி மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அரசு பணிகளில் 3…

சதிவலையில் சிக்கினாரா நிதியமைச்சர் பி.டி.ஆர்.? பற்றியெரியும் மதுரை அரசியல்!

2021 சட்டமன்ற தேர்தலில் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினராக 2வது முறை வென்று தமிழ்நாட்டின் நிதியமைச்சராக உள்ள பழனிவேல் தியாகராஜன் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி. அவர் நேரடியாக களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக இணையும் அரசியல்வாதி இல்லை. அது மட்டுமன்றி கட்சியில் உள்ள அடித் தட்டு நிர்வாகிகளோடு கலந்து பேசி, மக்கள் மனதை அறிந்துகொள்ளும் அரசியல்வாதியும் இல்லை. கட்சிக் காரர்கள் புடை சூழ அவர் இருந்ததே இல்லை. மாறாக அவர் ஒரு கார்ப்பரேட் கல்ச்சர் அரசியல்…

போலியோ இல்லாத உலகம் – அமைச்சர்கள் பங்கேற்பு

அரியலூர் நகராட்சியில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து சிறப்புமுகாமை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கிவைத்தார். உடன் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். மல்லாங்கிணறு பேரூராட்சியில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமினைத் தொடங்கி வைத்த தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு போலியோ இல்லாத உலகம் அமைப்போம் என்று தனது முகநூலில் பதிவிட்டிருக்கிறார். மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர்…

முதல்வர் தேதி சொன்னால் நிச்சயம் செய்வேன் – நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, திமுக ஆட்சியைப் பற்றியும் தமிழக சட்டமன்றத்தை முடக்க போவதாக கூறிவரும் அதிமுகவினர் குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ஜனநாயகத்திற்கு விரோதமாக சட்டமன்றத்திற்கு வராத 18 பேரை நீக்கி வைத்து விட்டு, கட்சிக்கு எதிர்த்து வாக்களித்த 12 பேரை சட்டத்திற்கு விரோதமாக மன்றத்திற்கு உள்ளே வைத்துவிட்டு ஊழல் செய்வதற்காக 5 வருடம் ஆட்சியில் நீடித்தவர்கள், ஜனநாயக மரபுக்கு உட்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட…

மகளிருக்கு உரிமைத் தொகை எப்போது? நிதியமைச்சர் பி.டி.ஆர். செம்ம பேட்டி!

மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடம் கேட்கப்பட்டது. அதற்கும் திமுக ஆட்சி குறித்தும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். அவருடைய பேட்டியை காண கீழே உள்ள லிங்க்கை சொடுக்கவும்…

தி.மு.க. வேட்பாளருக்கு அமைச்சர் பி.டி.ஆர் பிரச்சாரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாநகராட்சி வார்டு எண் 58ல் போட்டியிடும் திமுக வேட்பாளர் மா. ஜெயராமன் அவர்களுக்கு ஆதரவு கேட்டு மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் பூங்கா நகர், திராவிட படிப்பகம் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

மதுரை மாநகராட்சியில் பி.டி.ஆர். பிரச்சாரம்

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மதுரை மாநகராட்சி 57வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் திருமதி.இந்திராணி பொன் வசந்த் அவர்களை ஆதரித்து மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது மோதிலால் மெயின் ரோடு பகுதியில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார்.

தமிழக அரசின் பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. தமிழ்நாடு வரலாற்றில் முதன் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2021-21ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வரும் திங்கள் அன்று பொதுவிவாதம் நடைபெறும் அப்போது பேசலாம் என்று சபாநாயகர் அறிவுறுத்தியும், நிதிநிலை அறிக்கையை புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதிமுக உறுப்பினர்களின் அமளிக்கிடையே பட்ஜெட்டை தாக்கல்…

மாநிலங்களுக்கு நன்கொடை அளிக்கும் அரசாக இந்திய ஒன்றிய அரசு இருக்கக்கூடாது!

மாநிலங்கள் இணைந்ததுதான் இந்திய ஒன்றிய அரசு. மாநிலங்கள் இல்லையென்றால் ஒன்றிய அரசே இல்லை. மாநிலங்களுக்கு கருணை காட்டும் நன்கொடையாளரைப் போல ஒன்றிய அரசு இருக்கக்கூடாது என்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஜிஎஸ்டி கவுன்சிலில் கலந்துகொண்டு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். நீண்ட காலத்துக்கு பிறகு டெல்லியில் தமிழ்நாடு அரசின் சார்பில் மாநிலய சுயாட்சி குரல் ஒலித்திருப்பதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். இந்த மாமன்றத்தில் தமிழ்நாடு மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனது மாநிலத்தின் சார்பாக பங்கேற்பதற்கு…