Browsing: snowfall

ஆலங்கட்டி மழை உருவாவது எப்படி?

வானின் உயரமான பகுதிகளில் வெப்ப காலங்களில் கூட கடும் குளிர் நிலவும். இதனால், மேகத்தின் உயர்ந்த பகுதியில் நீர்த்துளிகள், பெரிய பனிக்கட்டிகளாக உறைந்து விடுகின்றன. இவை, ஆலங்கட்டிகளாக மாறுகின்றன. ஆலங்கட்டிகள் வானிலிருந்து வேகமாக விழுகின்றன. இந்தக் கட்டிகள் பெரிதாக இருப்பதால் கரைவதற்கு போதிய அவகாசம் இல்லாமல் சிறு சிறு பனிக்கட்டிகளாகவும் சில நேரங்களில் பெரிய பனிக்கட்டிகளாகவும் பூமியில் விழுகின்றன. பெரிய ஆலங்கட்டிகள் உருவாவது எப்படி? பனிக்கட்டிகள் கனமாக மாறும்போது, அவை கீழே வருகின்றன. ஆனால், குமுலோ-நிம்பஸ் மேகத்திற்குள்…

கடும் பனி மூட்டத்தால் சிக்கித் தவிக்கும் ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெப்பநிலை குறைந்ததால், அபுதாபி, துபாய் உள்ளிட்ட பல இடங்களில் கடும் பனிமூட்டம் நிலவியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீப நாட்களாக குளிர்காலம் தொடங்கியுள்ளதால் வெப்பநிலை வெகுவாக குறைந்துள்ளது. இதில் பகல் நேரத்தில் கடந்த மாதத்தை விட வெப்பநிலை வெகுவாக குறைந்து வருகிறது. காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவும் குறைந்துள்ளது. இதனை அடுத்து நேற்று காலை நேரத்தில் அபுதாபி மற்றும் துபாய் பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக துபாயின் வானுயர்ந்த பல…