Browsing: rahul

உதயமாகட்டும் ராகுல் காங்கிரஸ்! – ஆதனூர் சோழன்

உதயமாகட்டும் ராகுல் காங்கிரஸ்…இடதுசாரி இயக்கங்களும், அம்பேத்கரிய இயக்கங்களும் செய்யத் தவறிய கடமையை கன்னையா குமாரும், ஜிக்னேஷ் மேவானியும் செய்யட்டும்… காங்கிரஸில் புதிய சகாப்தம் தொடங்கட்டும். பழம் பெருச்சாளிகளை விரட்டிவிட்டு தனக்கான காங்கிரஸை இந்திரா உருவாக்கினார். ஆனால், மீண்டும் அந்த பழம்பெருச்சாளிகளின் சந்ததிகள் புகுந்து காங்கிரஸை நாசம் செய்கின்றன… இதோ, பெரியாரின் சமூகநீதி புரிந்த, ஏழ்மையின் உண்மை நிலை அறிந்த ராகுல் தலைமையில் புதிய காங்கிரஸ் உண்மையில் ஒரு இளைய காங்கிரஸ் உருவாகட்டும்… பாஜகவை வெல்ல இந்த காங்கிரஸ்…

திமுகவுடன் இணைந்து பணியாற்ற ராகுல் உறுதி!

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அரசு முறை பயணமாக Jவியாழக்கிழமை டெல்லி சென்றார். மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பிரதமருடன் 25 நிமிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழகம் சார்பில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். பின்னர் மாலை 7 மணிக்கு இடதுசாரிக்கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்டோர் சந்தித்தனர். இன்று காலை முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்…

குலாம்நபி ஆசாத் நீக்கம்காங்கிரஸ் அறிவித்த அதிரடி மாற்றங்கள்

காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய அளவில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கான அறிவிப்பு செப்டம்பர் 11 ஆம் தேதி இரவு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆகஸ்டு 24 ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழு காணொலி முறையில் நடந்தபோது, அதற்கு முன்னதாக கட்சித் தலைமையை மாற்ற வேண்டும் என்று கடிதம் எழுதிய 23 தலைவர்களுக்கு அந்த செயற்குழு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட அந்த தலைவர்கள் தங்கள் குறைகளை கட்சி அமைப்பில் கூற வேண்டும், ஊடகங்களில்…

மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனம்

இந்திய எல்லைப்பகுதியில் சீன ஆக்கிரமிப்பின் உண்மைகளைக் கூறுவதன் மூலம் பிரதமர் மோடி சத்தியாகிரஹம் இருப்பாரா என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரதினம் வருவதையொட்டி, ‘குப்பைகள் இல்லா தேசம்’(garbage-free India)எனும் ஒருவார இயக்கத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். மக்கள் அனைவரும் குப்பைகள் இல்லா இந்தியா உருவாக உறுதி மொழி ஏற்றுச் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதுதொடர்பாக பிரமதர் அலுவலகமும் “கார்பேஜ் குவிட் இந்தியா”…

கொரோனாவை விட ஊரடங்கு உத்தரவால் தான் அதிக ஆபத்து: ராகுல்காந்தி

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை விட ஊரடங்கு உத்தரவால் ஏற்படும் உயிரிழப்புகளும் பொருளாதார இழப்புகளும் மிக அதிகமாக இருக்கும் அபாயம் உள்ளது என காங்கிரஸ் கட்சியின் எம்பியான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுவதன் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவையும் மீறி மக்கள் வெளியில் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். இவ்வாறு ஊரடங்கு உத்தரவையும் மீறி வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டும், அபராதம்…