Browsing: t.n.assembly

திமுகவில் தலித் மாவட்டச் செயலாளர்களை அதிகரிக்க ஸ்டாலினுக்கு வாய்ப்பு!

சில விஷயங்களை சரிசெய்வதற்கான வாய்ப்பை காலம் உருவாக்கிக் கொடுக்கும். அந்த வகையில் திமுகவுக்கு எதிரான மிக முக்கியமான குற்றச்சாட்டை நிவர்த்தி செய்ய அந்த இயக்கத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காலம் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்றே கருதுகிறேன். திமுக தலித் விவகாரங்களில் முன்னைப்போல இல்லை என்ற குற்றச்சாட்டு சமீபகாலமாக ஒலித்து வருகிறது. திமுகவில் இருக்கிற தலித் மக்களோ, தலித் வகுப்பைச் சேர்ந்த நிர்வாகிகளோ கொள்கைரீதியாக இயக்கத்தோடு இணைந்து இயங்கினாலும், எதிரிகளின் குறி தலித் மக்களை திமுகவுக்கு எதிராக…

செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுகவினரே பாஜகவில் சேரும் அவலம்!

செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டு 09 மாதங்கள் ஆகின்றன. இதுவரை தி.மு.க.வில் பொறுப்பாளர் நியமிக்கப்படவில்லை. இத்தனைக்கும் செய்யூர், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகின்றன.. திமுகவில் மாவட்டப் பொறுப்பாளர் இல்லாத காரணத்தால் மதுராந்தகத்தைச் சுற்றியுள்ள கிராம கிளைகளில் தி.மு.க.வை சேர்ந்தவர்களே பா.ஜ.க.வில் சேர்க்கப்படுகிறார்கள். இது திமுக தலைமைக்கு தெரியுமா என்று தெரியவில்லை. மதுராந்தகமும் ,செய்யூர் தொகுதியும் தனித் தொகுதிகள் ஆகும். ஆனால், இந்த மாவட்டத்தில் ஒரு தலித் ஒன்றிய செயலாளர்கூட இல்லை. இதைப் பயன்படுத்தி, பாஜக…