Browsing: rainfall

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தெற்கு மற்றும் வங்கக்கடலின் மையப் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு இன்று தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 (திங்கட்கிழமை) மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் ,…

ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகத்திற்கு மழை வாய்ப்பு மிகக் குறைவு என்றும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடக்கு, வடமேற்கில் நகர்ந்து ஒடிசா, மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஸ்கர்,…

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:…