Browsing: Puravi cyclone

கொடைக்கானலுக்கு வாகனங்கள் செல்ல தடை

புரெவி புயல் காரணமாக, பாதுகாப்பு கருதி இரவு 7 மணி முதல் கொடைக்கானல் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புரெவி புயலால் தென் தமிழகத்தில் கனமழை பெய்து வருகின்றது. இதனால், அசம்பாவிதங்களை தடுப்பதற்காக பலவேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளுக்கு பேரிடர் மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் மீனவர்களுக்கும் பாதுகாப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், புரெவி புயலால் கொடைக்கானல் பகுதியில், சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகின்றது.…

புரெவி புயல்- தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு

புரெவி புயல் காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதேபோல, கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரம், கொல்லம், பதனம்திட்டா, ஆலப்புழா ஆகிய மாவட்டங்களிலும கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த புயல் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு மையத்திலிருந்து, 26 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 17 மீட்பு குழுக்களும்,…

புரெவி புயலால் தூத்துக்குடி விமான சேவை ரத்து

வங்கக்கடலில் உருவாகி இருக்கும் புரெவி புயல் காரணமாக தூத்துக்குடியில் இருந்து இயக்கப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனால் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு புதன் கிழமை பிற்பகல் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், பயணிகளின் சிரமத்தை தவிர்ப்பதற்காக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு காலை நேரத்தில் கூடுதலாக ஒரு விமானம் இயக்கப்பட்டது. அதில் பயணிகள் மாற்றி அனுப்பப்பட்டனர். இன்று…