Browsing: Supreme Court

எட்டு வழி சாலைக்கு தடை தொடரும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

சேலம் – சென்னை இடையே எட்டு வழிச்சாலை அமைப்பது தொடர்பான விசாரணையில் தடையை தொடர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் – சென்னை இடையே எட்டு வழி சாலை அமைத்தல் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு வந்த நிலையில் அப்பகுதி மக்கள் பலர் எட்டுவழி சாலை திட்டத்தை நிறைவேற்ற கூடாது என கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக நடைபெற்ற நிலையில் அவசர அவசரமாக நிலங்கள் கையகப்படுத்தப்படுவது ஏன் என கேள்வியெழுப்பியதுடன் சுற்றுசூழல் அனுமதி பெறாமல்…

நில அபகரிப்பு தடை சட்டத்தை நிறைவேற்ற மதுரை கிளை நீதிமன்றம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தொடங்கும் முன்பாக நில அபகரிப்பு தடை சட்டத்தை நிறைவேற்ற மதுரை கிளை நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் சமீப காலமாக மதுரை உயர்நீதிமன்ற கிளை மக்களுக்கான பொது பிரச்சினைகள் குறித்த பல்வேறு வழக்குகளை தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் இன்று நில அபகரிப்பு வழக்கு விசாரணையில் கருத்து கூறிய மதுரை கிளை நீதிபதிகள் தரிசு…

உச்சநீதிமன்றத்திற்கு முதன் முறையாக பொங்கல்விடுமுறை அறிவிப்பு

உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாகப் பொங்கலுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைகளுக்கும் வடமாநில பண்டிகைகள் சிலவற்றுக்கும் மட்டுமே இதுவரை உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் முதன்முறையாகத் தமிழர்களின் முக்கியப் பண்டிகையாகக் கருதப்படும் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொங்கல், மகர சங்கராந்தி, பிஹூ ஆகிய பண்டிகைகளுக்கு ஜனவரி 14 மற்றும் 15ஆம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்படுவதாக நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம்…

“பேரறிவாளனுக்கு மேலும் 90 நாட்கள் பரோல் கோரி மனு”

பேரறிவாளனுக்கு மேலும் 90 நாட்கள் பரோல் கோரி தாக்கல் செய்த மனுவை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் கடந்த மாதம் பத்தாம் தேதி 30 நாட்கள் பரோலில் வந்தார். அதன்படி சென்னை புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டவர், ஜோலார்பேட்டையில் உள்ள தனது இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று மற்றும் நரம்பியல்…

‘மருத்துவ படிப்பில் இந்தாண்டு ஓபிசி இடஒதுக்கீடு கிடையாது’

மருத்துவப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீட்டை இந்தாண்டு நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கிய 50 சதவீத மருத்துவ இடத்தில் 50 சதவீதத்தை தமிழக ஓபிசி பிரிவினருக்கு தர கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வகையில் இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த கோரிய வழக்கில் இவ்வாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழகத்தில் இருந்து ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 50 விழுக்காட்டை மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க…

அருந்ததியினருக்கு 3 சதவிதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 2009ல் அருந்ததியினருக்கு திமுக அரசு 3% உள் ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வழக்கின் பின்னணி!! 2009ம் ஆண்டு அப்போதைய திமுக அரசு பட்டியலின பிரிவில் உள்ள அருந்ததியினர் சமூகத்தினருக்கு 3% உள் இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில்…

மன்னிப்பு கோர முடியாது நீதிமன்ற நடவடிக்கை எதிர்கொள்வேன் – பிரசாந்த் பூஷன்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தான் மன்னிப்பு கோர முடியாது என்றும், எந்த தண்டனை கொடுத்தாலும் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்க தயார் என்றும் பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கை பொறுத்தவரையில் நீதிமன்றத்தையும், உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் அவமதிக்கும் வகையில் பிரசாந்த் பூஷண் கருத்துக்கள் தெரிவித்தார் என்பது புகார். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து வழக்கின் விசாரணை கடந்த 14ம் தேதி நடைபெற்றது.அப்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என…

நீட் தேர்வு நடைபெறுமா நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு

கொரானா தொற்று பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதுபோலவே மே மாதம் நடத்தப்படும் மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய நீட் நுழைவுத் தேர்வு இதுவரை நடைபெறவில்லை. இதனிடையே ஜேஇஇ மெயின் தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13ஆம் தேதி நடக்கும் என தேசிய தேர்வு முகமை ஜூலை 3ஆம் தேதி அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு…

கொரோனா தொற்று பரிசோதனையை கட்டணமில்லாமல் செய்ய வேண்டும் – சுப்ரீம் கோர்ட்

மத்திய சுகாதாரத்துறை, நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. அதில், புதிதாக 773 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும், இதுவரை மொத்தமாக 5274 பேராக பாதிப்பட்டுள்ளனர் எனவும், பலி எண்ணிக்கை 149 அதிகரித்துள்ள்ளது எனவும் 411 பேர் மீண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில், அரசு பல்வேறு நவவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று இலவச பரிசோதனை தொடர்பான அரசாணையை வெளியிட மத்திய அரசுக்கு…