Browsing: Queen

இதுவரை வெளிவராத மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் படம்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ந்தேதி மரணம் அடைந்தார். மறுநாளில் நாட்டின் மன்னராக சார்லஸ் அறிவிக்கப்பட்டார். ராணியின் மறைவால் அரச முறை துக்கம் கடைப்பிடிப்பது பற்றி பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், “மாட்சிமை தங்கிய ராணியின் மறைவையடுத்து, அவரது இறுதிச்சடங்குக்கு பின்னர் மேலும் ஒரு வாரம் அரச துக்கம் கடைப்பிடிக்க வேண்டும் என்பது மன்னர் விருப்பம். அரச துக்கம், அரச குடும்பத்தினரால், பணியாளர்களால், படையினரால் கடைபிடிக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது. இதையொட்டி அரச…

ராணி இரண்டாம் எலிசபெத்தும், விண்ட்சர் கோட்டையும்: சிறப்புத் தொடர்புகள்

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை காலையில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயிலிருந்து மேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விண்ட்சர் கோட்டையில் குடும்பச் சேவையுடன் நிறைவடைந்தது. இந்த அரச அரண்மனை ராணியின் வாழ்நாள் முழுவதும் அவருக்கு ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டிருந்த ஒரு கட்டடமாக விளங்கியது. அத்துடன் அவர் வேலை செய்யும் இடமாகவும் தனிப்பட்ட வெற்றிகளை கொண்டாடிய நினைவையும் தாங்கி நிற்கிறது. விண்ட்சர் கோட்டையுடன் ராணியின் சிறப்பு தொடர்பு, அவர் மழலைக் காலம் முதலே தொடங்கியது. அப்போது இளவரசியாக…

பிரமிக்க வைக்கும் ராணி எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ள 1000 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இடத்தின் வரலாறு!

இங்கிலாந்து வரலாற்றில் நீண்டகாலம் ராணியாக இருந்தவர் இரண்டாம் எலிசபெத். அவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்ட நிலையில், தன்னுடைய 96-வது வயதில் கடந்த 8ம் தேதி காலமானார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் அடுத்த மன்னராக அறிவிக்கப்பட்டார். ராணியின் இறுதி சடங்கு, லண்டனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே(மடாலயத்தில்) இன்று நடக்கிறது. அதன்பின், மடாலயத்தில் அங்குள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில்,…

மகாராணி சவப்பெட்டி அருகே திடீரென பாய்ந்த நபரால் பரபரப்பு!

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த போது, திடீரென சவப்பெட்டியை நோக்கி ஓடிச்சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் வரிசையில் காத்திருந்த போது, வரிசையில் இருந்து விலகி ஓடிய அந்த நபர், ராணி எலிசபெத்தின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டி வைக்கப்பட்டிருக்கும் மேஜை மீது ஏற முயன்றுள்ளார். உடனடியாக அங்கிருந்த காவலர்கள் அந்த நபரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். https://twitter.com/BNONews/status/1570944694359654400

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு குறித்து ரஷ்யா கடும் கண்டனம்

உக்ரைன் தாக்குதல் தொடங்கியதில் இருந்து பிரிட்டன் – ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்கு ரஷ்யாவை அழைக்காத பிரித்தானியாவின் முடிவிற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்தைத் தொடர்ந்து நடைபெறும் சடங்கு நிகழ்வுகளுக்கு ரஷ்ய தூதரகத்தின் தலைவர்கள் உட்பட ரஷ்ய அதிகாரிகளுக்கு அழைப்பிதழ்களை அனுப்புவதில்லை என்று பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் லண்டனில் உள்ள ரஷ்ய…

மகாராணியாரின் சவப்பெட்டியின் மீது ஒளிக்கதிர்

இங்கிலாந்து மகாராணியாரின் சவப்பெட்டி, ஸ்காட்லாந்திலுள்ள தேவாலயம் ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது வானிலிருந்து ஒரு ஒளிக்கற்றை மகாராணியாரின் சவப்பெட்டி மீது விழ, அது தெய்வீக செயல் என்று கூறி, மக்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளார்கள். இங்கிலாந்து மகாராணியார் மறைந்த அன்று பக்கிங்காம் அரண்மனை மீது இரட்டை வானவில் உருவாகிய விடயம் மக்களை நெகிழவைத்தது. இந்நிலையில், மீண்டும் ராஜகுடும்ப ரசிகர்களை நெகிழச் செய்யும் வகையில், மகாராணியாரின் உடல் தாங்கிய சவப்பெட்டி நன்றியறிதல் ஆராதனை ஒன்றிற்காக ஸ்காட்லாந்திலுள்ள St Giles’ தேவாலயத்துக்குக் கொண்டு…