Browsing: tasmac

குடிகாரர்களிடம் கொள்ளையடிக்கும் டாஸ்மாக் – உதயமுகம் வார இதழ் கவர் ஸ்டோரி

உலகத்துலேயே வேறு எங்கும் இல்லாத கொடுமையெல்லாம் தமிழ்நாட்டில்தான் நடக்கும். தனியார் ஸ்டோர்களில்கூட எல்லாப் பொருட் களையும் எம்ஆர்பி ரேட்டிலிருந்து குறைத்து கொடுப்பார்கள். ஆனால், இங்கேதான் அரசாங்கமே நடத்துகிற மதுக்கடைகளில்கூட பாட்டில் எடுத்துத் தருவதற்கே குவார்ட்டருக்கு 5 ரூபாய் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. பில்லும் கொடுக்க மாட்டார்கள். கேட்கிற சரக்கும் கொடுக்க மாட்டார்கள். எந்த சரக்காக இருந்தாலும், அதாவது, குவார்ட்டர் 100 ரூபாயாக இருந்தாலும், 500 ரூபாயாக இருந்தாலும் 5 ரூபாய் லஞ்சம் கொடுக்கனும். அரசு விற்கும்…

3 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடல்

வங்கக்கடலில் கடந்த 21ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தீவிர புயலாக மாறி, சென்னையில் இருந்து 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் அதிகாலை அல்லது நள்ளிரவு கரையை கடக்கவிருக்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டு, பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக்குகளை மூடுவது தொடர்பாக அந்தந்த மாவட்ட…

சென்னையில் மதுபான கடைகளை திறக்க எதிர்ப்பு

தமிழகம் முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தாலும் சென்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக்கை திறக்க தடை நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், நாளை முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதியளித்துள்ளது தமிழக அரசு. மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

அலங்காநல்லூரை அலைக்கழிக்கும் மதுக்கடைகளை மூட அனைத்துக் கட்சி கோரிக்கை!

மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு, வடக்கு, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து மது வாங்குவதற்காக குடிமகன்கள் அலங்காநல்லூரை நோக்கி படையெடுக்கிறார்கள். ஊருக்குள் வெளியூர் குடிகாரர்கள் நடமாட்டம் மக்களை பீதியடையச் செய்கிறது. எனவே அலங்காநல்லூரில் மட்டும் இயங்கும் மூன்று கடைகள் நிரம்பி வழிகின்றன. இது போதாதென்று, நவீன பார் வசதியையும் உருவாக்கும் முயற்சி நடைபெறுகிறது. இவற்றை மூடி, அலங்காநல்லூர் மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று அலங்காநல்லூர் கிராம நிர்வாகிகளும், அனைத்துக் கட்சி…

அறிவாளி அமைச்சர் செல்லூர் ராஜு!

திட்டம்போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது அதை சட்டம்போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது… திருடனா பாத்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுனு அதிமுகவை தொடங்கிய எம்ஜியார் ஒரு படத்துல பாடுறமாதி சீன் வரும். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் திருட்டுப் பயல்களின் புத்தியை பாட்டா எழுதினா, அமைச்சர் செல்லூர் ராஜு, பொதுமக்களைப் போய் அந்த இடத்துல வச்சு பேசுறார். சட்டம்போட்டு மக்களைத் திருத்த முடியாதுனு சொன்னா என்னா அர்த்தமுங்க. திருந்தாத ஜென்மங்கள்னு மக்களைச் சொல்றார்னுதானே அர்த்தம். குடிப்பழக்கத்தை…

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இன்று மீண்டும் திறப்பு: இனி டோக்கன் மூலம் மது விநியோகம்: 7 நாட்களுக்கு 7 வண்ணங்களில் டோக்கன்

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்படுகிறது. ஒவ்வொரு நாட்களுக்கு ஒவ்வொரு வண்ண டோக்கன்கள் என்கிற அடிப்படையில் 7 நாட்களுக்கு 7 வண்ணங்கள் அடங்கிய டோக்கன்கள் மூலம் நாள்தோறும் மதுவிற்பனை நடைபெற உள்ளது. ஊரடங்கை தளர்த்தி அறிவித்தபோது, வருவாய் பற்றாக்குறையை காரணம் காட்டி டாஸ்மாக் கடைகளை கடந்த 7ம் தேதி தமிழக அரசு திறப்பதாக அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தின. இந்த நிலையில்…

தமிழகத்தில் மதுக்கடை மூடலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

தமிழகத்தில் மதுக்கடை மூடலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஆன்லைன் மூலம் மேல்முறையீட்டுக்கான சட்ட ரீதியான பணிகளை முடிந்த நிலையில் மேல்முறையீடு செய்யக்கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகள், எதிர்க்கட்சிகளின் கண்டனங்களையும் மீறி போலீஸ் பந்தோபஸ்துடன் கடந்த 7ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஒரே நாளில் அண்டை மாநிலங்களைவிட தமிழகம் மதுபான விற்பனையில் நேற்று சாதனையும் புரிந்தது. மதுக்கடைகளை திறக்க கூடாது என்று பொதுநல வழக்கு ஒன்றும் சென்னை…

முதலிடத்தில் தூங்கா நகரம்: தமிழகத்தில் இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.294 கோடிக்கு மதுபானம் விற்பனை…

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், நாடு முழுவதும் கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு, விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது. பல்வேறு மதுக்கடைகளில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படுவதில்லை. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் மே 7ம் தேதி ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் திறக்கப்பட்டன. 43 நாட்களுக்கு பின்னர் கடைகள் திறக்கப்பட்டதால் மது விற்பனை அமோகமாக இருந்தது. காலை 10 மணி முதல் மாலை…

மதுக்கடை வரிசையில் பெண்களை பார்த்த நடிகை டுவீட்

கொரோனா பரவலைத் தடுக்க மே 17-ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானக் கடையில் பெண்கள் வரிசையில் நிற்பதைப் பார்த்த நடிகை இங்கேயாவது 33 சதவீத இட ஒதுக்கீடு இருக்கே என்று டுவிட் செய்துள்ளார். கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது. மத்திய அரசு மே 17-ம் தேதி வரை சில தளர்வுகளுடன் பொது முடக்கத்தை நீட்டித்துள்ளது. இதில் பச்சை மண்டலங்களில் கடைகளை திறக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.…

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு தடை இல்லை: நிபந்தனைகளுடன் செயல்பட ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவி அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்று நோயின் காரணமாக பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தோற்றலானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவிலும் பரவி பல்வேறு மாநிலங்களில் அதன் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக மத்திய மாநில அரசுகள் 144 தடை…

மதுக்கடைகளை திறப்பது சாவின் ஒத்திகை – வைரமுத்து

கொரோனா ஊரடங்கினால் மூடப்பட்டு இருந்த மதுக்கடைகள் நாளைமுதல் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மதுக்கடைகள் திறக்கப்பட்டால் அது மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், இதற்கு பிரபலங்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், மதுவுக்கு எதிராக கருத்து பதிவிட்டுள்ளார். “மது என்பது அரசுக்கு வரவு; அருந்துவோருக்கு செலவு. மனைவிக்கு சக்களத்தி; மானத்தின் சத்ரு. சந்தோஷக் குத்தகை; சாவின்…

சென்னையில் டாஸ்மாக் திறக்க அனுமதி இல்லை…தமிழக அரசு அறிவிப்பு

சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் எல்லை வரை டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதியில்லை எனவும் அறிவித்துள்ளது. மேலும் 7-ம் தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர…