Browsing: Tamil words in Korean language

கொரியா தமிழ்சங்க பொங்கல் விழாவுக்கு அமைச்சர் பொன்முடி வாழ்த்து!

தென்கொரியா தலைநகர் சியோலில், கொரியா தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் விழா 2022, திருவள்ளுவர் ஆண்டு 2053, தைத் திங்கள் 16 – 17 (29-30 சனவரி 2022) சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்கள் இணையவழி இயங்கலையில் இனிதாய் நடைபெற்றது. கொரியாவில் கரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில் நேரடி நிகழ்வு தவிர்க்கப்பட்டது. நிகழ்விற்கு தென்கொரியாவிற்கான இந்தியத்தூதர் மாண்புமிகு ஸ்ரீப்ரியா ரெங்கநாதன், மாண்புமிகு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, ஆகியோர் வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பியிருந்தனர்.…

கொரியா தமிழக உறவுகளுக்கு இலக்கிய – அறிவியல் சான்றுகளுடன் உலகத் தமிழ்ச்சங்க கருத்தரங்கில் முனைவர் ஆரோக்கியராஜ் பேச்சு!

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் கொரியத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் ‘கொரியத் தமிழரும் தமிழும்’ இணையவழி ஆய்வரங்கத்தின் நான்காவது நாளில் ‘கொரியாவில் அதிகரிக்கும் தமிழ் ஆர்வம்’ குறித்து கொரியத் தமிழ்ச் சங்கத்தின் ஆளுமைப்பிரிவின் இணைச்செயலர் முனைவர் செ.ஆரோக்கியராஜ் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது… நான் வேலைக்காக கொரியா வந்து 8 ஆண்டுகள் ஆகின்றன. பேராசிரியராக பணிபுரிந்தாலும், கொரியாவின் கிராமப்புறங்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டினேன். எனது கொரியா பேராசிரியரும் எனக்கு உதவிசெய்தார். அப்போதுதான் கொரியா மொழியில்…