Browsing: Rain

புரெவி புயல்- 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை

புரெவி புயலால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்துவருவதால், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த “புரெவி புயல்” 3-ஆம் தேதி, மன்னார் வளைகுடா பகுதியில், பாம்பனுக்கு அருகில் நிலைகொண்டுள்ளது. இந்தப்புயல், 4-ஆம் தேதி அதிகாலையில் பாம்பன் – கன்னியாகுமரிக்கு இடையே, தென்தமிழக கடற்கரையை கடக்கக் கூடும் என்று…

புரெவி புயல்- தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு

புரெவி புயல் காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதேபோல, கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரம், கொல்லம், பதனம்திட்டா, ஆலப்புழா ஆகிய மாவட்டங்களிலும கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த புயல் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு மையத்திலிருந்து, 26 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 17 மீட்பு குழுக்களும்,…

வானவில் உருவாவது எப்படி?

இரவு நேரங்களில் வானவில்லை காணமுடியாது. மேகக் கூட்டங்கள் இருக்கும் போதும், மழை பெய்யும் போதும் வானவில் தோன்றாது. மழை பெய்து முடித்த பிறகு அல்லது வெயில்மழை பெய்து கொண்டிருக்கும்போது வானவில் தெரியும். வானில் உள்ள நீர்த்துளிகள் மீது சூரிய ஒளி படும்போது, சூரியஒளி வானவில்லாக பிரதிபலிக்கிறது.

சில நேரங்களில் வெயில் அடிக்கும்போதே, மழை பெய்வது ஏன்?

வெயில் அடித்துக் கொண்டிருக்கும். ஆனால், மழை தூறிக் கொண்டிருக்கும். இதை வெயில் மழை என்கிறோம். மேகமே இல்லாமல் இந்த மழை பெய்யும். எங்கோ தூரத்தில் இருக்கும் மேகத்திலிருந்து மழையை காற்று இழுத்துவரும். அல்லது, வெகு உயரத்தில் இருக்கும் மேகத்திலிருந்து மழை பெய்யும். அது பூமியை வந்தடையும்போது மேகம் மறைந்திருக்கும்.

‘மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் புயல்’

நவம்பர் 25ல் மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடப்பதால் கடலோர மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி நவ.25ம் தேதி மாமல்லபுரம்- காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கும் என்றும் சென்னை- காரைக்கால் அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறுவதால் 24, 25…

மழை பெய்வது ஏன்?

மழை மேகங்கள் எனப்படும் மேகங்கள் உருவாவதால் மழை பெய்கிறது. இந்த மேகங்கள், பூமியிலிருந்து மிகக்குறைந்த உயரத்தில் உருவாகின்றன. இந்த மாதிரியான மேகங்கள் நம் கண்ணில் தட்டுப்பட்டால் விரைவில் மழை பெய்யும் என்பதை உறுதிப்படுத்திவிட முடியும். மழை மேகத்தின் உள்ளே என்ன இருக்கும்? நீர்த்துளிகள் மற்றும் ஐஸ் கட்டிகளால், மழை மேகங்கள் உருவாகின்றன. இந்த நீர்த்துளிகள் போதிய அளவில் சேரும்போது, கனம் தாங்காமல் பூமியை நோக்கி இறங்குகின்றன. தம்முடன்  அதிக அளவில் நீரை உள்ளடக்கி வரும் மேகத்தின் மீது…

காற்றழுத்த தாழ்வு பகுதியால் நவ.23 இல் கனமழை

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் வருகின்ற 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் இலங்கையை நோக்கி நகரும். இதனால் நவம்பர் 23ஆம் தேதி நாகை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை யில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நவம்பர் 24ல் கடலூர்,…

சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது. அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளாதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மற்றும்…

6 மாவட்டங்களில் இன்று கனமழை..

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் இந்த வாரம் தொடக்கத்தில் இருந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மற்றும் வட மாவட்டங்களில் மழை பரவலாக பெய்கிறது சென்னை மற்றும் புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் முதலில் தூறலும், அதன்பின்னர் கனமழையும் பெய்தது. இதேபோல், கோயம்பேடு, மதுரவாயல், முகப்பேர்,…

சென்னையில் இடியுடன் கூடிய மழை

சென்னையின் பல இடங்களில் இன்று அதிகாலை இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனை அடுத்து சாலைகளில் மீண்டும் மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது என்பது தெரிந்தது. சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக நீர் தேக்கங்களில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு…

9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்…

தமிழகத்தில் கனமழை காரணமாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கனமழை காரணமாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை கால தாமதமாக தொடங்கியிருந்தாலும் தொடக்கமே நல்ல மழையை சந்தித்து வருகிறது தமிழகம். நேற்று சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால் சாலைகள் வெள்ளமாக காட்சியளிக்கின்றன. பல இடங்களில் மரங்கள், சுற்று சுவர்கள் பெயர்ந்து விழுந்து சேதாரம் ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாக்குமரி பகுதிகளில் நேற்று பரவலான மழை பெய்துள்ளது. இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல…

1 2 3