Browsing: students

பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் கிடையாது – பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டங்கள் வழங்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டியலினத்தவர்களுக்கு பொருட்கள் தரக்கூடாது என ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகவும், இனிமேல் யாரும் திண்பண்டங்கள் வாங்க வர வேண்டாம் எனவும் இனி பொருட்கள் தரமாட்டார்கள் என வீட்டில் போய் சொல்லுங்கள் என கடை உரிமையாளர் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பெட்டிக்கடை உரிமையாளர் மகேஷ்வரன்…

பிரான்சில் 300 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த வழக்கு: 70 வயது மருத்துவருக்கு சிறை

பிரான்சில் 300 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் 70 வயது டாக்டருக்கு அதிகபட்ச சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. பிரான்சில் 300 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக டாக்டர் ஜோயல் லே ஸ்கவுர்னெக் என்பவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த 70 வயது டாக்டருக்கு எதிரான குற்றச்சாட்டில் தற்போது 4 வழக்குகளில் மட்டும் அவர் குற்றவாளி என தீர்ப்பாகியுள்ளது.ஆனால் 1986 முதல் 2014 வரை சுமார் 312 சிறுவர்களை அவர் துஷ்பிரயோகம் செய்து உள்ளார்…

தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இருப்பினும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து இளநிலை முதலாம், இரண்டாம் ஆண்டு, பிஇ உள்ளிட்ட கல்லூரி மாணவர்களுக்கு பருவ தேர்வு ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வு ரத்து செய்ய யுஜிசி ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டன. செப்டம்பர் 24ம் தேதி…

முதுகலை படிப்புக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கியது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று முதல் தொடங்கியுள்ளன. கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்டிருந்த மாணவர் சேர்க்கை அண்மையில் தொடங்கியது. விண்ணப்பம், கலந்தாய்வு என அனைத்தையும் ஆன்லைன் வழியாகவே செய்யுமாறு அரசு அறிவுறுத்தியதன் பேரில், ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்பங்கள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான இளங்கலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் தொடங்கிய நிலையில், நேற்று முதுகலை படிப்புக்கான அறிவிப்பை உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார். அதாவது, நவம்பர் 20ம்…

அரியர் மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை -அமைச்சர் அன்பழகன்

இன்ஜினீயரிங் உள்பட கல்லூரி இறுதிப் பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவப் பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்திக் காத்திருக்கும் மாணவர்களுக்குத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். பல ஆண்டுகளாக அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் தேர்வு எழுத பணம் செலுத்தியிருந்தால் அவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் மறுபக்கம், பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று AICDE மின்னஞ்சல் வாயிலாக கடிதம் அனுப்பியதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்திருந்தார்.…

தமிழ்நாடு அரசின்அரியர் தேர்வு ரத்து ஆணை தவறானது – ஏஐசிடி தலைவர்

அரியர் தேர்வை ரத்து செய்த முடிவு தவறானது என்று ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்துள்ளார். தமிழகத்தில், அரியர் தேர்வுக்காகப் பணம் கட்டி காத்திருந்த மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு மாணவர்கள் வரவேற்பும், கல்வியாளர்கள் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். அரியர் தேர்வு ரத்துக்கு எதிராக அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த…

மாணவர்களின் மனதில் ஹீரோவான வில்லன் சோனு சூட்

கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி, அருந்ததி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடிகர் சோனு சூட் நடித்துள்ளார். தனது படங்களில் வில்லன் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் சோனு சூட், நிஜ வாழ்க்கையில் பலருக்கும் ரியல் ஹீரோவாக இருந்து வருகிறார். குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில், பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினருக்கும் நடிகர் சோனு சூட் மற்றும் அவரது குழுவினர் உதவி செய்து வருகின்றனர். தற்போது, சர்வதேச விமான சேவை தடையால், ரஷ்யாவில் சிக்கியிருந்த தமிழக மருத்துவ…

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு 92.3 சதவீதம் பேர் தேர்ச்சி – இந்த ஆண்டும் மாணவிகள் சாதனை

பிளஸ்2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதில் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவியரே அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த ஆண்டின் மொத்த தேர்ச்சி வீதம் 92.3 சதவீதம். இது கடந்த ஆண்டைவிட 1 சதவீதம் அதிகம். தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 7,127 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் தனி தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று காலை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி முதல் 24ம் தேதி…

கணித ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆன்லைன் பயிற்சி – பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

தமிழகத்தில் கணித ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு கணித ஆசிரியர்களை திறன்மிக்கவர்களாக மாற்ற 10 நாள் ஆன்லைன் சிறப்பு பயிற்சிக்கு பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. முதுநிலை பட்டதாரி கணித ஆசிரியர்களுக்கு e – box நிறுவனம் சார்பில் ஆன்லைனில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கணித பாடத்தை மேலும் எளிதாக்கவும், ஆழமாக கற்பிக்கும் வகையிலும், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குக் கணிதம் குறித்த புரிதலை மேம்படுத்துவதற்காகவும்…

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் – அமைச்சர் செங்கோட்டையன்

ஜூன் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 10ம் வகுப்பு தேர்வு அட்டவணை ஜூன் – 1 – மொழிப்பாடம் ஜூன் 3 – ஆங்கிலம் ஜூன் 5 – கணிதம் ஜூன் – 8 அறிவியல் ஜூன் 10 – சமூக அறிவியல் மார்ச் 24ம் தேதி நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வை, பஸ் வசதி இல்லாததால், 36,842 மாணவர்கள் எழுத இயலவில்லை.…