Browsing: temple

இந்து- முஸ்லிம்கள் இடையே வன்முறை: மற்றுமொரு இந்துக் கோவில் முற்றுகை

பிரிட்டனின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸின் ஸ்மெத்விக் நகரில் உள்ள துர்கா பவன் கோவில் முற்றுகையிடப்பட்டிருந்த நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் துபாயில் இடம்பெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய- பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து லீசெஸ்டர்ஷையர் இந்து – முஸ்லிம்கள் இடையே வன்முறை வெடித்தது. இதன் போது லீசெஸ்டர்ஷையர் பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றின் இருந்த கொடி கிழிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால்…

இனி தமிழிலும் குடமுழுக்கு நடத்த வேண்டும் – ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி!

கோவில் நிகழ்வுகள் தொடர்பான அழைப்பிதழ்களில் சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதுவோரை குறிப்பிடும் போது அதற்கு நிகராக தமிழ் திருமுறைகள் ஓதுவோரையும் குறிப்பிட வேண்டும். என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கரூரைச் சேர்ந்த ரமேஷ் என்ற இளஞ்செழியன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “கரூர் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோவில் மிகவும் புகழ்பெற்றது. 900 ஆண்டுகள் பழமையானது. கொங்கு மண்டலத்தின் பெருமையாக திகழும், இந்த…

இறைவனுக்கு ஏன் பால அபிஷேகம்?

இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் தனிபலன் உண்டு. பால் நீண்ட வாழ்வையும் தயிர், புத்திர விருத்தியையும், நெய் மோட்சத்தையும் பஞ்சகவ்யம் ஆன்ம விருத்தியையும் தரும், பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது தனிச் சிறப்பு, பசுவின் மடிகளில் ஏழுசமுத்திரங்கள் வாசஞ் செய்வதால் பால் அபிஷேகம் ஏழு சமுத்திரங்களைக் கொண்டு இறைவனை அபிஷேகம் செய்ததாகக் கருதப்படும்.

சப்தவிடங்கத் தலங்கள் எங்குள்ளன?

சப்தவிடங்கத் தலங்கள் திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ளன. ‘சப்தம்’ என்றால் ஏழு ‘டங்கம்’ என்றால் உளி, ‘வி’ என்றால் செதுக்காதது உளியால் செதுக்காத சுயம்பு முர்த்தங்கள் உள்ள தலங்கள் இவை. இந்த ஏழு தலங்களிலும் தியாக ராஜரே அருள்பாலிப்பார். அவருக்கு வெவ்வேறு பெயரும், நடனமும் உண்டு. 1. திருவாரூர் – வீதி விடங்கர்- அசபா நடனம் (மேலும் கீழுமாக ஏறியும். இறங்கியும் முன்னும் பின்னுமாகச் சென்று வந்தும் ஆடியவர்கள் மந்திரத்தை மானசீகமாக ஏற்கும் நிலையில் உள்ளம்…

திருக்கைலாயம்

சிவபெருமான் உறைவிடம் வெள்ளிமலைக் கைலாயம் என்பர். இதில் வெள்ளி மலையாக காட்சிதரும் திருக்கைலாயம் கிழக்கே ஸ்படிகமாகவும், மேற்கே மாணிக்கமாகவும் வடக்கே தங்கமாகவும், தெற்கே நீலமாகவும் இருப்பதாக ஐதீகம்.

அஷ்டபந்தனம் என்றால் என்ன?

அஷ்டபந்தன கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வது என்பது அடுத்த பிறவியை அகற்றும் தன்மையுடையது. எட்டு பொருள்களை விகிதாச்சாரப்படி கலந்து மந்திரம் ஓதி கலப்பதுதான் அஷ்டபந்தனம். அது கல்காவிப் பொடி, சுக்கான் பொடி, குங்கிலியம், செம்பஞ்சு, கொம்பரக்கு, ஜாதிலிங்கம், வெள்ளை மெழுகு, எருமை எண்ணெய் ஆகியவை ஆகும்.

தம்பதியர்களுக்குள் கருத்து வேறுபாடா? அவர்கள் வணங்க வேண்டிய தலம் எது?

