Browsing: shooting

பிறந்தநாளுக்கு ரசிகர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டாம் – ரஜினி அறிவிப்பு

அரசியல் கட்சி தொடங்க உள்ள ரஜினி அதற்கு முன்பாக அண்ணாத்த படப்பணிகளை முடிக்க ஹைதராபாத் செல்வதால் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் ரஜினி வரும் ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் அண்ணாத்த பட பணிகளை டிசம்பருக்குள் முடிக்க அறிவுறுத்தியுள்ள ரஜினி இன்று படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றுள்ளார். இந்நிலையில் வரும் டிசம்பர் 12 அன்று…

சினிமா படப்பிடிப்புக்கு பாதுகாப்பு கேட்கும் லாபம் படக்குழு

விஜய்சேதுபதி நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் லாபம். ஸ்ருதிஹாசன் இந்தப் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். படத்துக்கான இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது. விஜய்சேதுபதி கலந்துகொண்டுள்ள இப்படப்பிடிப்புக்கு விஜய்சேதுபதியை சந்திக்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்துவிடுகிறார்கள். முறையாக கொரோனா முன்னெச்சரிக்கையை பின்பற்றவில்லை. நிறைய ரசிகர்கள் மாஸ்க் போடாமல் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் விஜய்சேதுபதியைச் சந்தித்துவிட்டு செல்கிறார்கள். விஜய்சேதுபதியும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ரசிகர்களை சந்தித்து பேசியும், கைகொடுத்தும் வருகிறார். இந்த…

சுல்தான் படப்பிடிப்பு நிறைவடைந்தது…

நடிகர் கார்த்தி தான் நடித்து வரும் சுல்தான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ரஷ்மிகா மந்தான்னா நடிப்பில் ‘சுல்தான்’ படம் உருவாகி வருகிறது. எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, விவேக் -மெர்வின் இசையமைக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி’ படத்தில் நடித்து வந்த போதே ‘சுல்தான்’ படத்திலும் கார்த்தி கவனம் செலுத்தி வந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனாவுக்கு முன் திருச்சி பகுதியில் நடந்தது. . பின்னர் இறுதி…

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு இலங்கையில்

கொரானா பரவல் காரணமாக தடைபட்டிருந்த பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மீண்டும் இலங்கையிலும் சென்னையிலும் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் பட வேலைகளை கடந்த வருடம் தொடங்கினார் மணிரத்னம். இந்தப் படத்தில் நடிக்க விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டனர். தாய்லாந்து காடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இருந்த நேரத்தில்…

இடம் மாறும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு

மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் புதுச்சேரியில் சில நாட்கள் நடந்ததது. அவற்றைத் தொடர்ந்து வடமாநிலங்களில் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனோ வைரஸ் சிக்கல் காரணமாக வடமாநிலங்களில் படப்பிடிப்பு நடத்த இயலவில்லை. அதனால், ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் படப்பிடிப்புத் தளத்தில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டனர்.அங்கும் படப்பிடிப்புகள் இரத்து செய்யப்பட்டன. அதனால் பொன்னியின் செல்வன் வேலைகளும் நின்று போயின. இப்போது மீண்டும் அப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கத்…

படப்பிடிப்புக்கு குஜராத்துக்கு போக தயாராகும் சுந்தர் சி

அரண்மனை, அரண்மனை- 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து அரண்மனை 3 ஆம் பாகத்தைத் தொடங்கியிருக்கிறார் சுந்தர்.சி. இதில் கதாநாயகனாக ஆர்யா நடிக்கிறார், கதாநாயகி கதாபாத்திரத்துக்கு ராஷி கண்ணா தேர்வாகியுள்ளாராம். விவேக், யோகிபாபு ஆகியோரும் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. குஜராத்தில் ஒரு அரண்மனை புதிதாகவும் பிரமாண்டமாகவும் இருக்கிறதென்று, அங்கே போய் பெரும்பகுதிப் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டனர்.பிப்ரவரி 23 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கொரோனா சிக்கல் காரணமாக மார்ச் மாதத்தில்…

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் பாதிக்கப்பட் குடும்பத்தினருக்கு நிதியுதவி

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டது. இந்த வருடம்பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு சென்னை EVP பிலிம் சிட்டியில் நடந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ், சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்திலிருந்து நூலிழையில் கமலஹாசன், இயக்குனர் ஷங்கர் மற்றும்படக்குழுவினர் பலரும் உயிர் தப்பினர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கமல் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் தானும் நூலிழையில் தப்பித்ததாகத் தெரிவித்தார்.தொடர்ந்து…

படப்பிடிப்புக்கு அனுமதி கேட்டு மீண்டும் பாரதிராஜா மனு

தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், சினிமா படப்பிடிப்புகளுக்கும் அனுமதி அளிக்க திரைத்துறையினர் அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை இன்று சந்தித்த இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி உள்ளிட்டோர் இதுகுறித்த கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் பாரதிராஜா, திரைதுறையினர் கஷ்டங்களை அமைச்சரிடம் சொல்லியிருப்பதாகவும், அவர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை தமக்குஇருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள்…

சர்ச்சையில் சிக்கிய இயக்குனர் சுசீந்திரன்

கென்னடி கிளப் படத்துக்குப் பிறகு, சுசீந்திரன் இயக்கும் படத்தில் ஜெய் நாயகனாக நடித்து வந்தார் பெயரிடப்படாத இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்திருக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் தொடங்கும் என்று செய்திகள் வந்தன.ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் கொரோனா ஊரடங்குக் காலத்திலேயே மொத்தப் படப்பிடிப்பையும் சுசிந்தரன் நடத்தி முடித்து விட்டார் என்று கூறி படக்குழுவினர் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். படப்பிடிப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நேரத்தில் இவர் மட்டும் எப்படி படப்பிடிப்பு…

நடிகை சமந்தா வீட்டில் இருந்தபடியே விவசாயம் செய்வதறகான சூப்பர் டிப்ஸ் கொடுத்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். அந்தவகையில் தற்போது நடிகை சமந்தா வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை அவர் வளர்த்து அறுவடை செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ஒரு தட்டு, கோகோபீட், விதைகள் மற்றும் குளிர்ச்சியான அறை மட்டும் கொண்டு சுலபமான முறையில் வீட்டில்…