Browsing: srilanka

இலங்கையில் இராவணனும் இல்லை; சிவ வழிபாடும் இல்லை- வன்மத்தைக் கக்கிய அமைச்சர்

இலங்கையில் இராவணன் என்ற மன்னனும் இல்லை. சிவ வழிபாடும் கிடையாது” என்று தெரிவித்த முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர, திருக்கோணேஸ்வரம் ஆலயத்திலுள்ள கடைகளைச் சிங்களவர்களுக்குக் கொடுப்பதற்கு ஆலய பரிபாலன சபையே விரும்பும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் எதிர்ப்பது அவர்களின் அரசியல் ஆதாயத்துக்கே எனவும் கூறினார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில்…

முதன்முறையாக இலங்கை இராணுவத்திற்கு அதிரடி தண்டணையை வழங்கிய ஐ.நா

போர்க் குற்றங்களை எதிர்நோக்கியுள்ள 58 இராணுவ அதிகாரிகளை தண்டிக்கும் சர்வதேச பொறிமுறையை ஜெனிவா மனித உரிமைகள் பேரவை நடைமுறைப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி வன்னி நடவடிக்கையை மேற்கொண்ட இராணுவத் தளபதிகள் ஐரோப்பாவில் உள்ள 26 நாடுகள் உட்பட மேற்குலக நாடுகளுக்கு செல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைமீறி குறித்த 58 இராணுவ அதிகாரிகளும் 26 நாடுகள் உட்பட மேற்குலக நாடுகளுக்குச் சென்றால் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இராணுவ அதிகாரிகளின் பெயர்கள் சர்வதேச சட்டம் பொருந்தும்…

டைனோசர் காலத்திற்கு முற்பட்ட ஜெல்லி மீன்கள் இலங்கையில்!-

இலங்கையில் டைனோசர் காலத்துக்கு பல மில்லியன் ஆண்டுகள் முன்பாக உருவானவை என்று நம்பப்படும் ஜெல்லி மீன்களை வயம்ப பல்கலைக் கழகம் கண்டறிந்துள்ளது. மேலும், இந்தப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் மூலம் இலங்கையின் கடற்பிராந்தியத்தில் இதுவரை அறியப்படாத 10 வகையான மெல்லிய மற்றும் வெளிப்படையான கூடாரங்களைப் போன்ற அமைப்பைக் கொண்ட மிதக்கும் காளான்களைப் போன்ற, ஜெல்லி மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை, பூமியில் டைனோசர்களுக்கு முன்னர் பல மில்லியன் ஆண்டுகளாக கடல் நீரோட்டங்களில் அலைந்து திரிந்தவை என்று வட மேல்…

தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்க மு.க ஸ்டாலின் கோரிக்கை!

இலங்கை கற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் விசைப் படகுகளையும் விரைவில் விடுவிக்க வலியறுத்தி வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையினரால் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதுதவிர ஏற்கனவே 95 படகுகளும் 11 மீனவர்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் அண்மையில் 12 தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய நடவடிக்கை…

ராஜபக்ச குடும்பத்தில் எவருக்கும் பதவி ஆசையே இல்லையாம்: சொல்கிறார் கோட்டா!

அரசியலுக்குள் மீண்டும் பிரவேசிப்பது தொடர்பில் நான் இன்னமும் முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில், எனக்குப் பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் யார் முடிவு எடுத்தது?” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார் “நான் பதவி ஆசை பிடித்தவன் என்றால் ஜனாதிபதிப் பதவியிலிருந்தே விலகியிருக்கமாட்டேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழு ஒன்று ஆர்வம் காட்டி வருகின்றது எனவும், குறித்த கட்சியின் பிறிதொரு குழு…

ஈழத் தமிழர் பிரச்சினை விடயத்தில் இந்தியா கரிசனையுடன் செயற்படுகிறதா?

