Browsing: railway

விவசாயிகள் போராட்டத்தால் ஸ்தம்பித்த ரயில்வே!!!

விவசாயிகள் போராட்டம் காரணமாக, வடக்கு ரயில்வே இயக்கும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு கொண்டு வந்த விவசாய மசோதாவை எதிர்த்து விவசாயிகள் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பல இடங்களில் ரயில் நிலையங்களுக்கு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்றும் முடிவுக்கு வரவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் சில ரயில்களை ரத்து செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது. சில ரயில்கள் பாதை மாற்றிவிடப்பட்டுள்ளன. 09613 டிசம்பர் 2 முதல் அஜ்மீர்-அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் சிறப்பு…

‘என்தோழி’- பெண்களுக்கான பாதுகாப்பு படை

எக்ஸ்பிரஸ் ரயில்களில் ‘என்தோழி’திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் அவர்கள் வீடு சென்று சேரும் வரை பெண்போலீசாரால் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. பெண் போலீஸ், பெண் பயணியின் தோழியைபோல் இருந்து பயணத்தின்போது ஏதேனும் இடையூறு அல்லது ஆபத்து ஏற்பட்டால், உடனடியாக அவர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு படையின் மூலம் உதவி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் 5பெண்கள் கொண்ட ரயில்வே பாதுகாப்புபடை போலீஸ் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் ரயில் புறப்படுவதற்கு முன்பாக,…

நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி

தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து பேருந்து சேவை கடந்த 1 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. செப்.7 ஆம் தேதி முதல் தனியார் பேருந்துகள், மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவை மற்றும் பயணிகள் ரயில் சேவைக்கு அனுமதி அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக மொத்தம் 13 ரயில்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கூடுதலாக 7 சிறப்பு ரயில்களை இயக்க இருப்பதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து மதுரை, நெல்லை, செங்கோட்டை, கொல்லம் மற்றும் ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்கள்…

தீபாவளி, பொங்கல் முன்னிட்டு … வேகமாக விற்றுத் தீர்ந்த சிறப்பு ரெயில் டிக்கெட்டுகள் !

கடந்த 7 ஆம் தேதி ரயில்களுக்கு முன் பதிவு தொடங்கியது. சில நிமிடங்களில் அனைத்து விற்றுத் தீர்த்தன. மக்கள் தற்போது வீட்டில் உள்ளதால் ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. இந்நிலையில், வரும் நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு செல்வதற்காக 3 மாதங்களில் முன்பே ரயில்களில் முன்பதிவு தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே சிறப்பு ரயில்களில் விற்றுத் தீர்ந்தது. ரயில்வே துறை இதற்காக கூடுதல்…

தமிழகத்தில் பயணிகள் ரயில் முன்பதிவு துவங்கியது

தமிழகத்தில் வெளியூர் செல்வதற்கான 13 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு துவங்கியது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக பேருந்து போக்குவரத்து மாவட்டங்களுக்கு இடையே தொடங்கப்பட்டது. அதோடு செப்டம்பர் 7 முதல் மாநிலம் முழுவதும் பேருந்துகள் மற்றும் பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன. அதன்படி தமிழகத்திற்கு 9 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே…

தமிழகம் முழுவதும் தடையற்ற போக்குவரத்துக்கு அனுமதி

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளின் அடுத்தகட்டமாக மாநிலம் முழுமைக்கும் பேருந்து போக்குவரத்தும் ரயில் போக்குவரத்தும் செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செப்டம்பர் 2 அன்று அறிவித்துள்ளார். ஏற்கனவே செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து மாவட்டங்களுக்குள் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு பேருந்தில் செல்ல இயலாத நிலை இதனால் ஏற்பட்டிருந்தது. இன்றைய சூழலில் தமிழகத்தில் மாவட்டங்ளுக்கு இடையிலான போக்குவரத்து அவசியமாக இருக்கும்…

சீனாவுடன் 25 ஆண்டுகால பெரிய டீல்.. இந்தியாவை நீக்கியது ஈரான்!

ஈரான் சாபஹார் துறைமுக ரயில்வே திட்டத்தில் இருந்து இந்தியாவை நீக்குவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை நீக்க ஈரான் முடிவு செய்துள்ளது. ஈரானில் இருக்கும் சாபஹார் துறை முகத்தில் இருந்து ஆப்கானிஸ்தானின் எல்லையில் இருக்கும் ஷாஹேடன் பகுதிக்கு இந்தியா சார்பாக ரயில்வே பாதை அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆப்கானிஸ்தான் உடன் ஈரானை ரயில் மூலமாக இணைக்க இந்த திட்டம் வழியாக அமையும் என்று கூறப்பட்டது. இந்த ரயில்வே திட்டத்திற்கான ஒப்பந்தம் இந்திய ரயில்வே, ஈரானியன் ரயில்வே மற்றும்…

சென்னையில் 2 நாட்கள் மட்டுமே ரயில் சேவை – ரயில்வே அறிவிப்பு

சென்னைக்கு ஏற்கெனவே அறிக்கப்பட மே 14,16 ஆகிய இரண்டு தேதிகளில் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் கொரோனா தாக்கம் அதிகம் உள்ளஹ்டால் ரயில் சேவைகளை இயக்க வேண்டாம் என்று முதல்வர் பழனிசாமி ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், சென்னை ராஜ்தானி குளிர்சாதன ரயில்மூலம் கொரோனா தொற்று வாய்ப்பு உள்ளதால் பயனிகளை பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும்.சென்னை ரயில்களில் வருபவர்களை தனிமைப்படுத்தி பரிசோதிக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சருக்கு…

சென்னை உட்பட முக்கிய நகரங்களுக்கு பயணிகள் ரயில் சேவை: இன்று மாலை முன்பதிவு தொடக்கம்

இந்திய ரயில்வே பயணிகள் ரயில் சேவையை 30 ரயில்களுடன் மே 12-ம் தேதி முதல் படிப்படியாக தொடங்கும் என்று ரயில்வே ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. கோவிட்-19 நோயாளிகள் பராமரிப்பு மையங்களுக்கு 20,000 ரயில்பெட்டிகளை ஒதுக்கிய பின்னர், கிடைக்கக்கூடிய ரயில்பெட்டிகளின் அடிப்படையில் புதிய வழித்தடங்களில் மேலும் சிறப்பு சேவைகளுடன் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. மேலும், தினசரி 300 ரயில்களை “ஷ்ராமிக் ஸ்பெஷல்” ரயில்களாக இயக்க ஏதுவாக போதுமான எண்ணிக்கையில் ரயில்பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.…