Browsing: stand with farmers

வங்கத்தை உலுக்கிய தேபாகா போராட்டம் – விவசாயிகள் போராட்டம் 1

1946ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் ஒன்றுபட்ட வங்கத்தில் மாபெரும் உழைப்பாளர் போராட்டம் வெடித்தது. அந்தப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியவர்கள் பெண்கள் என்றால் வியப்பாக இருக்கும். விவசாயத்தை பின்புலமாக கொண்ட எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் “நாரி பாகினி” என்ற பெண்கள் படையை முன்னின்று நடத்தினார்கள். தேபாகா என்றால் “மூன்று பங்கு” என்று பொருள். வங்கத்தில் நிலத்தின் உரிமையாளருக்கு, அதில் உழைப்பவர்கள் விளைச்சலில் பாதியை தந்தாக வேண்டும். ஆனால், உழைப்பவர்களுக்கு இரண்டு பங்கும், உரிமையாளருக்கு 1 பங்குமாக குறைக்க…

மீண்டும் ஒரு வர்ணாச்சிரம அடிமைச் சமூகத்தை நோக்கி…?

நில உடமையாளர்களின் வீடுகளில் ஒரு நேர கஞ்சிக்காக நாள்பூரா உழைத்த காலத்துக்கு மீண்டும் இந்தியாவை கொண்டு செலுத்துகிறது பாஜக அரசு என்கிறார்கள். இது கொஞ்சம் அதீதமான கற்பனையாக தோன்றலாம். ஆனால் 1959ல் பிறந்த நான் கண்ட பல காட்சிகளை மீண்டும் நினைவு படுத்திப் பார்க்கிறேன். அந்தக் காட்சிகள், இன்றைய பாஜக அரசின் நோக்கத்தை புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு ஊர் என்றால் அதில் உள்ள சில நில உடமையாளர்களை நம்பியே பெரும்பான்மையான மக்கள் இருந்தார்கள். அவர்களுடைய நிலத்தில் உழைப்பதும்,…

போராட்டத்தை கைவிடுவது குறித்து இன்றே முடிவு எடுக்க வேண்டும் என்று அமைச்சர் தோமர் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 60 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிர், மழைக்கும் மத்தியிலும் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்த போராட்டத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இதுவரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டத்தை நிறுத்த, மத்திய அரசு மேற்கொண்ட எந்த முயற்சியும் பலனலிக்கவில்லை. இதுவரை விவசாய அமைப்புகளுடன் நடத்தப்பட்ட 9 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தது. தங்களின் கோரிக்கையை…

விவசாயத்தை (யும்) கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் மோடி அரசு

அம்பானி, அதானி மற்றும் பிற கார்பரேட் பெரு முதலாளிகளின் நிறுவனங்கள் இந்தியாவின் உணவு தானியங்கள் சந்தையில் களம் இறங்கினார்கள், ஆனால் அங்கே ஏராளமான பிரச்சனைகள் அவர்களுக்காக காத்திருந்தன. பிரச்சனை 1 : இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் உணவு தானியங்கள் தொடர்பாக வெவ்வேறு சட்டங்கள், நடைமுறைகள் இருந்தன. அதனால் உணவு தானியங்களை கொள்முதல் செய்வதில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வழிமுறைகளை அவர்கள் கையாள வேண்டியதிருந்தது. மோடியின் தீர்வு: மாநிலங்களிடமிருந்து இந்த உரிமைகளை கையகப்படுத்தி ஒரே நாடு ஒரே…

கலைஞரின் கண்மணி கனிமொழி கலக்குகிறார் கொங்கு மண்டலத்தை! –

பெயருக்கேற்ற கனிவுடன் கனிமொழி களத்தை கையாள்கிறார். கற்றறிவாளர் உலகம் அவருடைய நடவடிக்கைகளை கவனமாக நோக்குகிறது. ஆளும் அரசாங்கம் கனிமொழியை ஒரு பெண்புலியைப் போல பார்த்து அஞ்சுகிறது. வடக்கு மாவட்டங்களில் கனிமொழி ஏற்படுத்தும் தாக்கத்தையும், மக்களுடைய வரவேற்பையும் மக்களிடம் இருந்து திசைதிருப்ப அதிமுகவின் வன்முறைக் கூட்டாளி பாமக வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. தலைநகர் டெல்லியை வடமாநில விவசாயிகள் முற்றுகையிட்டு மோடியை மூச்சுத் திணறச் செய்கிறார்கள். உயிரைப் பணயம் வைத்து தங்கள் உயிரான விவசாயத்தைக் கார்பரேட்டுகளிடம் இருந்து காப்பாற்ற…

விவசாயிகளை மோடி நேரில் சென்று சந்திக்க வேண்டும் – திமுக கூட்டணி காட்டமான அறிக்கை!

குறைந்தபட்ச ஆதார விலை, இலவச மின்சாரத்தை மறுத்து – விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து, கார்ப்பரேட்டுகளுக்கு உதவும் பாஜக அரசின் தந்திரம் புரிந்து டெல்லியை முற்றுகையிடுகிறார்கள் விவசாயிகள்! அவர்களின் உணர்வுகளைப் புரிந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் விவசாயிகளுடன் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்! மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக அங்கேயே அறிவிக்க வேண்டும் என்று திமுக கூட்டணியின் அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.