Browsing: Tamil

மாடர்ன் உடையில் கலக்கும் தேவயானி

தமிழ் சினிமாவில் 90களில் அழகு நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை தேவயானி. பாவாடை தாவணி அல்லது புடவையில் அழகாக நிறைய படங்கள் நடித்திருப்பார், அப்படி மாடர்ன் உடை அணிந்தாலும் பார்ப்பவர்களுக்கு எந்த ஒரு முக சுழிப்பும் இல்லாமல் அணிவார். விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்த தேவயானி ஒரு கட்டத்தில் மார்க்கெட் குறைய சின்னத்திரை பக்கம் சென்றார். கோலங்கள் என்ற தொடர் அவரை பெரிய அளவில் மக்களிடம் போய் சேர்த்தது. பின் திருமணம், குழந்தைகள் என…

புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவழிப்பு செயற்பாடுகளை கண்டித்து ஜெனிவாவில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் இடம்பெற்று வரும் நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் சுவிஸ் தமிழ் செயற்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை…

கிளிக்குப் பச்சை பூசுவதா? 1 – C.N.ANNADURAI

தமிழின் ஓசை நயமும் பொருள் நயமும் – தமிழ் மொழியின் இனிமை. தம்பி, எங்கிருந்து வருகிறீர்? என்று கேட்டேன், நமது துணைப் பொதுச் செயலாளர் நடராசன் அவர்களை, சூலூரிலிருந்து வருகிறேன் என்றார் அவர். நான் வேடிக்கையாக அவரைக் கேட்டேன்; “அதென்னய்யா அப்படிச் சொல்கிறீர்? நீர் மட்டுந்தானா, சூலூரிலிருந்து வருகிறீர் – நாமெல்லோருமே சூலூரிலிருந்துதானே வந்திருக்கிறோம்” என்றேன் – கருவில் உருவாகி வந்த காதையல்லவா? அதனால் அவரும் உடனிருந்தோரும் சிரித்தனர். அது சரி, சூலூரிலிருந்து கிளம்புகிறோம், பிறகு நாம்…

செப்.1 முதல் பள்ளிகளை திறக்க திட்டம் -தமிழக அரசு

தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க உத்தேசிகப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 50 சதவீத மாணவர்களுடன் மேற்கண்ட பள்ளி மாணவர்களுக்கான வகுப்பை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் மருத்துவ கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் வரும் 16ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோயாளிகளுக்கு கருணை அளிக்கும் கருணை கிழங்கு

மனிதன் உண்ணும் உணவு வகைகளில் தாவரங்களிலிருந்து கிடைக்கும் காய், கனிகள் போன்று கிழங்குகளும் ஒரு உணவாக இருக்கிறது. பூமிக்கு அடியில் விளைவதால் இவை இன்னும் அதிக உயிர் சத்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நமது நாட்டில் பரவலாக அதிகம் உண்ணப்படும் கிழங்கு வகையான கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். கருணை கிழங்கு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும், உடல் பிரச்சனைகளைத் தடுக்கவும் இது உதவும். . 1. நீரிழிவு நோய்க்கு கருணை கிழங்கு கருணை கிழங்கின் நன்மைகள்…

தமிழன் தேவைகளை அவன் கேட்காமலே செய்தவர் கலைஞர்

கோயம்பேடு பேருந்து நிலையம் வேண்டுமென்று எந்த சென்னை குடிமகனும் கொடி பிடிக்கவில்லை, மெட்ரோ ரயில் வேண்டுமென்று யாரும் கனவு காணவில்லை, வள்ளுவருக்கு கோட்டமும், சிலையும் வேண்டுமென்று எந்த தமிழ் ஆர்வலரும், குடிமகனும் குரல் கொடுக்கவில்லை, கணினி என்பதைக் கேள்விபடுவதற்கு முன்னதாகவே டைடல் பார்க் வேண்டுமென எந்த மாணவர் சங்கமும் கொடி பிடிக்கவில்லை. தங்களது கிராம சாலைகள் சிமென்ட்டில் அமைக்கப்படும் என எந்த கிராமவாசியும் கனவு கூட கண்டதில்லை, பள்ளியில் படிக்க தம்பிள்ளைகளை இலவசமாகவே பேருந்தில் அரசு அனுப்பும்…

