Browsing: Ramadoss

தயாநிதிமாறன் மன்னிப்பு கேட்க வேண்டுமாம் – பாமக எச்சரிக்கை நோட்டீஸ்

தயாநிதி மாறன் மன்னிப்பு கேட்க வேண்டுமென பாமக சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகள் பொதுமக்களை சந்திக்கும் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் கலந்துகொண்டு பேசிவந்தார். அங்கு பேசிய தயாநிதி மாறன், செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுமா என்ற கேள்விக்கு, “அத பத்தி எனக்கு தெரியாதுங்க, அவங்க…

ஆட்சியில் பங்கு கேட்கும் பாமக ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி 2019 மக்களவைத் தேர்தலை அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று எதிர்கொண்டது. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பாமக தோல்வியைத் தழுவினாலும், தேர்தல் ஒப்பந்தப்படி அன்புமணி ராமதாஸுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கியது அதிமுக. இதனிடையே தமிழகத்தில் பாமக எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதற்காக அதன் நிறுவனர் ராமதாஸ், 81 வயதைக் கடந்துவிட்ட இந்த நேரத்திலும் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். பாமக ஆள வேண்டும் என்பதில் அவர் இதுவரை எந்த சமரசமும் செய்துகொள்ளவில்லை.…

இட ஒதுக்கீட்டில் பாமாக பதுங்குவது ஏன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர்கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதமான இடங்களை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. உச்சநீதிமன்றம் இந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி தமிழக அரசும் பிரதான அரசியல் கட்சிகளின் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை…

மாநில அரசுகளை மத்திய அரசு மிரட்டுகிறதா-ராமதாஸ்

கல்லூரி தேர்வுகள் விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், அனைத்து மாநிலங்களும் செப்டம்பர் மாதத்திற்குள் இறுதிப் பருவ தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்; இறுதித் தேர்வை ரத்து செய்யும் மாநிலங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்திருக்கிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை செயலர் அமித்…