Browsing: Suriya

சூர்யா அறிக்கைக்கு பாரதிராஜா பாராட்டு

பிரபல நடிகர் சூர்யா நேற்று நீட்தேர்வு குறித்தும், நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்தது குறித்தும் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார் என்பதை பார்த்தோம். இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூர்யாவுக்கு ஆதரவாக ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி அதனை சூர்யா ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் சூர்யாவின் அறிக்கைக்கு எதிராக கண்டன கருத்துக்களும் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சூர்யாவின் அறிக்கைக்கு பல திரையுலக பிரபலங்கள் பாராட்டு…

வெற்றிமாறன் இயக்கத்தில் முதல்முறையாக சூர்யா நடிக்கும் வாடிவாசல்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைபெற்றுள்ளது. ‘காப்பான்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ‘அருவா’, ‘வாடிவாசல்’ திரைப்படங்களில் அவர் நடிக்கவுள்ளார் இதில் ‘வாடிவாசல்’ திரைப்படம் சூர்யா நாயகனாக நடிக்கும் 40வது படம்வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும். இப்படத்தைத் விகிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். சி.சு. செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலை…

காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க நானும் சூர்யாவும் தயார் என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் கடந்த வாரம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை சூர்யாவும், ஜோதிகாவும் வீட்டில் இருந்தபடியே விளம்பரப்படுத்தி வந்தனர். அதன் ஒருபகுதியாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது, ரசிகர் ஒருவர் ஜோதிகாவிடம் காக்க காக்க 2-ம் பாகம் உருவானால் சூர்யாவுடன் நடிப்பீர்களா? என கேட்டார். இதற்கு பதிலளித்த ஜோதிகா, ‘கவுதம் மேனன் காக்க காக்க 2 படத்திற்காக சுவாரஸ்யமான கதையுடன்…

பார்வையாளராகவும் தயாரிப்பாளராகவும் ‘பொன்மகள் வந்தாள்’ படம் திருப்தி – சூர்யா

அமேசான் ப்ரைமில் இன்று வெளியாகியிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை குறித்து, “ஒரு பார்வையாளராகவும், தயாரிப்பாளராகவும்” திருப்தி அடைந்ததாக சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சூர்யா கூறுகையில், “ஒவ்வொரு நடிகருக்கும் அதிக முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்க சில படங்கள் அமையும். ஜோதிக்காவுக்கு அப்படியொரு படம் இது. ஒரே படத்தில் ஐந்து மூத்த நடிகர்களுடன் பணியாற்றுவதில் அவர் உற்சாகமடைந்தார். ஒரு இளம் இயக்குனர் இவ்வளவு தீவிரமான ஸ்கிரிப்டை எங்களிடம் கொண்டு வருவதைப் பார்ப்பது மிகவும் பாராட்டத்தக்கது. இந்த தொற்றுநோயின் சோதனை…