Browsing: puthiyamugam.com poem

முன் வினைப் பட்டதாரிகள் – ஆதனூர் சோழன் கவிதைகள்

பயப்படுவதற்கன்றி வேறுபலவற்றுக்காகவும் நாம் பிறந்தோம். நேயங்கொள்வதற்கேயன்றி வேறெதற்கும் இல்லையில் வாழ்க்கை. விருப்பப் படுவதற்கேயன்றி வெறுத்துப் புறமோடி வீணாகப் போக்க அல்ல. மோட்சத்தை யோசிப்பதற்கன்றி அதை சிருஷ்டிப்பதற்காகவும் நாம் பிறந்தோம். அச்சத்தைக் கொஞ்சுவதன்றி கச்சைகட்டி எழுந்து கைகுலுக்கிக் கொள்வோம். உணர்வுடன் நரகத்துழல்தலன்றி உயிருடன் சொர்க்கத்தை ஸ்பரிஸித்துக் கொள்வோம். முஷ்டியின் இறுக்கத்தில் முதல்விழுங்கிகளின் மூச்சினையடக்குவோம். முன்வினைப்பட்டதாரிகள் மூச்சுவிட நாம் காற்றுத் தருவோம். தோழனே, தோளினைக்குலுக்கி தாழ்களை உடைத்தால் முன்வினைப் பயன்மாறும் புரி! -ATHANURCHOZHAN

காதல்! – ஆதனூர் சோழன் கவிதைகள்

இதத்தென்றல் என் தேகம் தழுவும் போது நிதமுன் நினைவென் உள்ளெரிக்கும். வெம்மையை மென்மை தழுவும்போது மயிர்க்கால் அடியில் கூச்சறியும். இரவுக்குள் அமிழும்போது உறவுக்குனை துணையழைக்கும் உன்உருவைக் கனவில்கண்டு உள்ளம்சற்று உயிர்பிழைக்கும். விழிகளை இமைகள் தாழிடும்போதும் இதயம் ஏனோ திறந்தபடி மலர்க்கள மமைத்து உன்னுடன்நான் மகரந்தக் கவிதை சுரந்தபடி. உன் சிறுநோவிலும் என்னுளம் நோகும் புன்சிரிப்பொன்றில் பூரணமாகும் கறுப்புச்சந்தன தோலின்மீது வாசம் நுகரும் வாழ்க்கை போதும்! -Athanur chozhan

ஒரு முழுப் பகலையும்

இந்தக் கோடை ஒரு முழுப் பகலை சுடச்சுட பொறித்து முன்னே வைக்கிறது பிட்டுத் தின்னும் ஆசையில் கைவைத்துவிடாதீர் அது ஆறுவதற்கு இன்னும் வெகுநேரம் இருக்கிறது! இந்தக் கோடை வழிப்பறிக் கொள்ளைக்காரனைப் போல வந்தது என்றான் அவன் போதாதற்கு நதி கொள்ளை போனதெப்படியென அபிநயம் பிடித்துவேறு காட்டுகிறான் இல்லையில்லை பசித்த புலியைப் போல வந்ததெனச் சொல்லி கிணறுகளையும் ஊற்றுகளையும் கழுத்தில் கவ்வி வெயில் இழுத்துச்சென்றதை கால்நடுங்க விவரிக்கிறான் வேறாருவன் ஏளனச் சிரிப்புடன் மறுக்கும் முதியவர் பொழுதுபோக்க வந்த உல்லாசக்காரன்போல்…

துயரத்தைச் சந்தித்தல்!

ஒரு துயரம்நம் வீட்டுப் படியேறும்போதுஎன்ன செய்வது? வாசலிலேயே ஆள்நிறுத்திவீ ட்டிலில்லை எனச் சொல்லலாம்ஏற்கெனவே வெளியூர் போய்விட்டதாகவும்ஊர்திரும்ப வெகுநாளாகும் எனலாம்‘உங்கள் சேதியைச் சொல்லுங்கள்வந்ததும் சொல்லிவிடுகிறேன்’என நைச்சியமாகக் கேட்டுப்பார்க்கலாம் கையிருப்புத் துயரங்களைக் காட்டலாம்இந்தப் பூஞ்சை உடல்- இனியும்துயரம் தாங்காதென மருத்துவரளித்தபரிந்துரைச் சீட்டை நீட்டலாம்நமது டூப்பை முன்னே அனுப்பிஏமாறுகிறதாவென சோதிக்கலாம் அடையாளம் தெரியாதபடிக்குமரு வைத்துக்கொண்டு நழுவிவிடலாம்அப்பாய்ண்ட்மென்ட் இல்லாமல்சந்திப்பதில்லையென கெடுபிடி செய்யலாம்உன் கூகுள் வெரிஃபிகேஷன் கோட் என்னஎனக் கேட்டு டபாய்த்துப் பார்க்கலாம் விலாசம் மாறிவந்துவிட்டாயெனபக்கத்துத் தெருவுக்கு ஆற்றுப்படுத்தலாம்காவல் நிலையத்துக்குத் தகவல் சொல்லிஅப்புறப்படுத்தப் பார்க்கலாம்ஒரு…