Browsing: raja

வழக்கு போட்ட எடப்பாடிக்கு நன்றி சொன்ன ஆ.ராசா

திமுக மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2ஜி உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி பேட்டியளித்தார். இதற்கு பதிலளித்த திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, இதுதொடர்பாக தன்னுடன் விவாதிக்கத் தயாரா என கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கவில்லை. இதுதொடர்பாக சமீபத்தில் நீலகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, ஜெயலலிதாவை சொத்து சேர்த்த கொள்ளைக்காரி என்றும், முதல்வர் பழனிசாமியையும் விமர்சித்திருந்தார். இதுதொடர்பாக அதிமுக வழக்கறிஞர் பிரிவின் மாநில இணை செயலாளர் செல்வகுமார் அளித்த புகாரின்…

தேவிலால் உரையை மொழிபெயர்த்தது கனிமொழி இல்லை – தேவசகாயம்

திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பி கடந்த ஆகஸ்டு 9 ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றபோது, விமான நிலையத்தில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை பெண் அதிகாரி இந்தியில் பேசியதாகவும், ‘ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள்’ என்று கனிமொழி சொன்னதற்கு, ‘நீங்கள் இந்தியர்தானே இந்தி தெரியாதா?’ என்று கேட்டதாகவும் கனிமொழி தனது சமூக தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை இதற்கு விளக்கம் அளித்து,…

அதிர்வுகளை ஏற்படுத்திய ஆ ராசா பேட்டி.

திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரும், நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா, தனியார் தொலைக்காட்சி நடத்திய வியூகம் நிகழ்ச்சியில் நெறியாளர் விஜயன் எழுப்பிய கேள்விகளுக்கு அளி்த்த பதில்கள் தமிழ்நாடு முழுவதும் பரவலாக ஒரு கருத்துருவாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. அதில் பல்வேறு கேள்விகளை எந்தவித தயக்கமும் இன்றி ஆ.ராசா பதில் சொன்ன விதம் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. நெறியாளரும், ஆ.ராசாவும் நிகழ்த்திய உரையாடல் பின்வருமாறு… கந்த சஷ்டி கவசம் விவகாரத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? நாட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடந்து…

தமிழகத்தின் கடைசி ஜமீன்தார்: சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தாபதி மறைவு

தமிழகத்தின் கடைசி ஜமீன் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் 31-வது பட்டம் பெற்ற டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தபதி நேற்று மறைந்தார். இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில், அந்த நேரத்தில் சிங்கம்பட்டியின் 31-வது ராஜாவாக டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதிக்கு மூடி சூட்டினார்கள். அப்போது அவருக்கு வெறும் மூன்றரை வயது தான். முருகதாஸ் தீர்த்தபதி தான் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் கடைசி ஜமீன்தார். இவருக்கு மகன்கள் மகேஸ்வரன், சங்கராத் பஜன், மகள்கள் அபராஜிதா, சுபத்ரா, மௌலிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர். தமிழகத்தில் ஜமீன் சொத்துக்கள் முடக்கப்பட்டு,…