Browsing: russia

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு குறித்து ரஷ்யா கடும் கண்டனம்

உக்ரைன் தாக்குதல் தொடங்கியதில் இருந்து பிரிட்டன் – ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்கு ரஷ்யாவை அழைக்காத பிரித்தானியாவின் முடிவிற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்தைத் தொடர்ந்து நடைபெறும் சடங்கு நிகழ்வுகளுக்கு ரஷ்ய தூதரகத்தின் தலைவர்கள் உட்பட ரஷ்ய அதிகாரிகளுக்கு அழைப்பிதழ்களை அனுப்புவதில்லை என்று பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் லண்டனில் உள்ள ரஷ்ய…

சோவியத்தை சிதைக்கலாம்… புரட்சி வரலாற்றை சிதைக்க முடியாது! – ஆதனூர் சோழன்

முதல் உலகப்போர் முடிவுக்கு வந்த சமயம். ஜார் மன்னரின் தலைமையிலான ரஷ்ய பேரரசு நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. உள்நாட்டில் மாமேதை லெனின் தலைமையிலான புரட்சி ஆயத்தங்களுக்கு இடையே உலகப்போரில் ரஷ்யாவை பாதுகாக்கும் வேலையில் ராணுவத்துடன் மக்களும் எதிரிகளை எதிர்த்து போரிட்டார்கள். போர் முடிந்தது. மக்கள் உணவுக்காக அலைமோதும் பரிதாப நிலை தொடங்கியது. பரந்து விரிந்த ரஷ்ய பேரரசில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது. பேரரசர் ஜாருக்கு எதிராக போராட்டங்களும் கலகங்களும் அதிகரித்தன. போராட்டங்களை ஒடுக்க வேண்டிய ராணுவம் மக்களோடும்,…

ஆரியனின் சாதி வெறியும் அமெரிக்காவின் யுத்த வெறியும்! – ஆதனூர் சோழன்

அமெரிக்கா எதை எதிர்க்கிறதோ அதை நாம் ஆதரிக்க வேண்டும் என்பது கம்யூனிஸ சித்தாந்தம். ஆரிய பார்ப்பான் எதை எதிர்க்கி றானோ அதை நாம் ஆதரிக்க வேண்டும் என்பது தந்தை பெரியாரின் சித்தாந்தம். இது எவ்வளவு பெரிய உண்மை என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். உலக மக்கள் அனைவரும் சமம். ஏழை, பணக் காரர் வேறுபாடு பார்ப்பது தவறு. ‘உழைப்பவன் உழைக்க.. உட்கார்ந்து உண்பவன் கொழுக்க..’ என்பது அநியாயம் என்கிறது கம்யூனிஸம். ஆனால், முதலாளிகளின் புண்ணியத்தில்தான் உழைக்கும் வர்க்கம் உண்ணமுடியும்…

ஒரு கால் விலங்கின் இசை..! – C.N.Annadurai

(அண்ணா தனது தம்பிகளுக்கு எழுதிய கடிதங்களில் இந்திய வரலாறு, உலக வரலாறு, உலகச் சிறுகதைகள் என கலந்து கொடுப்பார். அப்படி ஒரு கடிதத்தில் இடம்பெற்ற ரஷ்ய புரட்சிக் கதை இது…) ஒரு இரும்புப் பட்டறைத் தொழிலாளி. அவன் தகப்பனும், அண்ணன் தம்பிகளும் அதே பட்டறையில் வேலை செய்பவர்கள். தொழிற்சாலை முதலாளியுடையது. தொழிலாளர்களின் உரிமைக்காகக் கிளர்ச்சி செய்தான் என்பதற்காக, அந்த தொழிலாளியைச் சிறையிலே போட்டு அடைத்தார்கள். காலிலே, ஒரு விலங்கு; ஒரு இரும்புச் சங்கிலி. கதை, இந்த விலங்கைப்…

கொரோனா தடுப்பூசி அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும்!

மாஸ்கோ: பாதுகாப்பான கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாகவும், ஆகஸ்ட் மாத மத்தியில் தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவுள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதுவரை 1.36 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்தின் உருவாக்க ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவின் செசனோவ் மருத்துவ பல்கலை மனிதர்களுக்கு கொரோனா வைரஸ்…

ரஷ்ய மின் நிலையத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் சிவப்பாக மாறிய ஆம்பர்ன்யா நதி

ரஷ்யாவின் சைபீரிய மாகாண மின் நிலையத்தில் உள்ள எண்ணெய் தொட்டியில் ஏற்பட்ட கசிவு ஆற்றில் கலந்து மாசுபடுத்தியுள்ளதால் ஆறானது சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. ரஷ்யா நாட்டில் சைபீரியா மாகாணத்தின் நோரில்ஸ்க் நகரில் இருக்கும் மின்நிலையம் உலகின் முன்னணி நிக்கல் மற்றும் பல்லேடியம் உற்பத்தியாளரான, நோரில்ஸ்க் நிக்கலின் துணை நிறுவனத்திற்கு சொந்தமானது. மின் நிலையத்தில் உள்ள எண்ணெய் தொட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை தீடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. அந்த தொட்டியில் இருந்த சுமார் 20,000 டன் எண்ணெய் முழுவதும்…

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா

ரஷியாவில் முதன்முதலாக கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி, கொரோனா வைரஸ் காலடி எடுத்து வைத்தது. ஆனால் அதன் தாக்கம் முதல் 3 மாதங்களில் தீவிரமாக இல்லை. ஏப்ரல், மே மாதங்களில் தான் கொரோனா வைரஸ் அங்கு காட்டுத்தீ போல பரவியது. தினந்தோறும் சர்வ சாதாரணமாக சராசரியாக 10 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியானது. இப்போது அந்த நாடு கொரோனா பாதிப்பில் உலகின் மோசமான நாடுகள் பட்டியலில் 3-ம் இடத்தில் இருக்கிறது. அங்கு 4 லட்சத்து 23…