Browsing: sahaya darcius p

கொரியா தமிழ்சங்க பொங்கல் விழாவுக்கு அமைச்சர் பொன்முடி வாழ்த்து!

தென்கொரியா தலைநகர் சியோலில், கொரியா தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் விழா 2022, திருவள்ளுவர் ஆண்டு 2053, தைத் திங்கள் 16 – 17 (29-30 சனவரி 2022) சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்கள் இணையவழி இயங்கலையில் இனிதாய் நடைபெற்றது. கொரியாவில் கரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில் நேரடி நிகழ்வு தவிர்க்கப்பட்டது. நிகழ்விற்கு தென்கொரியாவிற்கான இந்தியத்தூதர் மாண்புமிகு ஸ்ரீப்ரியா ரெங்கநாதன், மாண்புமிகு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, ஆகியோர் வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பியிருந்தனர்.…

கொரியா தமிழ் சங்கத்தின் தமிழர் திருநாள் விழா 2022

கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2022, திருவள்ளுவர் ஆண்டு 2053, தைத் திங்கள் 16 – 17 (29-30 சனவரி 2022) சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்கள் இணையவழி இயங்கலையில் இனிதாய் நடைபெற்றது. கொரியாவில் கரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில் நேரடி நிகழ்வு தவிர்க்கப்பட்டது. நிகழ்விற்கு தென்கொரியாவிற்கான இந்தியத்தூதர் மாண்புமிகு ஸ்ரீப்ரியா ரெங்கநாதன், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை…

தூது சொல் புல்லினமே!

தூதுநீ சொல்லி வா புல்லினமே… நெய்தல் மலரவள் வாடுமுன் தூதுநீ சொல்லி வா புல்லினமே! அலர் விழி அன்னம் காணா துயர் சூழ் நெஞ்சம் வாட… குளிர் பனி உண்ட வாடை உலர் மேனி உண்ண வீச… உயர் ஆழி ஓங்கி தாழ சதிர் ஆடும் தோணி சீற… துளிர் அச்சம் உடன் மாள வளர் காதல் தின்ற கள்வன்… ஒளிர் எழில் முக நங்கை தளிர் மேனி இணை சேர… விர்ர் ரென விரையும் சேதி…

கொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா

கொரியா தமிழ்ச்சங்கத்தின் தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் நிகழ்ச்சியில் சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரும் ஆராய்ச்சியாளருமான சகாய டர்சியஸ் பீ அவர்களின் முதல் கவிதை புத்தகமான ’சிதறல்கள்‘ வெளியீட்டுவிழாவும் ஒரு நிகழ்வாக அமைந்தது. விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காரை செல்வராஜ் சிதறல்கள் புத்தகத்தை வெளியிட்டார். அதுமட்டுமின்றி அருமையான அறிமுக உரையும் நிகழ்த்தினார். புத்தகத்தின் 112 பக்கங்களையும் ஒருவரி கூட விடாமல் படித்த விதத்தினையும் குறிப்புகள் பல எடுத்து, தனக்குப் பிடித்த கவிதைகளை ரசிக்குபடிச் சொல்லி புத்தகத்தை வெளியிட்ட…