மாகாண சபைகளுக்கான முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு இலங்கைக்கு இந்தியா நேரடி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியா அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தனது கரிசனைகளை வெளியிட்டுள்ளதுடன், 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதனைச் சுரேஷ் பிரேமச்சந்திரன் வரவேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:- “நாம் ஒரு சமஷ்டித்…

இலங்கையை மையப்படுத்தி சீன- இந்திய வல்லாதிக்கப் போர் – வென்றது யார்?

இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடாக, சீனாவைப் பின்தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்த வகையில், இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில், 968 மில்லியன் அமெரிக்க டொலரை இந்தியா, சிறிலங்காவிற்கு கடனாக வழங்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக இலங்கைக்கு, இந்தியா அதிகளவான கடனை வழங்கியிருந்ததுடன், மனிதாபிமான உதவிகளையும் வழங்கியிருந்தது. இதுதவிர, 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 44 ஆயிரம் தொன் யூரியா உரத்தையும், இந்தியா வழங்கியுள்ளது. இலங்கையுடன் நெருங்கிய…

பிரிட்டனின் புதிய பிரேரணையில் இந்தியா நடுநிலைவகிக்கும் சாத்தியம்

ஜெனிவா சென்றுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி இந்த்ரா மணி பாண்டேவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானதுடன், அன்றைய தினமே மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதமும் நடைபெற்றது. அதனையடுத்து இரு தினங்களில் இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் தயாரித்திருக்கும் புதிய…

“தமிழர் தாயகத்தைக் கூறுபோடுவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது”

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களினதும் தமிழ் பேசும் மக்களினதும் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இங்குள்ள மாவட்டங்களைக் கூறுபோட்டு இன நிலத் தொடர்ச்சியைத் துண்டிக்கும் நடவடிக்கையை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டாது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருக்கோணேஸ்வரம் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார். திருக்கோணேஸ்வரத்துக்குள் நுழைவதற்கான பிரெட்ரிக் கோட்டையின்…

புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவழிப்பு செயற்பாடுகளை கண்டித்து ஜெனிவாவில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் இடம்பெற்று வரும் நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் சுவிஸ் தமிழ் செயற்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை…

மதவெறியும் தேசிய வெறியும் சீரழித்த இலங்கை – சிராஜ் மஷ்ஹூர்

இலங்கை போராட்டக் களத்தில் தங்கள் எதிர்காலம் சீரழிக்கப்பட்ட கோபத்தில் கூடியிருக்கிறார்கள் மக்கள். அந்தக் கூட்டத்தில், “அபி பயய்த? (நமக்கு பயமா?)” என்று ஒலிபெருக்கியிலிருந்து ஒரு குரல் கேட்கிறது. “நே…நே… (இல்லை இல்லை..)” என்று சுற்றியிருப்போர் உரத்துச் சொல்கின்றனர். ஜனாதிபதி செயலகத்தைச் சூழவும், காலிமுகத் திடலிலும் அமைக்கப்பட்டிருக்கும் மக்கள் போராட்டக் களம், முக்கியமானதொரு அரசியல் எதிர்ப்புணர்வு வடிவம். அதை ராஜபக்ஷ கம்பனி குறைத்து மதிப்பிட்டார்கள் என்பதுதான் அவர்களது வரலாற்றுத் தவறு. அங்கிருப்போருள் பெருந்தொகையானோர் இளைய தலைமுறையினர். தங்களது எதிர்காலம்…

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த 20 நாட்களேயான குழந்தையின் சடலத்தை ஏற்க பெற்றோர் மறுத்துள்ளனர். பிறந்து 20 நாட்களேயான சிசுவொன்று, கொழும்பு சீமாட்டி ரிஜ்வே மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தநிலையில் உயிரிழந்தது. குறித்த சிசுவின் உயிரிழப்புக்கான காரணம் கொரோனா தொற்றுடன் நிமோனியா காய்ச்சல் எனத் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பி.சி.ஆர் சோதனை குறித்து தங்களிற்கு கரிசனைகள் உள்ளதாக அவர்கள் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளனர். தங்களது மத நம்பிக்கையின் அடிப்படையில் குழந்தையின் உடலை அடக்கம் செய்யுமாறு தாங்கள் வேண்டுகோள் விடுத்ததாகவும்,…