Browsing: Sellur raju

காமெடி சேனல் நடத்திக்கொண்டிருக்கிறார் செல்லூராஜூ – மு.க.ஸ்டாலின்

மதுரையில் நடந்த திமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காணொளிகாட்சி மூலமாக பங்கேற்று பேசிய மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் செல்லூர்ராஜுவையும், உதயகுமாரையும் பேசி கலகலப்பூட்டினார். ’’அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும் , உதயகுமாரும் தங்களது துறையில் என்ன சாதனைகள் செய்தார்கள் என்று கேட்டால் யாருக்கும் சொல்லத்தெரியாது. ஆனால், என்ன காமெடி செய்தார்கள், நகைச்சுவை பேட்டிகள், இன்றைக்கு புதிதாக என்ன தத்துவ முத்துக்கள் உதிர்த்துள்ளார்கள் என்று கேட்டால், மக்கள் பட்டியல் போட்டு சொல்லிவிடுவார்கள். வைகை ஆற்று நீரை தெர்மாகோல் கொண்டு மூடியது முதல்…

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரொனா தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல சென்னையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 73,728 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் சாதாரண மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தின் கூட்டுறவுத்துறை அமைச்சரான செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து செல்லூர் ராஜுவுக்கும் கொரோனா பரிசோதனை…

அறிவாளி அமைச்சர் செல்லூர் ராஜு!

திட்டம்போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது அதை சட்டம்போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது… திருடனா பாத்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுனு அதிமுகவை தொடங்கிய எம்ஜியார் ஒரு படத்துல பாடுறமாதி சீன் வரும். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் திருட்டுப் பயல்களின் புத்தியை பாட்டா எழுதினா, அமைச்சர் செல்லூர் ராஜு, பொதுமக்களைப் போய் அந்த இடத்துல வச்சு பேசுறார். சட்டம்போட்டு மக்களைத் திருத்த முடியாதுனு சொன்னா என்னா அர்த்தமுங்க. திருந்தாத ஜென்மங்கள்னு மக்களைச் சொல்றார்னுதானே அர்த்தம். குடிப்பழக்கத்தை…

மதுரை சித்திரை திருவிழா ஒத்திவைக்கப்படுமா

மதுரை சித்திரை திருவிழா ஒத்திவைக்கப்படுமா என்பது ஏப்ரல் -14க்கு பிறகு தான் தெரியவரும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் குறைவதை பொறுத்தே சித்திரை திருவிழா குறித்து அறிவிப்பு வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.