Browsing: simbhu

சிலம்பரசன் நடிக்கும் பத்துதல அதிகாரபூர்வ அறிவிப்பு

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் (Studio Green) நிறுவனம் வித்தியாசமான முயற்சிகள் மற்றும் தொடர் வெற்றிப் படங்களால் தென்னிந்திய சினிமாவின் மதிப்புமிகு அடையாளங்களுள் ஒன்றாக விளங்குகிறது. 15 வருட வெற்றிகரமான திரைப்பயணத்தில், அவரது தயாரிப்பில் வரிசையில் இருக்கும் அடுத்த கட்டப்படங்கள், கண்டிப்பான வெற்றிப்படங்களுக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது. எஸ் டி ஆர் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்க ஓபிலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் (Studio Green) நிறுவனம் சார்பில்…

T.ராஜேந்தர் மீது நடவடிக்கை – சிலம்பரசனிடம் விசாரணை

நவம்பர் 22 ஆம் தேதி நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தலில் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி பெருவாரியான வெற்றியைப் பெற்றது. டிசம்பர் 2 ஆம் தேதி அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் அவர்கள் அனைவரும் பொறுப்பேற்றுக் கொண்டனர். பொறுப்பேற்றவுடன் முதன்முறை நேற்று ( டிசம்பர் 7 ) செயற்குழுக் கூட்டம் நடந்தது. நவம்பர் 22 அன்று நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற நிர்வாகிகள் பொறுப்பேற்ற பின் தலைவர் முரளி தலைமையில் செயற்குழுக்…

சிம்பு படம் மீண்டும் தொடக்கம்

சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பை முடித்த சிம்பு, உடனடியாக வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படப்பிடிப்பில் கலந்துகொண்டார். படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. முன்புபோல் இல்லாமல், நேரத்திற்கு படப்பிடிப்புக்கு தவறாமல் வந்துவிடுகிறார். இப்போ, சிம்பு  பிஸி நடிகர். கடந்த வருட ஜூன் மாதம் சிம்பு நடிப்பில் ஒரு படம் தயாராகி வந்தது. கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக் தான் அது. அப்படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக் இணைந்து நடித்துவந்தார்.…

சிம்புவுக்கு அம்மா தந்த மினி கூப்பர் கார்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மாநாடு. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்நிலையில், நடிகர் சிம்புவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் அவரின் அம்மாவான உஷா ராஜேந்தர். சிம்புவுக்கு பச்சை நிற மினி கூப்பர் காரை பரிசாக கொடுத்திருக்கிறார். இதனைப் பார்த்து இன்ப அதிர்ச்சியிலேயே உறைந்துப் போய்விட்டாராம் சிம்பு. இதற்கு ஒரே காரணம் தான் சொல்லப்படுகிறது. முன்பு மாதிரி இல்லாமல், சரியான நேரத்துக்கு ஷூட்டிங், குறிப்பாக, தவறாமல் ஷூட்டிங் செல்வதற்காகவே இந்த…

சிம்புவின் அடுத்த பட பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்

இனிமேல் சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது 25 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைக்க தன்னுடைய பழைய தோற்றத்திற்கு மாறியுள்ள சிம்புவின் அடுத்தபடம் அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சிம்பு அடுத்ததாக சுசீந்திரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். 2021 பொங்கல் வெளியீடாக வர இருக்கும் சிம்புவின் அடுத்த பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை இணையதளத்தில் செம ஹிட்டாகியுள்ளது. சிம்பு…

சமூக வலைதளங்களில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் சிம்பு

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் விலகிய சிம்பு, தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் 46-வது படம் இது. பக்கா கமர்ஷியல் படமாக உருவாகிறது. இந்தப் படத்துக்காக சிம்பு உடல் எடையை குறைத்து தயாராகியுள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாரதிராஜா ஒப்பந்தமாகி…

நண்பர்கள் தினத்துக்காக சிம்பு பாடிய பாடல் – இணையத்தில் வெளியானது

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு நடிகர் சிம்பு என் நண்பனே எனத் தொடங்கும் பாடலை தயாரித்து பாடியுள்ளார். நடிகர் சிம்புவுக்கு தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய நண்பர் முகாம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் அவரது வீட்டிலேயே எப்போதும் நண்பர்களுடன் சேர்ந்து பொழுதை போக்குபவர். இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல்நாள் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து அவர் அந்நாளைக் கொண்டாடும் விதமாக என் நண்பனே என்ற பாடலை தயாரித்து பாடி விரைவில் வெளியிட உள்ளார். தற்போது இணையத்தில் இந்த பாடலின் ப்ரோமோ…

குரூப்பிசம் ஒழிக்கப்பட வேண்டும் – சுரேஷ் காமாட்சி

நெப்போடிசம் போன்று குரூபிசம் என்ற வாசம் கோலிவுட்டில் சில நாட்களாக பரபரப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் இயக்குநர் சுரேஷ் காமாட்சி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பாலிவுட்டில் மட்டுமல்லா இங்கும் குரூப்பிசம் உள்ளது. நடிகர்களிடம் உள்ளதோ இல்லையோ ஆனால் ஒரு சில தயாரிப்பாளர்களிடம் குரூப்பிசம் உள்ளது. தான் மட்டும் தான் வாழ வேண்டும் என நினைக்கும் அந்த பிரபல தயாரிப்பாளர் தன் பலத்தால் சில தயாரிப்பாளர்கள் உடன் சேர்ந்து கொண்டு பலரை வாழ…