Browsing: Purevi cyclone

பாம்பனில் 7ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

புரெவி புயல் நெருங்குவதால் பாம்பன் துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புரெவி புயல் காரணமாக தமிழகம் மற்றும் கேரளாவில் தென் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் ,சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும், கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 மணி நேரத்தில் புரெவி புயல் மேலும் வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு…

புயல் மழையில் இருந்து பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் வெளியீடு

பலத்த காற்று, கனமழையின்போது முன்னெச்சரிக்கையாக பயிர்களை விவசாயிகள் எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டிசம்பர் 2, 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளது. எனவே சம்பா நெல் பயிர் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் தங்களுடைய பயிர்களை அருகில் உள்ள பொது சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது வங்கிகளிலோ உரிய காப்பீட்டுக் கட்டணத்தைச்…

புரெவி புயல்- மக்களுக்கு முதலமைச்சரின் வேண்டுகோள்

புரெவி புயலை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், அது குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்எச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும், அமைச்சர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோரின் சீரிய கண்காணிப்பு மற்றும் அறிவுரைகள், கள நிலவரங்களை உடனுக்குடன் அறிந்து அதற்கு ஏற்ப வழங்கப்பட்ட குறிப்பான அறிவுரைகள் மற்றும் மாவட்டங்களில் எடுக்கப்பட்ட சிறப்பான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக ‘நிவர்’ புயலினால் ஏற்பட…