Browsing: sun

வானவில் உருவாவது எப்படி?

இரவு நேரங்களில் வானவில்லை காணமுடியாது. மேகக் கூட்டங்கள் இருக்கும் போதும், மழை பெய்யும் போதும் வானவில் தோன்றாது. மழை பெய்து முடித்த பிறகு அல்லது வெயில்மழை பெய்து கொண்டிருக்கும்போது வானவில் தெரியும். வானில் உள்ள நீர்த்துளிகள் மீது சூரிய ஒளி படும்போது, சூரியஒளி வானவில்லாக பிரதிபலிக்கிறது.

சில நேரங்களில் வெயில் அடிக்கும்போதே, மழை பெய்வது ஏன்?

வெயில் அடித்துக் கொண்டிருக்கும். ஆனால், மழை தூறிக் கொண்டிருக்கும். இதை வெயில் மழை என்கிறோம். மேகமே இல்லாமல் இந்த மழை பெய்யும். எங்கோ தூரத்தில் இருக்கும் மேகத்திலிருந்து மழையை காற்று இழுத்துவரும். அல்லது, வெகு உயரத்தில் இருக்கும் மேகத்திலிருந்து மழை பெய்யும். அது பூமியை வந்தடையும்போது மேகம் மறைந்திருக்கும்.

”சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் ‘டி’

உடலுக்கு தேவையான வைட்டமின் ‘டி’ சத்தை சூரியனிலிருந்து பெறுவதற்கு குளிர்காலங்களில் 2 மணிநேரம் வரை சூரியன் உடலில் படும் படி நடமாட வேண்டும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. D என்ற ஆங்கில வார்த்தைக்கு ஒரு சிறப்பு உண்டு. D என்ற ஆங்கில எழுத்தில் தான் DISEASE ( நோய்), DOCTOR ( மருத்துவர்) DRUGS ( மருந்து), DEATH ( மரணம்) ஆகிய நான்கு வார்த்தைகளும் வருகிறது. இந்த டியை சரியாக வைத்துக் கொண்டால் DEFINITELY (உறுதியாக)…

வீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்

சோலார் பேனல்கள் சூரியனிடம் இருந்து வரும் ஒளி ஆற்றலைப் பயன்படுத்தி தான் மின்சாரத்தை உருவாக்குகின்றன. நமது சூரியன் ஒரு சிறந்த அணுக்கரு இணைவு நடக்கும் அணு உலை போன்றது. அதாவது சூரியனின் மையப்பகுதியில் தொடர்ந்து ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் அணுக்களை உருவாக்குகின்றன. இவ்வாறு நடைபெறும் அணுக்கரு இணைவு நிகழ்வின் போது மிக அதிகமான ஆற்றல் வெப்பமாகவும் ஒளியாகவும் வெளியிடப்படுகிறது. இப்படி சூரியனில் இருந்து வெளிவரும் ஒளியில் ஃபோட்டான்கள் இருக்கும். இந்த போட்டான்கள் சூரியனில் இருந்து பூமிக்கு…