Browsing: tamilnadu

பரம்பரை மருத்துவர்களுக்கு ஓய்வூதிய உயர்வு- முதலமைச்சர் ஆணை

பரம்பரை மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்வு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை வழங்கினார் தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்து கொண்ட பரம்பரை சித்த மருத்துவர்களில் 60 வயதிற்கு மேற்பட்ட மருத்துவர்களின் வறுமை நிலையினைகளைய உதவும் வகையில் மாதம் ரூ.500 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. இது பின்னர் 60 வயதிற்கு மேற்பட்ட பதிவுபெற்றுள்ள பரம்பரை ஆயுர்வேதா, யுனானி, மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. பின்னர் இந்த ஓய்வூதியமானது டிசம்பர் 2011-ம் ஆண்டு ரூ.1000-ஆக…

தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்க மு.க ஸ்டாலின் கோரிக்கை!

இலங்கை கற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் விசைப் படகுகளையும் விரைவில் விடுவிக்க வலியறுத்தி வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையினரால் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதுதவிர ஏற்கனவே 95 படகுகளும் 11 மீனவர்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் அண்மையில் 12 தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய நடவடிக்கை…

ஈழத் தமிழர்களை நெகிழ வைத்த தமிழக முதல்வர்

தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்காக முதன் முறையாக அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய மறுவாழ்வு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ள தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்டராலினுக்கு இலங்கை தமிழர்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர். அனைத்து அடிப்படை வசதிகளுடன் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்ராலின் தமிழ் நாட்டு சட்டமன்ற கூட்டத்தில் அறிவித்திருந்தார். இதன்பிரகாரம் திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூரில் 17.17 கோடி ரூபா மதிப்பில்…

சாதனை படைத்த தமிழ் சிறுமிக்கு குவியும் பாராட்டு!

இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, 4 மணி நேரத்தில் 195 நாடுகளின் தேசிய கீதங்களை பாடி உலக சாதனை படைத்துள்ளார். திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர்களான ஹேமந்த்-மோகனப்பிரியா தம்பதியரின் மூத்த மகளான சுபிக்‌ஷா என்பவரே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். எட்டாம் வகுப்பில் கல்விகற்கும் சுபிக்‌ஷாவுக்கு, சிறு பிராயம் முதலே அனைத்து நாடுகளின் மொழிகளையும் கற்கவேண்டும் என்ற தணியாத ஆர்வம் இருந்து வந்தது. இந்நிலையில், பெற்றோரின் ஒத்துழைப்புடன் வலையொலி (யூடி­யூப்) மூலம் உலக நாடுகளின்…

ஜூன் 5 ஆம் தேதி திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ரிலீஸ் – அண்ணாமலை அறிவிப்பு

ஜூன் 5ஆம் தேதி திமுக அமைச்சர்களின் ஊழல் குறித்த ஆதாரங்களுடன் பட்டியல் வெளியிடப்படும் என்றும் 15ம் தேதி ஆளுநரிடம் திமுக ஊழல் குறித்த 700 பக்க புத்தகம் வழங்கப்பட உள்ளதாகவும் பாஜக தலைவ் அண்ணாமலை தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் எட்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அவர் கலந்துகொண்டு பேசினார்… “தாராபுரத்தை சேர்ந்த தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருக்கும் கயல்விழி செல்வராஜ் ஒரு பொம்மை போல செயல்படுகிறார். ஆக்கப்பூர்வமான…

என்னதான் இருந்தாலும் ஜெயலலிதாவைப் போல வருமா?

ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது யாரும் மிரட்டல் அரசியல் செய்ய முடிந்ததில்லை. மிரட்டப்படுவோருக்கு பாதுகாப்பு தரவேண்டியது ஒரு அரசின் கடமை. அந்த வகையில் நடிகர் சூரியாவை ஆளாளுக்கு மிரட்டுகிறார்கள். ஒரு கட்சியின் முக்கிய தலைவரே மிரட்டுகிறார். அவருடைய படத்தை திரையிட திரையரங்குகள் பயப்படுகின்றன. 5 கோடி ரூபாய் கேட்டு ஒரு சாதிச்சங்கம் மிரட்டிக் கெடு விதிக்கிறது. இதெல்லாம் ஜெயலலிதா ஆட்சியில் சாத்தியமே இல்லை. திமுக அரசாங்கம் அமைந்தால்தான் இத்தகைய மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் அதிகமாகின்றன. ராமதாஸ் ஒரு மண்ணும் இல்லை…

பிரிட்டனின் ஆட்சி முறையை மாற்ற எலிஸபெத் ராணி திட்டமா?

பிரிட்டிஷ் ராணி எலிஸபெத் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அல்லது, பொறுப்புகளை கவனிக்க இயலாத அளவுக்கு அவர் முதுமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள். உலகின் மிக நீண்டகாலம் அரசுப் பொறுப்பில் இருந்த ராணி என்ற புகழுடன் பிரிட்டனை கட்டியாண்ட இரண்டாம் எலிஸபெத், பொறுப்புகளை தனது மூத்த மகன் சார்லஸிடம் ஒப்படைக்க விரும்புவதாக தெரிகிறது. சார்லஸுக்கு பிரிட்டன் மக்களிடம் போதுமான செல்வாக்கு இல்லாத நிலையில், அவருக்கு மாற்றாக வேறு ஏதேனும் நடவடிக்கை எடுக்கவும் ராணி திட்டமிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. உலகின்…

அமைச்சர் பி.மூர்த்தியின் பெயரால் திமுக நிர்வாகியின் ‘அட்ராசிட்டிகள்’!

சொந்தக் கட்சிக்காரர்களையே அச்சுறுத்தி வாரிக் குவிக்கிறார் மாவட்ட திமுக அவைத்தலைவரான எம்ஆர்எம் பாலசுப்பிரமணியன் என்கிறார்கள். இவருடைய நடவடிக்கை மதுரை புறநகர் மாவட்ட திமுகவுக்குள் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. பலகட்சிகளில் இருந்துவிட்டு இப்போது திமுகவுக்கு வந்த இவரின் அட்டூழியம் அமைச்சர் பி.மூர்த்திக்கு தெரியுமா என்று இவர்கள் நொந்துபோய் கேட்கிறார்கள். ஏனென்றால், நான் சொல்வதைத்தான் அமைச்சர் கேட்பார் என்று எம்ஆர்எம் பாலசுப்ரமணியன் மார்தட்டுகிறாராம். காமராஜ் ஐஏஎஸ் அதிகாரியை ஒருநாள் தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்த பிறகு, அவரையே…

அன்பில் மகேஷ் ஆர்எஸ்எஸ் ஸ்லீப்பர் செல்லா?

கோவில்களுக்கு செல்லும்போது நாமெல்லாம் சாதாரணமாக உடையணிந்து செல்வோம். ஆனால், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டையை கழற்றிவிட்டு வெற்றுடம்புடன் செல்கிறார். இது நமது கலாச்சாரம் இல்லை. ஆனால், அவர் யாரை திருப்திப்படுத்த அப்படி செய்கிறார் என்று தெரியவில்லை. இதையெல்லாம் முதல்வர் தளபதியின் கவனத்துக்கு கொண்டு செல்கிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை. இந்நிலையில்தான், மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, கல்வியாளர்களும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் எதிர்ப்பு தெரிவித்த பின்னரும் இல்லம்தேடி கல்வி என்ற…

சுப்ரமணிய பாரதியார்

சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு  எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு…

செப்.1 முதல் பள்ளிகளை திறக்க திட்டம் -தமிழக அரசு

தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க உத்தேசிகப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 50 சதவீத மாணவர்களுடன் மேற்கண்ட பள்ளி மாணவர்களுக்கான வகுப்பை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் மருத்துவ கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் வரும் 16ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

1 2 3 10