முதலில் தமிழை சரியா பேசுடா தமிழா…

வீடு – வூடுவிடு – வுடுவை – வெய்சுவர் – சொவ்ரு, செவ்ருநகர் – நவ்ரு, ஒத்துஇழு -இசுஅனுப்பு- அம்ச்சுஎழு – எய்ன்ச்சுவந்து கொண்டு – வந்துகினுஎன்ன – இன்னாவயிறு – வவுருமுன்னே – முன்னாடிபின்னே – பின்னாடிபேசு- Speak பண்ணுகழுவு – வாஷ் பண்ணுவெயில் – வெய்லு, வெய்ய ஓரெழுத்து, ஈரெழுத்து சொற்களைக்கூட பிழையின்றி பேச மாட்டான் தமிழன். தாய் மொழியை சிதைத்து அலங்கோலமாக பேசுவது மிகவும் கேவலமாக உள்ளது . உலகில் தமிழர்களைப்போல தாய்…

ஆனந்த் செல்வகேசரி என்ற தமிழர் சிட்டிக்குழுமத்தின் தலைவராகிறார்

அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக குழுமங்களில் ஒன்றாக அறியப்படும் சிட்டிக்குழுமத்தின் நுகர்வோர் வங்கி பிரிவின் தலைமை செயல் அதிகாரியாக மதுரையை சேர்ந்த ஆனந்த் செல்வகேசரி என்ற தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் மட்டுமின்றி உலக அரங்கில் தமிழர்களின் கை ஏற்கனவே பலமுறை ஓங்கி ஒலித்துள்ளது. உலக அரங்கில் சாதித்து காட்டிய பல தமிழர்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். சென்னையில் பிறந்து பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்த இந்திரா நூயி முதல் சென்னையில் பிறந்து கூகுள் நிறுவனத்தின்…

செம்மொழி பட்டியலில் தமிழ் சேர்ப்பு; மு.க ஸ்டாலின் வரவேற்பு

செம்மொழி பட்டியலில் தமிழ் இணைக்கப்பட்டதற்கு வரவேற்பு அளிப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய தொல்லியல் துறையின் பட்டயப் படிப்பிற்கான தகுதியில் தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டது. கடும் கண்டனத்திற்குப் பிறகு தமிழ் இணைக்கப்பட்டிருக்கிறது. வரவேற்கிறேன்! மொழிகளே, பன்முகத்தன்மையின் பண்பாட்டு அடித்தளங்கள்! இனியும் மாற்றாந்தாய் மனப்போக்கை கடைப்பிடிக்க வேண்டாம்.” என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனத்தில்…

புதிர் போட்டியில் புறக்கணிக்கப்படும் தமிழ்! கனிமொழி கடும் கண்டனம்

புதிர் போட்டியில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதற்காக, மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் கனிமொழி எம்.பி. மகாத்மா காந்தியடிகளின் 152ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் இணையவழி புதிர் போட்டியில், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி மற்றுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி., ‘’தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனம் நடத்தும் ஒரு புதிர் போட்டியில், தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குறியது’’என்று தெரிவித்துள்ளார். மேலும், ‘’தமிழோ,ஆங்கிலமோ தெரியாமல் தாய்மொழி மட்டுமே…

தமிழ் முழக்கம் சாகுல்அமீது இறுதி சடங்கில் கதறிய சீமான்

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ் தேசிய அரசியலில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வந்தவருமான தமிழ் முழக்கம் சாகுல் அமீது கொரானா தொற்று காரணமாக செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி., நாம் தமிழர் கட்சியினருக்கு மட்டுமன்றி கட்சி பேதமின்றி தமிழ் தேசிய அரசியல் தளத்தில் இயங்கிவரும் பல்வேறு தரப்பினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போதைய மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சாகுல் அமீது…

1 2 3