Browsing: Ramasundharam KTS

இந்திய-கொரிய தொழில் ஒத்துழைப்பு வரலாற்றில் கலைஞரின் பங்களிப்பு – அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கொரியா தமிழ்ச்சங்கம் பெருமிதம்

தமிழ்நாடு அரசின் சார்பில் தென்கொரியாவில் மோற்கொள்ளப்படும் தொழிற்சந்திப்புகள் நிமித்தம் தமிழ்நாடு தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி, பண்பாடு, மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் தற்பொழுது தென் கொரிய தலைநகர் சியோலுக்கு வருகை தந்துள்ளார். அவர் இந்திய தூதரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கொரிய தமிழ்ச் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட தமிழ் மக்களை சந்தித்தார். இங்குள்ள நம் மக்களின் நிலை, தொழில், தமிழ்-கொரிய பண்பாட்டு தொடர்பு, கொரியாவின் தொழில் வளர்ச்சி, மற்றும் தமிழ்…

அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கொரியா தமிழ்ச்சங்கம் முன்வைத்த கோரிக்கைகளின் முழு விவரம்

பூமிப்பந்தில் தமிழ்நாடு கடைப்பிடித்த அரசியல், சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கையின் விளைவால் அறிவியல் விஞ்ஞானிகளாலும் மற்றும் உயர் தொழில்நுட்பவியலாளர்களாலும் உருவான படித்த எளிய மக்களின் பிள்ளைகளால் அமைக்கப்பெற்ற கொரிய தமிழ்ச் சங்கம் தமிழரின் நல்லியல்புகளையும் பண்பாட்டையும் இவ்வுலகிற்க்கு அறியச்செய்து தமிழ்கூறும் நல்லுலகிற்கு தொடர்ந்து பெருமை சேர்க்கும். தமிழ்நாட்டின் கடைநிலைக் குடும்பங்களிலிருந்து கொரியாவிற்கு வந்து உயர் கல்வி/அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி/உயர் தொழில்நுட்ப வேலை போன்ற பணிகளில் ஈடுபட்டிருக்கும் தமிழ்நாட்டின் சமூக-அரசியல் மற்றும் பொருண்மிய வளர்ச்சியின் அடையாளமாகத் திகழும் இளைஞர்களால்…

அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கொரியா தமிழ்ச்சங்கம் வைத்த கோரிக்கைகள்!

தமிழ்நாடு தொழில்துறை மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொழில்துறை ஆய்வுகளுக்காக குழுவினருடன் தென்கொரியா வந்தார். அப்போது, அங்குள்ள கொரியா தமிழ்ச்சங்கத்தினர் மற்றும் தமிழர் பிரதிநிதிகளை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, கொரியா தமிழ்சங்க நிர்வாகிகள் முனைவர்கள் ராமசுந்தரம், ஆரோக்கியராஜ் செல்வராஜ், சகாய டர்சியூஸ் பீ, பத்மநாபன் மோகனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சந்திப்பின்போது, கொரியா தமிழ்சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை அமைச்சரிடம் வழங்கப்பட்டது. அந்தக் கோரிக்கைகள் விவரம்… ⦁ நாட்டிற்கு இராசதந்திர பலன்களை தரக்கூடிய இந்திய குழந்தைகள் அதிகம்…

கொரியா தமிழ்சங்க பொங்கல் விழாவுக்கு அமைச்சர் பொன்முடி வாழ்த்து!

தென்கொரியா தலைநகர் சியோலில், கொரியா தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் விழா 2022, திருவள்ளுவர் ஆண்டு 2053, தைத் திங்கள் 16 – 17 (29-30 சனவரி 2022) சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்கள் இணையவழி இயங்கலையில் இனிதாய் நடைபெற்றது. கொரியாவில் கரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில் நேரடி நிகழ்வு தவிர்க்கப்பட்டது. நிகழ்விற்கு தென்கொரியாவிற்கான இந்தியத்தூதர் மாண்புமிகு ஸ்ரீப்ரியா ரெங்கநாதன், மாண்புமிகு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, ஆகியோர் வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பியிருந்தனர்.…

கொரியா தமிழ் சங்கத்தின் தமிழர் திருநாள் விழா 2022

கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2022, திருவள்ளுவர் ஆண்டு 2053, தைத் திங்கள் 16 – 17 (29-30 சனவரி 2022) சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்கள் இணையவழி இயங்கலையில் இனிதாய் நடைபெற்றது. கொரியாவில் கரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில் நேரடி நிகழ்வு தவிர்க்கப்பட்டது. நிகழ்விற்கு தென்கொரியாவிற்கான இந்தியத்தூதர் மாண்புமிகு ஸ்ரீப்ரியா ரெங்கநாதன், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை…