Browsing: south korea

தென் கொரியா தலைநகரில் இந்தியர்கள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி

தென்கொரியா தலைநகர் சியோலில் அங்குள்ள செஜாங் பல்கலைக்கழக (sejong university, south korea) விளையாட்டு மைதானத்தில், சியோல் சூப்பர் கிங் அணி சார்பில் இந்திய மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. (Seoul-indians-cricket-sejong University) தென்கொரியாவின் பல பாகங்களில் இருந்தும் 12 இந்திய அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியை நடத்துவதில் முக்கிய பங்காற்றியது. போட்டியில் ஒய்யூ லெவன் அணி கோப்பையை வென்றது. ரைசிங் ஸ்டார் அணி இரண்டாமிடத்தை பெற்றது. ஒய் யு லெவன் அணி தலைவர்…

கொரியா தமிழ் சங்கத்தின் தமிழர் திருநாள் விழா 2022

கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2022, திருவள்ளுவர் ஆண்டு 2053, தைத் திங்கள் 16 – 17 (29-30 சனவரி 2022) சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்கள் இணையவழி இயங்கலையில் இனிதாய் நடைபெற்றது. கொரியாவில் கரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில் நேரடி நிகழ்வு தவிர்க்கப்பட்டது. நிகழ்விற்கு தென்கொரியாவிற்கான இந்தியத்தூதர் மாண்புமிகு ஸ்ரீப்ரியா ரெங்கநாதன், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை…

பெண்களே ஒருங்கிணைத்த கொரியா தமிழ்ச்சங்க இணையவழி கலை இலக்கிய விழா – 2020

கொரியா தமிழ்ச்சங்கத்தின் கலை இலக்கிய விழா – 2020ஐ இணைய வழி கூடுதலாக சங்கத்தைச் சேர்ந்த பெண்களே ஒருங்கிணைத்து நடத்தினார்கள். இந்த விழாவில் தொடக்க நிகழ்ச்சியாக செல்வன் கவின் பாரதிராஜாவும் சர்வேஷ் பாரதிராஜாவும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தார்கள். நிகழ்வின் நோக்கம் மற்றும் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து முனைவர் சத்யா மோகன்தாஸ் விளக்கம் அளித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் ஆசான் குழந்தைகள் நேயப்பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் ஆசானை அறிமுகம் செய்து சரண்யா…

தனிமனிதனாய் உயர்கல்வி வாய்ப்புப் பெற்றுத்தரும் அசத்தல் ஆரோக்கியராஜ்!

சில அமைப்புகளே செய்ய முடியாத உதவிகளை தனது நல்லெண்ணத்தால் சாதித்துக் காட்டியிருக்கிறார் தென்கொரியாவில் ஆராய்ச்சியாளராக பணிபுரியும் டாக்டர் பேராசிரியர் ஆரோக்கியராஜ். தமிழக அரசின் கல்வித் திட்டத்தில் பெற்ற வாய்ப்புகளை பயன்படுத்தி தென்கொரியாவில் பணிபுரியும் ஆரோக்கியராஜ், தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, தமிழகத்தை சேர்ந்த ஏழைக் குடும்பங்களின் முதல்தலைமுறை பட்டதாரிகள் 8 பேருக்கு உயர்கல்வி வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தார். இப்போது அவர்கள் அனைவரும் நல்ல பணிகளில் இருக்கிறார்கள். இதுகுறித்து அவரிடம் புதியமுகம் இணையதளத்துக்காக பேட்டி கண்டோம். அப்போது அவர்…

அறிவியலாளர்கள் அமைத்த கொரிய தமிழ்ச் சங்கம்!

முன்னுரை பூமிப்பந்தில் பன்னாட்டு தொடர்புகள் உருவாக கடல் ஒரு இயல்பான இணைப்புப் பாதையாக பயன்பட்டு வந்திருக்கிறது. கடல் சூழ்ந்த தமிழர் நிலம் பண்டைய காலம் தொட்டே தமிழ் வேந்தர்களும் தொழில்புரிவோரும் தத்தமது ஆளுகை மற்றும் தொழில் தொடர்பை விரிவாக்கம் செய்ய ஏதுவாய் அமைந்திருந்ததை வரலாறு எடுத்துக்கூறுகிறது. இன்று இணையம் போன்ற மென்-ஆற்றல் (soft power) உதவியுடன் வெளிவந்துகொண்டிருக்கும் தமிழ்-கொரியா மொழி மற்றும் பண்பாட்டு தொடர்புகள் தமிழ்நாட்டிற்கும் கொரியாவிற்குமிடையேயான வரலாற்று தொடர்பை எடுத்துக்காட்டும் வாழ்வியல் கூறுகள் என்றால் அது…

தமிழர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை உற்பத்திப் பொருட்களாக மாற்ற கொரியா தமிழ்ச் சங்கம் கோரிக்கை!

தமிழ் அறிவியல் தொழில்நுட்ப நிபுணர்களின் பயன்தரும் கண்டுபிடிப்புகளை உற்பத்தி பொருட்களாக மாற்றும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என உலகத்ததமிழ் வர்த்தக கூட்டமைப்பின் தலைவரிடம் கொரிய தமிழ்ச் சங்கத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரியா தமிழ்சங்கத்தின் தலைவர் முனைவர் இராமசுந்தரம் உலகத் தமிழ் வர்த்தகக் கூட்டமைப்பு (World Tamil Chamber of Commerce WTCC) மற்றும் உலகத்தமிழ் வம்சாவழி அமைப்பு (Global Organization of Tamil Origin) ஆகியவற்றின் தலைவர் செல்வகுமாருடன் கலந்துரையாடினார். அப்போது, தமது அமைப்பு தமிழரின்…

கோவிட்- 19 டெஸ்ட் கிட்டுகள் கிடைப்பதில் தாமதம்

அடர்த்தியான மக்கள் வாழும் கிளஸ்டர்கள், (கட்டுப்பாட்டு மண்டலங்கள்), புலம்பெயர்ந்தோர் அதிகளவில் வாழும் பகுதிகள், நோய் தடுப்பு மையங்கள் ஆகிய இடங்களில் கடந்த வாரம் மாபெரும் கொரோனா வைரஸ் சோதனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. எனினும், இதற்கு தேவைப்படும் ரேபிட் டெஸ்ட் கிட் சாதனங்கள் வந்து சேராததால், சோதனை முயற்சி தடைபட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் 5 லட்சம் டெஸ்ட் கிட்- கள் உத்தரவிட்டதாகவும், அவற்றில் 2.5 லட்சம் கடந்த வாரம் வழங்கப்பட இருந்ததாகவும்…