Browsing: singer

தமிழ்தான் தூய்மையான மொழி என்ற இந்தி நடிகர்!

“உலகிலேயே சுத்தமான மொழி தமிழ்தான், இந்தி அல்ல” இப்படி கூறியிருப்பவர் யார் தெரியுமா? எதற்காக அப்படி கூறினார் தெரியுமா? இந்தி சுத்தமான மொழி, தேசிய மொழி என்று சொல்பவர்களுக்கு ஆயுஷ்மான் குரானா என்ற இந்தி நடிகர் கொடுத்த அதிரடி பதில்தான் இது. இவரது பேச்சு இந்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு நடிகர், இந்தித் திணிப்புக்கு எதிராகவும், தமிழ்மொழிதான் தூய்மையானது என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தாமல் என்ன செய்யும்? இப்போதைக்கு இந்தி…

பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்

பின்னணி பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.  எஸ்.பி.பி.க்கு எக்மோ, இதர கருவிகளுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்  எஸ்.பி.பி. உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. எஸ்.பி.பி.க்கு அதிகபட்சமாக உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சாதனை பாடகி சொர்ணலதா நினைவு நாள் – சிறப்புக்கட்டுரை

தனித்துவமான குரல் வளத்தை பெற்ற பாடகி ஸ்வர்ணலதா. இப்போதெல்லாம் பின்னணி பாடல்களை பாடினால், யாரிந்த பாடலை பாடியது என்றுகண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டமாகி விட்டது. ஆனால் சொர்ணலதா அப்படி ஒரு வாய்ப்பையே ரசிகர்களுக்கு வைக்கவில்லை. இந்த பாட்டு பாடியது ஸ்வர்ணலதாவேதான் என்று உறுதியாகவே தெரிந்துவிடும். அந்த அளவுக்கு ஒரு பரிச்சயம் வாய்ந்த குரல். சொர்ணலதாவுக்கு ஹிட்டாகும் பாடலாகவே கிடைக்குதே என்று ஒரு சிலரும், ஸ்வர்ணலதா பாடினால், அந்தப் பாட்டு நிச்சயம் ஹிட் அப்படீன்னு பல பேரும் பேசத் தொடங்கினார்கள்.…

எஸ்.பி.பியின் உடல்நிலையில் முன்னேற்றம்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்பிபியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார். கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், 22 நாட்களாகச் சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் தற்போது அவர் குணமடைந்து வருவதாக, எம்.ஜி.எம் மருத்துவமனையும், அவரது மகன் எஸ்.பி.பி சரணும் தெரிவித்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் நேற்று மாலை, பாடகர் எஸ்.பி.பி தொடர்ந்து உயிர்…

பாலசுப்ரமணிக்காக உருகிய இளையராஜா பிரார்த்திக்கும் பிரபலங்கள்

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவாக நலம் பெற வேண்டும் என்று இசையமைப்பாளர் இளையராஜா உட்பட பிரபலங்கள் அனைவரும் கூறி வருகின்றனர். கொரானாவால் பாதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், எஸ்.பி.பி விரைவில் குணமடைய வேண்டும் என்று திரையுலகத்தினரும், அவரது ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எஸ்.பி.பியின்…

கேள்விஞானத்தில் பாடகியான வைக்கம் விஜயலட்சுமி

பிரபல பின்னணி பாடகியான வைக்கம் விஜயலட்சுமி, தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை கவர்ந்தவர். கேள்வித் திறனால் சங்கீதத்தில் உள்ள சங்கதிகளை தெளிவாக பாடுபவர். பாடல் மட்டுமல்லாது சிறந்த வீணை கலைஞராகவும் விஜயலட்சுமி இருந்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாடகி வைக்கம் விஜய லட்சுமி தற்போது ‘கால் டாக்ஸி’ படத்தில் இடம் பெறும் ‘கிக்கு செம்ம கிக்கு…’ என்ற பாடலை பாடியுள்ளார். குத்துப்பாடலாக உருவாகி இருக்கும் இந்த பாடலை…