Browsing: queen elizabeth II

மகாராணி சவப்பெட்டி அருகே திடீரென பாய்ந்த நபரால் பரபரப்பு!

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த போது, திடீரென சவப்பெட்டியை நோக்கி ஓடிச்சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் வரிசையில் காத்திருந்த போது, வரிசையில் இருந்து விலகி ஓடிய அந்த நபர், ராணி எலிசபெத்தின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டி வைக்கப்பட்டிருக்கும் மேஜை மீது ஏற முயன்றுள்ளார். உடனடியாக அங்கிருந்த காவலர்கள் அந்த நபரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். https://twitter.com/BNONews/status/1570944694359654400

பிரிட்டனின் ஆட்சி முறையை மாற்ற எலிஸபெத் ராணி திட்டமா?

பிரிட்டிஷ் ராணி எலிஸபெத் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அல்லது, பொறுப்புகளை கவனிக்க இயலாத அளவுக்கு அவர் முதுமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள். உலகின் மிக நீண்டகாலம் அரசுப் பொறுப்பில் இருந்த ராணி என்ற புகழுடன் பிரிட்டனை கட்டியாண்ட இரண்டாம் எலிஸபெத், பொறுப்புகளை தனது மூத்த மகன் சார்லஸிடம் ஒப்படைக்க விரும்புவதாக தெரிகிறது. சார்லஸுக்கு பிரிட்டன் மக்களிடம் போதுமான செல்வாக்கு இல்லாத நிலையில், அவருக்கு மாற்றாக வேறு ஏதேனும் நடவடிக்கை எடுக்கவும் ராணி திட்டமிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. உலகின்…

அன்று அவன் சுட்டிருந்தால் ராணி எலிசபெத் செத்திருப்பார்…!

பல ஆண்டுகளுக்குமுன் ராணி இரண்டாம் எலிசபெத், அதிகாலை அரண்மனை தோட்டத்தில், நடைப்பயிற்சி செய்யும்போது அவருடைய காவலர் ஒருவர், அன்னியர் என நினைத்து சுட இருந்தார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. 91 வயதாகும் இரண்டாம் எலிசபெத் அடிக்கடி பக்கிங்ஹாம் அரண்மை தோட்டத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இரவில் தூக்கம் வராவிட்டால் தோட்டத்தில் நடக்கச் சென்றுவிடுவார். அப்படி ஒருமுறை அதிகாலை 3 மணி அளவில் அரண்மனை தோட்டத்தில் நடைப்பயிற்சியில் அவர் ஈடுபட்டிருந்த சமயம் அவருடைய பாதுகாவலர் ஒருவர் அவரை…