சிலருக்கு திருமணம் முடிந்ததும் தம்பதியர்கள் இன்பத்தின் எல்லைக்குள் சென்று இனிமையாக வாழ்வர், சிலருக்கோ கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு, தாம்பத்திய உறவில் சிக்கல், வாக்கு வாதங்கள் மூலம் மனநிம்மதியில்லாத வாழ்க்கை அமையும். அப்படி கருத்து வேறுபாடு ஏற்பட்ட தம்பதியர் கல்யாண நவக்கிரகத்தை வழிபட்டால், வருத்தங்கள் அகலும், வாழ்க்கை வளமாகும். சிவகங்கை, மாவட்டம் கீழச்சீவல்பட்டி அருகில் உள்ள ஆவணிப்பட்டி மற்றும் காரைக்குடி அருகில் உள்ள மானகிரி மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திரு நீலக்குடி ஆகிய ஊர்களில் கல்யாண நவக்கிரகம்…

வாழ்க்கையில் விடிவுகாலம் பிறக்க……

கன்னியாகுமரி அம்மனைத் திருமணம் செய்து கொள்வதற்கு தாணுமாலையன் புறப்பட்டுச்  சென்றார். சில திருமணங்கள் இரவு நேரத்தில் நடைபெறும். சில திருமணங்கள் பகல் நேரத்தில் நடைபெறும். இந்தத் தெய்வத் திருமணம் விடிவதற்குள் முடிக்க வேண்டும் என்று நிபந்தனை. குமரி அம்மனை மணக்கச் சென்ற இறைவன் வழுக்கம்பாறை என்ற இடத்திற்கு வரும்பொழுதே கோழி கூவியது. எனவே தாணுமாலையன் சுசீந்திரத்திற்குத் திரும்பி வந்துவிட்டார். எனவே கன்னியாகுமரி அம்மன் இன்றும் குமரியாகவே இருக்கிறாள். கோழி கூவித் திருவிளையாடல் நடத்தி விடியலைத் தெரிவித்த இடம்…

திருவையாறு பெயர்க்காரணம் என்ன?

தியாகராஜர் உற்சவம் நடைபெறும் இடம் திருவையாறு. அந்த ஊருக்கு பெயர்வரக் காரணம், ஐந்து ஆறுகள் அங்கு ஓடுவது தான் வெண்ணாறு, வெட்டாறு வடவாறு, குடமுருட்டி ஆறு, காவிரி ஆறு ஆகிய ஐந்து ஆறுகளும் ஓடுவதால் “திரு ஐந்து ஆறு” என்று அழைக்கப்பட்டு “திருவையாறு” என்று வழங்கப்படுகிறது.

பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் என்ன?

காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்ற பெயர், இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே மறுபிறவி போன்றுதான்! எனவே ஒவ்வொரு நாளும் காலையில் மறுபிறவி பெறுவதை ‘சிருஷ்டி’ (படைத்தல்) என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால் விடியற் காலைப் பொழுதை ‘பிரம்ம முகூர்த்தம்’ என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதும் சுப வேளைதான். இந்நேரத்தில்…

தனது மூலப்பத்திரத்தை தேடும் மயிலை கபாலீஸ்வரர்!

சென்னையில் உள்ள மயிலை கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ, குத்தகையோ கொடுக்காமல் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்து விரோதிகளின் பட்டியலை அக்கோயிலின் நிர்வாக அதிகாரியான பரஞ்சோதி வெளியிட்டிருக்கிறார். மொத்தம் 473 பேரில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள். ஹிந்துக்கள் 471 பேரில் சில முதலியார்கள், நாடார்கள் தவிர ஆகப் பெரும்பான்மையினர் அய்யர்-அய்யங்கார்களாகவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கபாலி கோயில் சொத்துக்களைக் கொள்ளையிடும் பார்ப்பனர்களின் பட்டியல் பெரிது. வாடகை கொடுக்காத ப்ராடுகளின் பட்டியலில்…

சினிமா தியேட்டர் கோவில் போன்றது சேரன் கேள்விக்கு மக்கள் பதில்

கொரானா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடிக் கிடக்கும் நிலையில், தியேட்டர்கள் மீண்டும் திறந்தால் அதற்கான ஒத்துழைப்பை மக்கள் கொடுப்பார்களா என்று இயக்குனர் சேரன் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுகுறித்து ஆகஸ்டு 9 அன்றுட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் சேரன், “சிவாஜி, எம் ஜி ஆர் என விசில் அடித்து படம் பார்த்து ரஜினி கமல் என கட் அவுட் வைத்து, விஜய் அஜித் என பாலாபிஷேகம் செய்து படம் பார்த்த அந்த திரையரங்க பிரமாண்டம் 5 மாதங்களாக முடங்கிக்…