Browsing: tamilnews

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ‘ஈழம்’ என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டது ஏன்?

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், அந்த படத்தின் ஒரு வசனம் இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “நீங்கள் இலங்கைக்கு செல்ல வேண்டும். அங்கு என் தம்பி அருண்மொழியை பார்த்து, அவனை என்னிடம் அழைத்து வர வேண்டும்” என குந்தவை (த்ரிஷா) வந்தியத்தேவனிடம் (கார்த்தி) கூறும் வகையில் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. இதில் ‘இலங்கை’ என்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு, இலங்கையர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் காவியத்தில் ‘ஈழ நாடு’ என்ற பெயரே இடம்பெற்றுள்ளதாகவும், இலங்கை…

பணம் கொடுக்காததால் காருக்கு தீ வைத்த நபர்!

உத்திரப்பிரதேசம், நொய்டாவில் உள்ள சதர்பூர் கிராமத்தில் கட்டுமான ஒப்பந்ததாரர், கடந்த 2 ஆண்டுகளாக நிலுவைத் தொகையான ரூ.2.68 இலட்சத்தை செலுத்தாமல் இருந்துள்ளார். இதனையடுத்து, பெட்ரோலை எடுத்து வந்த தொழிலாளி ஒருவர் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெர்சிடிஸ் கார் மீது ஊற்றி, தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இது குறித்து கட்டுமான ஒப்பந்ததாரர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இது குறித்து…

ஜெயலலிதாவை பார்ப்பது போல மக்கள் சசிகலாவைப் பார்க்கிறார்களா?

சசிகலாவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம், சிரிக்காமல் ஜோக் அடிப்பார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், ஜெயலலிதாவை பார்ப்பது போல மக்கள் தன்னை பார்ப்பதாக சசிகலா கூறுவது தவறு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்சாக்கள் பணக்காரர்களானது எப்படி? அம்பலப்படுத்தும் அமெரிக்கா

இலங்கை மக்களின் பணத்தில் ராஜபக்ச குடும்பம் தங்களை வளப்படுத்திக் கொண்டது என அமெரிக்காவின் செனட்டர் பற்றிக் லீஹி தெரிவித்துள்ளார். இரக்கமின்றி தங்கள் எதிரிகளை மௌனமாக்கியதுடன், இனப் பதற்றங்களைத் தூண்டி, நாட்டைப் பொருளாதாரச் சீர்குலைவுக்குள்ளாக்கியது எனவும் அவர் சாடியுள்ளார். பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் மற்றும் அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் துஷ்பிரயோகத்திற்குப் பின்னர், இலங்கைக்கு இன சகிப்புத்தன்மை, சமமான பொருளாதார வளர்ச்சி, மனித உரிமைகள் மற்றும் நீதி ஆகியவற்றில் அர்ப்பணிப்புள்ள அரசாங்கம் தேவை. அது அமெரிக்கக் கொள்கையின்…

சோனியா அகர்வாலுக்கு மீண்டும் திருமணமா?

நடிகை சோனியா அகர்வால் தமிழில் காதல் கொண்டேன், 7ஜி, கோவில்,புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். அவர் இயக்குனர் செல்வராகவனை காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில் சில வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். விவாகரத்துக்கு பிறகு சோனியா அகர்வால் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்து வருகிறார். நடிகை சோனியா அகர்வால் தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் அவர் இரண்டாம் திருமணம் செய்கிறாரா என கேள்வி…

பேனா மை லீக்கானதால் கோபப்பட்ட இங்கிலாந்து மன்னர்!!

வடக்கு அயர்லாந்தில் உள்ள ஹில்ஸ்பரோ கோட்டையில் பார்வையாளர் குறிப்பேட்டில் கையெழுத்திட்ட போது, பேனா மை லீக்கானதால் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கோபமடைந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. பேனா மை லீக்கானதால் எரிச்சலடைந்த மன்னர் சார்லஸ், “இதையெல்லாம் என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியாது” என கோபத்துடன் கூறியவாறு இருக்கையிலிருந்து எழுந்துச் சென்றார். பின்னர், மன்னர் சார்லஸிடம் இருந்து அவரது மனைவி கமீலா பேனாவை வாங்கி கையெழுத்திட்ட போது, அவரது விரல்களிலும் லீக் ஆன மை ஒட்டியதால், பாதுகாவலர்…

ஈழத் தமிழர்களை நெகிழ வைத்த தமிழக முதல்வர்

தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்காக முதன் முறையாக அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய மறுவாழ்வு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ள தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்டராலினுக்கு இலங்கை தமிழர்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர். அனைத்து அடிப்படை வசதிகளுடன் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்ராலின் தமிழ் நாட்டு சட்டமன்ற கூட்டத்தில் அறிவித்திருந்தார். இதன்பிரகாரம் திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூரில் 17.17 கோடி ரூபா மதிப்பில்…

புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவழிப்பு செயற்பாடுகளை கண்டித்து ஜெனிவாவில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் இடம்பெற்று வரும் நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் சுவிஸ் தமிழ் செயற்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை…

மன்னர் சார்லசின் காருக்கு முன் ஓடிவந்த நபரால் பரபரப்பு (வீடியோ)

பிரிட்டன் மன்னர் சார்லஸ் பயணிக்கும் பாதையில் திடீரென ஒருவர் நுழைந்ததால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிரிட்டன் மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து அவரது மகனான இளவரசர் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள நிலையில், மன்னர் சார்லஸ் லண்டனிலிருந்து ஸ்காட்லாந்துக்கு செல்வதற்காக விமானப்படை விமான நிலையம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்தார் . மகாராணியாரின் இறுதிச்சடங்கு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக அவர் லண்டனிலிருந்து ஸ்காட்லாந்துக்கு செல்வதற்காக தனது பாதுகாவலர்கள் சூழ பயணத்தினை மேற்கொண்டார். அப்போது திடீரென ஓடிவந்த ஒருவர், மன்னரின் காருக்கு…

இணையத்தில் ரிலீஸ் ஆகும். ஹவாலா

நண்பர்கள் இருவர் நிழல் உலக தாதாக்களாக மாற அதற்கான முயற்சியில் இறங்குகிறார்கள் இருவரும் கடுமையாக அடிதடி மற்றும் துப்பாக்கி கலாசாரத்தில் ஈடுபடுகிறார்கள். அதேசமயம் இருவருக்கும் அழகான காதலிகளும் உண்டு.  அவர்கள் தாதாக்கள் ஆனார்களா? காதலர்களாக வாழ்ந்தார்களா? என்பதை முழுநீள ஆக்சனுடன் விடை தாங்கி வரும் படம்தான்  “ஹவாலா”. இதில் சீனிவாஸ் கதாநாயகனாகவும் அமித்ராவ் இன்னொரு கதாநாயகனாகவும் நடிக்க , அமுல்யா சஹானா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும், இதில் நிழல்கள் ரவி சூரியோதயா, சீனிவாஸ் வசிஷ்டா, பிரவீன்ஷெட்டி,…