Browsing: science

சி.டி. ஸ்கேன் செய்யப்பட்ட 3000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி

எகிப்து நாட்டில் பழங்காலத்தில் இறந்தவர்களை மனித உருவில் பெட்டிகள் செய்து அதில் அவர்களின் உடல் மற்றும் ஆபரணங்களை சிலவற்றை வைத்து அடக்கம் செய்வது வழக்கம். மம்மிகள் ஆராய்ச்சியும் ஆச்சரியங்களும் தீராத வண்ணம் இருந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக மம்மி சிடி ஸ்கேனுக்கு உட்படுத்தப்பட்டது. 3000 ஆண்டுகள் பழமையான எகிப்திய மம்மி சுமார் 3000 ஆண்டுகள் பழமையான எகிப்திய பாதிரியாரின் மம்மி சிடி ஸ்கேனுக்கு உட்படுத்தப்பட்டு ரகசியங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இத்தாலிய மருத்துவமனை எகிப்து நவீன மருத்துவ தொழில்நுட்பத்தை சந்தித்தது.…

படிமம் என்பது என்ன?

லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினங்கள் மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன. அவற்றின் உடல் பகுதிகள், பாறைகள், மரத்துண்டுகளில் படிந்து கிடக்கின்றன. தொல்லியல் துறை நிபுணர்கள் இவற்றை கண்டுபிடித்து ஆய்வு செய்கின்றனர். இப்படி புதைந்து கிடப்பவற்றை படிமம் என்கிறார்கள். பூச்சிகள் அம்பர் என்ற கெட்டியான பொருளால் மூடப்பட்டிருக்கும். தாவரங்கள் காலப்போக்கில் கற்களாகவே மாறிவிடுகின்றன. சில விலங்குகளின் எலும்புகள் மண்ணுக்கு அடியில் கண்டெடுக்கப்படுகின்றன.

ஆதி மனிதனின் தோற்றம் எப்படி இருந்தது?

ஆதி மனிதனின் பூர்வீகம் கிழக்கு ஆப்பிரிக்காவில் தொடங்கியது. சுமார் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிமனிதன் உடல் முழுவதும் ரோமத்துடன், மனிதக் குரங்கைப் போன்ற முகத்துடன் இருந்தான். நேராக நிமிர்ந்து நடந்த அவன் குச்சிகள், கற்கள், எலும்புகள் ஆகியவற்றை கருவியாகப் பயன்படுத்தினான்.

மேகங்கள் எப்படி உருவாகின்றன?

கடல், ஆறு மற்றும் நிலப்பகுதிகளில் உள்ள நீர், சூரியக் கதிர்களால் வெப்பமாகிறது. இதையடுத்து தண்ணீர் நீராவியாக மாறி, வானத்தை நோக்கி  செல்கிறது. வாயு வடிவில் இருப்பதால் நீராவியை கண்ணால் பார்க்க முடியாது. மேலே செல்லும் நீராவி  குளிர்விக்கப்பட்டு, சிறு நீர்த்துளிகளாகவோ, பனிக்கட்டிகளாகவோ மாறுகிறது. போதுமான அளவுக்கு நீர்த்துளிகள் அல்லது சிறு பனிக்கட்டிகள் ஒன்று சேர்ந்தவுடன் அது மேகமாக மாறுகிறது. மேகங்கள் ஏன் பல வடிவங்களில் இருக்கின்றன? மேகக்கூட்டங்கள் வானத்தில் எவ்வளவு உயரத்தில் உருவாகின்றனவோ, அதைப் பொருத்தே  வடிவம்…

48 எம்.பி ஸ்மார்ட் போன் அறிமுகம்

48 எம்.பி கேமரா கொண்ட கியூ52 என்ற புதிய ஸ்மார்ட்போனை எல்ஜி நிறுவனம் தென்கொரியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. மின்னணு சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் எல்ஜி, ஸ்மார்ட்போன் விற்பனையிலும் கலக்கி வருகிறது. அவ்வப்போது புதுப்புது மாடல் போன்களை அறிமுகப்படுத்தி வரும் எல்ஜி நிறுவனம், அதன் கியூ51 வெற்றியை தொடர்ந்து தற்போது கியூ52 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. 6.6 இன்ச் எச்டி பிளஸ் திரை, ஆண்டிராய்ட் 10…

தானியங்கி சோப் நுரை அளிக்கும் இயந்திரம்” – சியோமி அறிமுகம்

தானியங்கி முறையில் சோப் நுரை அளிக்கும் இயந்திரத்தை சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பலரும் அடிக்கடி தங்கள் கைகளை சோப் போட்டு கழுவுகின்றனர். அதே சமயம் பொது இடங்களில் மற்றவர்கள் பயன்படுத்திய சோப்பை பயன்படுத்த பலரும் தயக்கம் காட்டுவதால், ஹேண்ட் வாஷ் எனப்படும் சோப் லிக்விட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் இத்தகைய சோப் நுரையை தானியங்கி முறையில் அளிக்கும் இயந்திரத்தை சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. ”எம்ஐ ஆட்டோமேட்டிக் சோப் டிஸ்பென்சர்” என்ற…

வீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்

சோலார் பேனல்கள் சூரியனிடம் இருந்து வரும் ஒளி ஆற்றலைப் பயன்படுத்தி தான் மின்சாரத்தை உருவாக்குகின்றன. நமது சூரியன் ஒரு சிறந்த அணுக்கரு இணைவு நடக்கும் அணு உலை போன்றது. அதாவது சூரியனின் மையப்பகுதியில் தொடர்ந்து ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் அணுக்களை உருவாக்குகின்றன. இவ்வாறு நடைபெறும் அணுக்கரு இணைவு நிகழ்வின் போது மிக அதிகமான ஆற்றல் வெப்பமாகவும் ஒளியாகவும் வெளியிடப்படுகிறது. இப்படி சூரியனில் இருந்து வெளிவரும் ஒளியில் ஃபோட்டான்கள் இருக்கும். இந்த போட்டான்கள் சூரியனில் இருந்து பூமிக்கு…

கொரோனா தடுப்பூசி

இன்று உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு விஷயம் இருக்கும் என்றால் அது கொரோனாவுக்கான தடுப்பூசிதான். கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளிலும் ஐம்பது லட்சம் பேர் வரை இதுவரை இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளோடு இந்தியாவும் இணைந்து இந்த கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் சவாலில் இறங்கியுள்ளது. உலகம் முழுதும் உள்ள 110 நிறுவனங்கள் கடந்த நான்கு மாத காலமாக இதற்காகப் போராடி வருகின்றன. சீனா தயாரித்துள்ள இந்த ‘சினோவேக்’ (Sinovac)…

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா

ரஷியாவில் முதன்முதலாக கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி, கொரோனா வைரஸ் காலடி எடுத்து வைத்தது. ஆனால் அதன் தாக்கம் முதல் 3 மாதங்களில் தீவிரமாக இல்லை. ஏப்ரல், மே மாதங்களில் தான் கொரோனா வைரஸ் அங்கு காட்டுத்தீ போல பரவியது. தினந்தோறும் சர்வ சாதாரணமாக சராசரியாக 10 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியானது. இப்போது அந்த நாடு கொரோனா பாதிப்பில் உலகின் மோசமான நாடுகள் பட்டியலில் 3-ம் இடத்தில் இருக்கிறது. அங்கு 4 லட்சத்து 23…

ஸ்கார்பியன் மீன்களை தற்போது ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவில் கண்டறிந்துள்ளனர்.

வாளை மீன், விலாங்கு மீன் என்றெல்லாம் நாம் கேள்விபட்டிருப்போம் ஆனால் இது ஒரு வகையான அதிசயமீன். தலை மற்றும் செதில் பகுதிகளில் முட்களைக் கொண்ட இந்த மீனை பேண்ட் டைல் ஸ்கார்பியன் ஃபிஷ் என்று அழைக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதன் விஷத் தன்மை மற்றும் நிறமாறும் காரணங்களுக்காக அறியப்பட்டிருக்கும் ஸ்கார்பியன் மீன்களை தற்போது ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவில் கண்டறிந்துள்ளனர். இந்த வகை மீன்கள் இந்தியாவில் பார்ப்பது இதுவே முதன்முறையாம். அதுவும் மன்னார் வளைகுடாவில் அமைந்திருக்கும் சேதுக்கரையில் இந்த மீன்களை பார்த்துள்ளனர்…

செயற்கை ஏரி

பூமியின் மிக அற்புதமான இடங்கள்’ என்ற தலைப்பின் கீழ் உலகின் 25 அதிசயங்களைப் பட்டியலிட்டது ‘நேஷனல் ஜியோகிராபிக்’. நீர், நிலம், வானம் என்று மூன்று வகைகளாக இந்த அதிசயங்களைப் பிரித்தது. கலிபோர்னியாவில் உள்ள ரெட்வுட் மரங்கள், எவரெஸ்ட் போன்றவை ‘வானம்’ பிரிவிலும்; ஹவாய் எரிமலைகள், சஹாரா பாலைவனம் போன்றவை ‘நிலம்’ பிரிவிலும் இடம்பிடித்தது பெரிய ஆச்சர்யம் இல்லை. ஆனால், ஐஸ்லாந்தில் உள்ள நீல வண்ண ஏரி ‘நீர்’ பிரிவில் இடம்பிடித்ததுதான் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. காரணம், எவரெஸ்ட்,…

மயில் மீன்!

ஒரு பகுதி நிலப்பரப்பை மூன்று பகுதி நீராகச் சூழ்ந்து பிரம்மாண்டமாக எல்லையில்லா அற்புதங்களை, அதிசய உயிரினங்களை உள்ளடக்கி காட்சி தருகிறது கடல். கடலில் உள்ள மீன்கள் மட்டுமே எண்ணிலடங்காத வகையில் உள்ளன. மீன்களின் வகை எண்ணிலடங்காதவையாக இருந்தாலும் ஒருசில மீன்கள் நம் மீனவர்களால் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுதான் மயில் மீன். ஆங்கிலத்தில் ஸ்வார்ட் ஃபிஷ் (sword fish) என்று அழைக்கப்படும் இந்த மீனின் விலங்கியல் பெயர் சைபியஸ் கிளாடியஸ் ஆகும். கிளாடியஸ் என்றால் லத்தின் மொழியில்…