Browsing: Results

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு 92.3 சதவீதம் பேர் தேர்ச்சி – இந்த ஆண்டும் மாணவிகள் சாதனை

பிளஸ்2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதில் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவியரே அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த ஆண்டின் மொத்த தேர்ச்சி வீதம் 92.3 சதவீதம். இது கடந்த ஆண்டைவிட 1 சதவீதம் அதிகம். தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 7,127 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் தனி தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று காலை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி முதல் 24ம் தேதி…

தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது. மாணவிகள்-94.80% பேரும், மாணவர்கள் 89.41% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளில் தேர்வு எழுதியர்களில் 85.94 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் 96.99% பேர் தேர்ச்சி பெற்று ஈரோடு 2 வது இடமும், 96.39 % பேர் தேர்ச்சி பெற்று கோவை 3 வது இடமும் பிடித்துள்ளது. http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வுகளை அறிந்துக்கொள்ளலாம்.

சிபிஎஸ்இ 10,+2 பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 15 ல் வெளியீடு

சிபிஎஸ்இ 10 ,+2 பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 15 ல் வெளியாகவுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார். ஜூலை 1 முதல் 15 ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறவுள்ளன. தேர்வுகள் நடைபெறும் போதே, விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். வீடுகளில் இருந்தவாறு ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.