Browsing: quarantine

கொரானா தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை போராட்டம் – பிரதமர் மோடி

தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடரும் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் ரூ.3,000 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ள குடிநீர்த் திட்டத்துக்குப் பிரதமர் நேற்று (ஜூலை 23) காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டம் மாநிலத்தில் உள்ள மக்களின் குடிநீர்ப் பற்றாக்குறையைக் குறைக்கிறது. தலைநகர் இம்பால் மட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள 25 சிறு நகரங்கள் மற்றும் 1,700 கிராமங்களும் இந்தத் திட்டத்தால் பயனடையும். நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டிய பின் பேசிய பிரதமர், “கொரோனா…

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரொனா தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல சென்னையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 73,728 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் சாதாரண மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தின் கூட்டுறவுத்துறை அமைச்சரான செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து செல்லூர் ராஜுவுக்கும் கொரோனா பரிசோதனை…