Browsing: Solar system

பூமியின் வரைபடம் மாறிய கதை

பூமியின் வரைபடம் ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படி மாறியது என்பதை அறியும்போது ஆச்சரியம் ஏற்படுகிறது. துவக்க கால பூமி, இடைக்கால பூமி, சமீபத்திய பூமி என்று மூன்று காலகட்டங்களாக பிரித்துப் பார்க்கலாம். பூமியின் இடைக்காலத்தை மீஸோஜோயிக் (ஆநளடிணடிiஉ) என்று அழைக்கிறார்கள். பதினெட்டரை கோடி ஆண்டுகளில் இருந்து ஆறரைக் கோடி ஆண்டுகள் வரை இந்த காலகட்டத்தை பிரிக்கிறார்கள். அந்த காலகட்டத்தில் பூமியின் நிலப்பகுதி இரண்டு மிகப்பெரிய ‘சூப்பர்’ கண்டங்களாக பிரிந்து கிடந்தன. தெற்கேயிருந்த நிலப்பகுதி கோண்ட்வானா கண்டம் என அழைக்கப்பட்டது.…

உயிர்கள் வாழும் அழகிய பூமி

சூரியனிலிருந்து மூன்றாவதாக சுற்றுகிறது பூமி கோள். வெள்ளி கோளிற்கும் செவ்வாய் கோளிற்கும் இடையில் பூமியின் சுற்றுப்பாதை அமைந்துள்ளது. பூமியை ஒரே ஒரு நிலவு சுற்றுகிறது. பூமிக்கு மட்டும்தான் ரோமானியர்களின் பெயர் இல்லை. எர்த் என்ற பெயர் பழைய ஆங்கிலச் சொல். ஆனாலும் கூட பூமியை டெர்ரா என ரோமானியர்கள் அழைத்தனர். 12 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியின் பெரும் பகுதி நிலப்பரப்புகள் ஒன்றாக இணைந்திருந்தன. அதை பான்ஜியா என்று அழைக்கின்றனர். சூரியனிலிருந்து 14 கோடியே 96 லட்சம்…

வெள்ளியை ஆராயும் விண்கலம்!

ரோமானிய அழகு தேவதை வீனசின் பெயரால் அழைக்கப்படும் வெள்ளி கோள். அழகான ஆனால் ஆபத்தான இந்த கோளை ஆராய 16 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக ஐரோப்பா விண்கலத்தை அனுப்பியுள்ளது. வீனஸ் எக்ஸ்பிரஸ் என்ற இந்த விண்கலம் 163 நாள் பயணத்தை முடித்து 2006 ஏப்ரல் மாதம் 11ம் தேதி வெள்ளியை சுற்றத் துவங்கியது. வீனஸ் எக்ஸ்பிரஸ் 2006 ஜூன் 4ம் தேதி முதல் தனது ஆய்வை துவங்கியது. சோவியத் ரஷ்யாவின் வெனரா.7 என்ற விண்கலம்தான் முதன்முதல்…

அழகிய வெள்ளியின் அபாயம்

வெள்ளி கோளை வீனஸ் என்று ரோமானியர்கள் அழைத்தனர். பாபிலோனியர்கள் இஷ்டார் என்றும், மயன்கள் மிகப்பெரிய நட்சத்திரம் எனப் பொருள்படும் சாக் எக் எனவும் அழைத்தனர். சில புராதன வானியலாளர்கள் காலையிலும் மாலையிலும் தோன்றும் இது வேறு கோள்கள் என நம்பினர். ரோமானியர்கள் வழிபட்ட அழகு தேவதையின் பெயர் வீனஸ். எனவே வெள்ளி கோளின் அம்சங்கள் அனைத்தும் பெண்களின் பெயர்தான்! ஆண்டுக்கு 224.7 பூமி நாட்கள். வெள்ளியின் குறுக்களவு 12 ஆயிரத்து 103 கி.மீ. சூரியக் குடும்பத்தில் உள்ள…

கோள்கள் எட்டு

ஒரு குடும்பத்தில் எல்லோரும் ஒரே குணம் கொண்டவர்களாக இருப்பார்களா? ஒருவர் எந்நேரமும் கொந்தளிப்பாக இருப்பார். ஒருவர் சாதுவாக இருப்பார். ஒருவர் புரிந்து கொள்ள முடியாதவராக இருப்பார். உருவத்திலும் ஒல்லியாக, குண்டாக, கருப்பாக, சிவப்பாக என வேறுபட்டு இருப்பார்கள். நமது சூரியக் குடும்பம் அதுபோலத்தான். சூரியனும் சரி, மற்ற கோள்களும் சரி ஒவ்வொன்றும் தனிக்குணமுடையவை.வியப்பும், வினோதமும், மர்மமும், பிரமிப்பும் நிறைந்தவையாய் உள்ளன. சூரியனை சுற்றும் கோள்கள் எட்டுதான் என வானியல் அறிஞர்கள் கூறிவிட்டனர். அந்த எட்டு கோள்களைப் பற்றியும்,…