Browsing: surya

சூரரைப் போற்று இந்தி ரீமேக்

சூரரை போற்று திரைப்படத்தில் இந்தியில் ரீமேக் செய்து தயாரிக்க உள்ளார் சூர்யா. நடிகர் சூர்யா தயாரித்த நடித்திருந்த சூரரைப் போற்று. இப்படத்தை இறுதிச் சுற்று என்ற படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கினார். சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்தார். ஜி.வி.பிரகாஸ் இசையமைத்தார். இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்துடன் இந்தி, தெலுங்கு, கன்னட,மலையாளப் பட நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் இப்படத்தைப் பாராட்டினர். இதனால் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக்…

கே வி ஆனந்த் என்றொரு கேமராக் காதலன் – LR. JAGATHESAN

முகத்தில் எப்போதும் முகிழ்க்கும் சிரிப்பு; அதில் நிரந்தரமாய் ஒளிந்திருக்கும் குரும்பு; தோளில் தொங்கும் கேமெரா பை; கனமான சரீரம். ஆனால் அவனது சுறுசுறுப்புக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது. அப்படித்தான் கே வி ஆனந்த் எனக்கு அறிமுகமானான். அடையாரில் இருந்த ASIDE என்கிற சென்னை நகர சஞ்சிகையின் அலுவலகத்தில். பார்த்த உடன் பிடித்துப்போகச்செய்யும் இயல்பு அவனுக்கு. எல்லோரோடும் நட்போடும் இயல்பாகவும் எந்தவித பந்தாவும் இல்லாமல் பழகக்கூடியவன். அவனோடு ஒரே ஒருமுறை பழக நேர்ந்தாலும் உங்களுக்கு அவனை கண்டிப்பாக பிடித்துப்போகும்…

விக்னேஷ் சிவன் – விஜய்சேதுபதி இணையும் படம் தொடக்கம்

2018 ஜனவரியில் வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம். சூர்யா நடித்த அந்தப்படத்தை விக்னேஷ்சிவன் இயக்கியிருந்தார். அதற்கடுத்து அவர் இயக்கும் படம் காத்து வாக்குல் ரெண்டு காதல். இப்படம் குறித்த அறிவிப்பு 2020 பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாகவும் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் கதாநாயகிகளாகவும் நடிக்கிறார்கள். இப்படத்தை லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. காதல் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் திரைக்கதை…

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்திருக்கிறார் – சூர்யா

சூர்யா நடித்து, தயாரித்துள்ள படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள இப்படம் இன்று நள்ளிரவில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து, படத்தின் இறுதிக்கட்ட ப்ரோமோஷன் பணிகள் முழுவேகத்தில் நடந்து வருகின்றன. சமீபத்தில் நடிகர் சூர்யா தனது ரசிகர்களிடம், சூரரைப் போற்று படத்தின் இணையதளத்தில் தங்களது கையெழுத்தை பகிருமாறும், ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என்றும் கூறிருந்தார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் தங்களது கையெழுத்தை, அந்த இணையதளத்தில் பகிர்ந்தனர். இந்தநிலையில், கூறியவாறே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்திருக்கிறார் சூர்யா.  சூரரைப் போற்று இணையதளத்தில் பகிரப்பட்ட கையெழுத்துகள், ஸ்பேஸ் பலூன் மூலம் வானின் உயரமான இடத்திற்குப் பறக்கவிடப்பட்டுள்ளது. ஜெர்மனி குழு ஒன்று இதனைச் செய்துள்ளது. ரசிகர்களின் கையெழுத்துகள் பறக்கவிடப்பட்டதை, சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் …

தடையில்லா சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஆனது குறித்து சூர்யா பதிலளித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஆனது குறித்து சூர்யா பதிலளித்துள்ளார். நடிகர் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது.  இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டு வந்த நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சூர்யா அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக காவல்கட்டுப்பட்டு அறைக்கு மர்மநபர் மிரட்டியுள்ளார். மிரட்டலை அடுத்து மோப்ப நாயுடன் சென்று வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது.

நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக 25 வழக்கறிஞர்கள் கடிதம்

நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு 25 வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், சுதா ராமலிங்கம் உள்பட 25 வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். நடிகர் சூர்யா மீதான நடவடிக்கை கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

நீட் விவகாரத்தில் சூர்யாவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆதரவு

நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யாவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். நீட் தற்கொலை விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அவை சமூக வலைதங்களில் மிக வேகமாக பரவி, பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. மேலும் அந்த அறிக்கையில், நீதிமன்றத்தை குறிக்கும் ஒரு செய்தியையும் நடிகர் சூர்யா பதிவிட்டிருந்தார். ‘கொரோனா தொற்று காரணமாக உயிருக்கு பயந்து, நீதிமன்றமே வழக்குகளை வீடியோ கான்ஃபிரசின் மூலம் நடத்தி வரும் நிலையில், மாணவர்கள் தேர்வெழுத…

சூர்யாவுக்கு ஆதரவாக ப. நெடுமாறன்

நீட் தேர்வு – பொதுவாக்கெடுப்பு நடத்தத் தயாரா? என்று மத்திய அரசுக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் அறைகூவல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்….. நீட் தேர்வு அச்சத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதாகத் தொடர்ந்து வரும் செய்திகள் தமிழக மக்களைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. அரசு நடத்தும் மேநிலைப் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றிப் பெற்ற மாணவர்கள் குறிப்பிடப்பட்ட சதவிகித மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, மருத்துவம், பொறியியல் மற்றும் மேல் படிப்புகளுக்கு உரியவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.…

சூர்யாவுக்கு எதிரான கடிதம் நள்ளிரவில் கசிந்தது எப்படி

நீட் தேர்வு குறித்த அறிக்கையில் நீதிமன்ற நடவடிக்கையை விமர்சித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழின் இணையப் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து வேதனை தெரிவித்து நடிகர் சூர்யா நேற்று இரவு எட்டு மணியளவில் அறிக்கை…

1 2 3