Browsing: tamil periyarkal

6. ஜ்யார்ஜ் ஜோஸப் – TAMIL LEADERS – 6

தனித்தமிழ் நெடுங்கணக்குக்கும் (எழுத்துக் கூட்டத்துக்கும்) தனித்தமிழ் ஒலிக்கும் கட்டுப்படாத, அந்நிய நாட்டுப் பெயரைக் கொண்ட ஜ்யார்ஜ் ஜோஸப் அவர்களும் தமிழரா, தமிழ் நாட்டுத் தலைவரா என்று சிலர் உறுமிக் கொண்டு கேட்கலாம். அப்படிப் பார்த்தால், 100 – க்குத் தொண்ணூறு தமிழ் நாட்டுத் தலைவர்களைத் தேசப்பிரஷ்டம் செய்ய வேண்டியதுதான். ராமசாமி நாயக்கர் கன்னடியர். வரதராஜுலு நாயுடு தெலுங்கர். சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் ரத்தத்தில் ஆரியம் கலப்பு ( ! ) என்று சொல்லிவிடலாம். திரு. வி. கலியாண சுந்தர…

5. டாக்டர். டி.எஸ்.எஸ். ராஜன் – TAMIL LEADERS – 6

மதன்லால் திங்ராவின் செயலைத் தீவிர தேச பக்தரும் தலைவருமான விபின் சந்திர பாலரும் கண்டித்தார். (அப்பொழுது அவர் லண்டனில் இருக்கிறார். வருஷம் 1909). மதன்லாலோடு கூட வசித்தவர் டாக்டர் ராஜன். தன்னைத் தூக்கில் போட்டு விடுவார்கள் என்று திங்ராவுக்குத் தெரியும். சாகுமுன் மதன்லால், ராஜனைப் பார்க்க விரும்பினான். ராஜன் மதன்லாலை, சிறையில் பேட்டி கண்டார். இந்தியாவில் இந்தக் கொலை நடந்திருப்பின், ராஜன் அவர்கள் பேரிலும் உடந்தைக் குற்றம் சாட்டப் பெற்று, அவர் உயிர் துறந்திருக்க வேண்டும். ஆனால்…

4. டாக்டர் பி. வரதாஜுலு நாயுடு – TAMIL LEADERS – 5

வங்காளத்தில் பிறந்த ‘‘வந்தேமாதரம்’’ கரை மார்க்கமாய்த் தமிழ்நாட்டுக்கு வந்ததோ அல்லது கடல் மார்க்கமாய் வந்ததோ சந்தேகம். கடல் மார்க்கமாய்த்தான் வந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் தூத்துக்குடியில் மட்டும் இவ்வளவு வந்தே மாதரக் கூக்குரல் ஏன்? ஸ்ரீமான்கள் சிதம்பரம் பிள்ளையும், சுப்பிரமணிய சிவமும் சிறைக்குச் சென்றார்கள். சுப்பிரமணிய பாரதியார் புதுச்சேரிக்குப் போய்விட்டார். ‘சுதேசமித்திரன்’ ஆசிரியர் சுப்பிரமணிய அய்யர் சர்க்காரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். திருநெல்வேலிச் சதிக் கூட்டத்தார், சிறைக்குள் தள்ளப்பட்டனர். இத்தனை ‘‘வைபவங்களுக்கிடையே’’ தமிழர்களின் நாடி எப்படி அடித்துக் கொண்டிருக்கும்…

3. திரு.வி. கலியாண சுந்தர முதலியார் – TAMIL LEADERS – 4

பாலுக்கு நிகரான கதர் உடையைத் தரித்துக் கொண்டு, இடது கை ஆட்காட்டி விரலால், எச்சரிக்கைப் பாணப் பிரயோகம் செய்வதுபோல, உச்சிக் குடுமி சகிதமாய், நெற்றியில் அழகான சந்தனப் பொட்டுத் துலங்க, அதோ, தேன் மொழிப் பிரசங்கம் செய்கிறாரே, அவரை உங்களுக்குத் தெரியுமா? அவர்தாம், குழைந்து குழைந்து கொஞ்சுவதைப் போலப் பேசும் கல்யாண சுந்தர முதலியார். வாய்தான் வலிக்காதா? வார்த்தைக்கேனும் தடை கிடையாதா? ராமஸ்வாமி நாய்க்கரின் பிரசங்கம் கூடுவாய் மூலை மழை; அது கடகடவென்று கொட்டித் தீர்த்து விடும்.…

வ.ரா.வின் பார்ப்பனப் பார்வையில் தலைவர்கள்! 1

தமிழ் சிறுகதைகளின் பிதாமகன் என்றழைக்கப்படும் வ.வே.சுப்பிரமணியம், மகாகவி பாரதியார் மற்றும் அரவிந்தர் ஆகியோரின் நெருங்கிய நண்பராகத் இருந்தவர் வ.ராமசாமி என்கிற வ.ரா. முற்போக்கு சிந்தனைகொண்ட வ.ரா.,வை ‘அக்ரஹாரத்தின் அதிசய மனிதர் என்றார் அறிஞர் அண்ணா. சுதந்தரன், பிரபஞ்சமித்திரன், தமிழ்நாடு,சுயராஜ்யா, வீரகேசரி, பாரததேவி, மணிக்கொடி முதலான தமிழின் முக்கிய செய்தி மற்றும் சிற்றேடுகளில் பொறுப்பு வகித்த வ.ரா., பத்திரிகைத்துறையில் கல்கி, புதுமைப்பித்தன் ஆகியோருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். வங்காள மொழியில் பக்கிம்சந்திர சட்டர்ஜி எழுதிய கவிதைகளை தமிழில் வ.ரா., மொழிப்…