Browsing: pyar

முத்தங்கள் ஊறும் கேணி

இளைப்பாற வந்திருக்கிறது ஒரு பறவை பெயர் என்ன, எங்கிருந்து வருகிறாய் எதுவும் கேட்காமலே விசிறவிடத் தொடங்குகிறது மரம் கடந்துவந்த தொலைவை பறவையின் முகத்தில் பார்த்து தன் கிளைகளில் கனிந்திருக்கும் பழங்களைப் பரிமாறுகிறது பதிலுக்கு தன் ப்ரியத்தைக் காட்ட வழியேதுமறியாத பறவை தன் இறகிலொரு தூவியை விட்டுச்செல்கிறது கிளையிலிருந்து நழுவி தரைசேரும் அந்த தூவியைத்தான் நீங்கள் காதுகுடைந்து கறைப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்! 2 நீங்கள் புல்லாங்குழலை மட்டும்தான் பார்க்கிறீர்கள் நானோ அதற்குள் உறைபிரிக்கப்படாத பலநூறு ராகங்களையும் சேர்த்தே பார்க்கிறேன் 3 வழக்கம்போல…