Browsing: ramasundaram

அறிவியலாளர்கள் அமைத்த கொரிய தமிழ்ச் சங்கம்!

முன்னுரை பூமிப்பந்தில் பன்னாட்டு தொடர்புகள் உருவாக கடல் ஒரு இயல்பான இணைப்புப் பாதையாக பயன்பட்டு வந்திருக்கிறது. கடல் சூழ்ந்த தமிழர் நிலம் பண்டைய காலம் தொட்டே தமிழ் வேந்தர்களும் தொழில்புரிவோரும் தத்தமது ஆளுகை மற்றும் தொழில் தொடர்பை விரிவாக்கம் செய்ய ஏதுவாய் அமைந்திருந்ததை வரலாறு எடுத்துக்கூறுகிறது. இன்று இணையம் போன்ற மென்-ஆற்றல் (soft power) உதவியுடன் வெளிவந்துகொண்டிருக்கும் தமிழ்-கொரியா மொழி மற்றும் பண்பாட்டு தொடர்புகள் தமிழ்நாட்டிற்கும் கொரியாவிற்குமிடையேயான வரலாற்று தொடர்பை எடுத்துக்காட்டும் வாழ்வியல் கூறுகள் என்றால் அது…

தமிழர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை உற்பத்திப் பொருட்களாக மாற்ற கொரியா தமிழ்ச் சங்கம் கோரிக்கை!

தமிழ் அறிவியல் தொழில்நுட்ப நிபுணர்களின் பயன்தரும் கண்டுபிடிப்புகளை உற்பத்தி பொருட்களாக மாற்றும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என உலகத்ததமிழ் வர்த்தக கூட்டமைப்பின் தலைவரிடம் கொரிய தமிழ்ச் சங்கத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரியா தமிழ்சங்கத்தின் தலைவர் முனைவர் இராமசுந்தரம் உலகத் தமிழ் வர்த்தகக் கூட்டமைப்பு (World Tamil Chamber of Commerce WTCC) மற்றும் உலகத்தமிழ் வம்சாவழி அமைப்பு (Global Organization of Tamil Origin) ஆகியவற்றின் தலைவர் செல்வகுமாருடன் கலந்துரையாடினார். அப்போது, தமது அமைப்பு தமிழரின்…

விதிகளை மாற்றும்படி டிஎன்பிஎஸ்சி ஆசிரியர் தேர்வாணையத்துக்கு கொரியா தமிழ்ச்சங்கம் கோரிக்கை!

வெளிநாடுகளில் வேலை செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் பணி தேர்வைணையம் கேட்டுள்ள சான்றிதழ் விவரங்கள் தேவையற்ற கால விரையத்தை ஏற்படுத்துவதாக கொரியா தமிழ்ச்சங்கத் தலைவர் இராமசுந்தரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக தலைமைக்கழக பேச்சாளர் ஆவடி குமார், திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், சிபிஐ தேசிய செயற்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ்,  பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குமரகுரு, மதிமுக பொதுக்குழு உறுப்பினர் காரை.செல்வராஜ் ஆகியோரிடம் அவர்…