Browsing: R.s Bharathi

சிறைச்சாலை எங்களை ஒன்றும் செய்து விடாது; திமுக-வினர் மீது தொடர்ந்து பொய் வழக்குப் போடுவதாக ஆர்.எஸ். பாரதி பேட்டி

திமுக-வினர் மீது தொடர்ந்து பொய் வழக்குப் போடுவதாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பராதி புகார் தெரிவித்துள்ளார். இடைக்கால ஜாமீன் நேற்றோடு முடிந்ததால் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனேன். எங்கள் மீது காட்டும் காழ்ப்புணர்ச்சியை கைவிட்டு மக்களை அரசு காப்பாற்ற வேண்டும். சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறும் போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் மாலை 4.30 மணியளவில் என்னை ஜாமீனில் விடுவித்து இருக்கிறார். உத்தரவு என்னவென்றால்…

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஜாமீன்

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்குச் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.சென்னையில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் ஆர்.எஸ்.பாரதி பேசிய கருத்துக்கு எதிராக, ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 23ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதிக்கு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மே 31ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் இன்று சென்னை…